நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு ‘யூத் ஐகான் விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது!

கோவை, ஐசிடி அகாடெமி நேற்று தனது ஒன்பதாவது லீடர்ஷிப் சப்மிட் 2024 விழாவை நடத்தியது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அடுத்த தலைமுறை தலைவர்களை ஊக்குவிப்பது மற்றும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த சப்மிட்டில் பல்வேறு கலந்துரையாடல்கள், வேலைக்கூடங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது.

இதில் நடிகர், இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு யூத் ஐகான் 2024 விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வழங்கி கெளரவித்தார். சமூகத்திலும், திரைத்துறையிலும் அவர் ஏற்படுத்திய நல்ல மாற்றங்களுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

விருது பெற்ற பின்பு ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, “இந்த விருதைப் பெற்றதில் எனக்குப் பெருமையாக உள்ளது. சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து உழைக்க எனக்கு இது உத்வேகம் கொடுக்கிறது. இளைஞர்கள் அவர்களது கனவுகளை அடைய உதவ வேண்டும் என்ற உந்துதலை இது வழங்குகிறது” என்றார்.

இந்த விருது அவரது முயற்சிகளை மதிப்பதோடு மட்டுமல்லாது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இளைய தலைமுறையின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை உறுதி செய்கிறது.

Related posts:

நடிகர் உதயா: அஜ்மல், யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் 3 நாயகர்களின் பிரம்மாண்ட கேங்க்ஸ்டர் திரைப்படம் 'அக்யூஸ்ட்'!

இந்தியாவில் களமிறங்கும் சீன பேட்டரி ஸ்கூட்டர் !

விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, உடனடி அவசர சிகிச்சை ? சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்த ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!

*ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!*

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' படத்தின் இசை வெளியீட்டு விழா!

தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர். !

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் !