சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது.!

சென்னை சர்வதேச திரைப்பட விழா, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து, ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் இன்று MOSFILM 100- வது ஆண்டு விழாவினை பிரமாண்டமாக நடத்தியது.

இந்த நிகழ்வு , ரஷ்யாவின் மிகச் சிறந்த திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான MOSFILM யின் வளமான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு,
3 நாள் சினிமா கொண்டாட்டத்தின் துவக்கமாகவும் அமைந்திருந்தது.

சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத் தலைவர் மேதகு. வலேரி கோட்சேவ் மற்றும் சென்னையில் உள்ள ரஷ்ய மாளிகையின் துணைத் தூதரும் இயக்குநருமான திரு. அலெக்சாண்டர் டோடோனோவ் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் இருவருமே இருநாட்டு கலாச்சார ஒத்துழைப்பிற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

மேலும், உலகளாவிய திரைப்படத் துறையில் ரஷ்ய சினிமாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

முதல் நாள் காட்சிகள்.

ரெண்ட் எ ஹவுஸ் வித் ஆல் தி இன்கன்வீனியன்ஸஸ் (2016) என்ற நகைச்சுவை திரைப்படத்துடன் துவங்கியது, இந்த நகைச்சுவை கதை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, அதைத் தொடர்ந்து அன்னா கரேனினா: வ்ரோன்ஸ்கியின் கதை (2017), இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படும் காவிய காதலான இப்படம் பார்வையாளர்களை வியத்தகு மறுபரிசீலனைக்கு அழைத்துச் சென்றது.

ரஷ்ய சினிமாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பை பார்வையாளர்களுக்கு இந்நிகழ்வு வழங்கியது.மாஸ்ஃபில்மின் சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களை திருவிழாவில் திரையிட உள்ளோம். திரையிடல்கள், ஆங்கில வசனங்களை உள்ளடக்கியவை என்பது குறிப்படத்தகுந்தது.

சென்னையின் திரைப்பட ஆர்வலர்கள் சர்வதேச திரைப்படங்களைப் பாராட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது.

மாஸ்ஃபில்ம் 100 வது கொண்டாட்ட விழா செப்டம்பர் 29 ஆம் தேதி வரை ஏ.வி.எம் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.தி வானிஷ்ட் எம்பயர் (2007), தி ஸ்டார் (2002), வார்டு எண் 6 (2009), மற்றும் டிசிஷன்: லிக்விடேஷன் (2018) போன்ற படங்களை திரையிட உள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட விழா மற்றும் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகியவற்றின் இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இந்நிகழ்வு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

Related posts:

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ!

‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

நான் கலைகளின் காதலன் என்கிறார் தனி இசை கலைஞர் ஆர்.எம்.நீரன்!

நேசிப்பாயா--விமர்சனம் !

சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !

MSME-க்கு 5,000 கோடி ரூபாய் இடர்பாட்டு நிதி -மத்திய அரசு திட்டம்!

விறுவிறுப்பான அரசியல் ஆக்ஷன் கதையான 'சக்தி திருமகன் ' திரைப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!