சினிமா

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஷ்ணு விஷால், " விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா - பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு…
Read More
இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, "இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம். இந்தப் படமும் அவருக்கு…
Read More
தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம்!

தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம்!

மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்: லெஜெண்ட் சரவணன் லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: "என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும். நன்றி, வணக்கம்." தி லெஜெண்ட் நியூ சரவணா…
Read More
மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!

மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது!

’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்‌ஷன் சினிமா அனுபவத்தை ரசிகர்கள் பெற இன்னும் ஒரு மாதமே உள்ளது. மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோ குடும்பம் vs பூமியை விழுங்கும் கேலக்டஸ் மோதல் ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 1960களின் ரெட்ரோ-ஃப்யூச்சரிஸ்டிக் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தப் படம், புதிய MCU Lineup-ஐ அறிமுகப்படுத்துகிறது. ரீட் ரிச்சர்ட்ஸ்/ மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் ஆக பெட்ரோ பாஸ்கல், சூ ஸ்டார்ம்/ இன்விசிபிள் வுமனாக வனேசா கிர்பி, ஜானி ஸ்டார்ம்/ ஹ்யூமன் டார்ச்சாக ஜோசப் க்வின் மற்றும் பென் கிரிம்/ தி திங் ஆக எபோன் மோஸ்-பக்ராச் ஆகியோர் நடித்துள்ளார். சரி, இவர்களின் நோக்கம் என்ன? பூமியை விழுங்கத் துடிக்கும் வலுவான சக்தியான கேலக்டஸ் (ரால்ப் இனேசன்), சக்திவாய்ந்த ஹெரால்ட் சில்வர் சர்ஃபர் (ஜூலியா கார்னர்) உடன் மோதுகிறார்.…
Read More
நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்த எபிக் கதாபாத்திரம் இன்னும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாததாக மாறி உள்ளது. 'புஷ்பா 2' திரைப்படம் ரூ. 1800 கோடி பாக்ஸ் ஆபீஸில் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது. நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி பேசும் ரசிகர்களும் கொண்டாடினர். இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புஷ்பா2' திரைப்படம், 5.1 TVR ரேட்டிங் மற்றும் 5.4 கோடி பார்வைகளைப் பெற்று, இந்த வருடத்தின் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 'ஸ்ட்ரீ 2', 'பதான்', 'அனிமல்' மற்றும் பல பிளாக் பஸ்டர் படங்களின் ரெக்கார்டையும் இது உடைத்துள்ளது. இந்த நம்பரையும் தாண்டி, படத்தின்…
Read More
டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!

டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!

இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது. எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்! வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. இந்த பயணத்தில், தனக்கென இருக்கும் இடத்தை உணர்வதும், உண்மையிலேயே யார் என்பதை கண்டுபிடிப்பதும் தான் கதையின் மையம்.…
Read More
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில், தயாரிப்பாளர்கள் ராஜா, கஸாலி, பத்திரிக்கையாளர்கள் டி எஸ் ஆர் சுபாஷ், செந்தில் வேல், 'ஜீவா டுடே' ஜீவ சகாப்தன், ' யூ டூ ப்ரூட்டஸ்' Minor, தொழிலதிபர்கள் அப்பு பாலாஜி, கமல்ஹாசன், டி. சுரேஷ், இணை தயாரிப்பாளர்கள் சித்தர் திருதணிகாசலம், கௌரி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹேமந்த் சீனிவாசன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில், கதாநாயகனும்,…
Read More
பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

பறந்து போ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்துவிட்டது. இந்த படத்தை தயாரிக்க நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா- மகன் எமோஷன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் வி.எஸ். மதி, “எனக்கு முதல் படத்தை கொடுத்த இயக்குநர் ராமுக்கும், இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி. என் முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் மகிழ்ச்சி.…
Read More
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பென்ஸ்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் விரைவில் படக்குழு அடுத்த ஷெட்யூலை தொடங்க உள்ளது. படம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பகிர்ந்து கொண்டதாவது, “சென்னை முழுவதும் பென்ஸ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஷெட்யூலில் ராகவா லாரன்ஸ் நடித்த முக்கியமான காட்சிகளை படமாக்கினோம். உண்மையிலேயே இந்த ஷெட்யூல் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. சுதன் சார், ஜெகதீஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கும், ராகவா லாரன்ஸ் சாரின் முழுமையான ஒத்துழைப்பிற்கும் நன்றி. விரைவில் எங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம். இதுமட்டுமல்லாது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகளையும் வெளியிட இருக்கிறோம்" என்றார். நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, நிவின் பாலி வில்லனாக நடிப்பது படத்தின்…
Read More
கட்ஸ் — விமர்சனம்.!

கட்ஸ் — விமர்சனம்.!

நாயகன் ரங்கராஜ் பிறக்கும் போது அவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவர் வளரும் போது அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார். சிறு வயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். மனைவி, ஒரு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியின் மரணத்திற்குப் பிறகு தன்னை தானே அழித்துக் கொண்டு வாழும் நாயகனுக்கு, அவரது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அவரது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலை செய்தது யார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை, நாயகனின் தந்தை கொலையின் பின்னணியோடு சேர்த்து சொல்வது தான் ‘கட்ஸ்’.ஒரு நேர்மையான போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன்…
Read More