19
Aug
‘சிறை’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களில் தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள அனிஷ்மா அனில்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது வெளியாகவுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் மனதிற்குள் ஏற்படும் குழப்பங்கள் என கதையின் முக்கிய அங்கமாக இருக்கும் முதிர்ச்சியான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து நடிகை அனிஷ்மா அனில்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. என்னுடைய கதாபாத்திரம் தனக்குள் நிறைய எண்ணங்களையும் உணர்வுகளையும் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை எல்லாம் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு பெண் அல்ல. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதில் அழகு இருப்பதாக நான் உணர்கிறேன். குறிப்பாக, பெண்கள் பல நேரங்களில் ஒரே சமயத்தில் பல்வேறு உணர்வுகளை அனுபவிப்பார்கள்.…
