சினிமா

நடிகர் சுனில், விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி படத்தில் இணைந்துள்ளார்.!

நடிகர் சுனில், விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி படத்தில் இணைந்துள்ளார்.!

புகழ்பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில், பிரபல நடிகர் சுனில் இணைந்ததை ரஃப் நோட் புரொடக்ஷன் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் திரைப்படத் துறைகளிலும் தனது பலதரப்பட்ட திறமைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் சுனில், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணி புரிந்த அனுபவத்தையும், மயக்கும் திரை ஆளுமையையும் இந்தத் திரைப்படத்தின் மூலம் கொண்டு வருகிறார். ‘மரியாதா ராமண்ணா’, ‘அந்தலா ரமுடு’, ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்களில் நினைவில் நிற்கும் நகைச்சுவை மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள சுனில், இந்த திரைப்படத்தின் மதிப்பை பெருக்குவதுடன், மற்ற மாநில ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் உறுதி செய்கிறது. இந்தத் திரைப்படத்தில், சுனில் தனது இயல்பான வசீகரத்தன்மையுடன், எதிர்பாராத உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த வேடம், அவரது நடிப்பு பயணத்தில் ஒரு புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தி,…
Read More
’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட விமர்சனம்!

’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட விமர்சனம்!

தமிழ்நாட்டில் எப்போதாவது, எங்காவது கிறிஸ்துவர்கள் இலவச பைபிளோ அல்லது துண்டு பிரசுரமோ கொடுக்கும் போது இந்துக்கள் அதை கண்டிக்கும் காணொளியோ, செய்தியோ வருவது வாடிக்கைதான்.. ! இச்சூழலில் இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இசக்கி கார்வண்ணன் என்ற டைரக்டர் எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இணைந்து வாழும் இந்து & கிறிஸ்துவர்களிடையே மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் வகையில் இப்படத்தை வழங்கியுள்ளார். கதை என்னவென்றால் மதமாற்றம் நிகழும் சம்பவம் அந்த பகுதியில் ஜரூராக நடக்கிறது. இதனால் அடிக்கடி இரு சமூகத்தினருக்கிடையே மோதல் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் மர்மான சம்பவம் நடக்கிறது. அதுபற்றி விசாரிக்க அப்பகுதியில் போலீஸ் முகாமிடுகிறது. பலத்த காவல் இருந்தபோதும் மீண்டும் கொலை சம்பவம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கொலைகள்.இரண்டு…
Read More
‘எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

‘எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியீடு B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குயிலி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 'எழுச்சித் தமிழர்' தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'குயிலி' திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம்…
Read More
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற 'அக்யூஸ்ட்' இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், "அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர்…
Read More
‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர் ருத்ராவை நடிகர் விஷ்ணு விஷால் அறிமுகப்படுத்துகிறார்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்ஸ், ஹியூமர், எமோஷனல் என அனைத்தும் இந்தப் படத்தில் உள்ளது.படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்கு அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள். நிஜத்திலும் ருத்ரா ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு முன்பு பணிபுரிந்தார். மேலும், FIR, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளையும்…
Read More
விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் எதிர்பார்ப்புக்குரிய தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கு திறமையான நடிகர் பரத்தை வரவேற்பதில் ரஃப் நோட் புரொடக்‌ஷன் மகிழ்ச்சி அடைகிறது. 'காதல்', 'பட்டியல்', 'காளிதாஸ்' போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் கவனம் பெற்ற பரத், இந்தப் படத்தில் ஒரு உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர் நடிக்கும் கதாபாத்திரம், கதையின் நாகர்வுக்கு மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கதாபாத்திரத்தின் தீவிரம், ஆழ்மன குழப்பங்கள் மற்றும் உளவியல் சார்ந்த நுணுக்கமான மாற்றங்களை மையமாகக் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் பரத்தின் இன்னொரு பக்கத்தை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தனது அழுத்தமான கதாபாத்திர தேர்வும், திரையில் தோன்றும் விதத்தின் மூலமும் தெலுங்கு ரசிகர்களிடமும் பரிச்சயமானவராக இருக்கும் பரத்துடன் கைகோர்ப்பதன் மூலம், இந்த படம் ஒரு பான் தென்இந்தியா பட உணர்வை வழங்கி, அதன் இருமொழித் தன்மையை…
Read More
வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

மாவீரன் "காடுவெட்டி" குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா - இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம். நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய,…
Read More
கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி!

கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி!

திரைப்படங்களுக்கானகேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளர். கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி தெரிவித்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: எட்டு சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதமாக கேளிக்கை வரி பாதியாக குறைப்பு. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு. தமிழக அரசு கேளிக்கை வரியை குறைத்திருக்கிறது, தமிழ் திரைப்பட உலகின் வலியை குறைத்திருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Read More
ஜின் தி பெட்–  விமர்சனம்.!

ஜின் தி பெட்– விமர்சனம்.!

மலேசியாவில் இசைக்குழுவில் பாடகராக இருக்கும் முகேன் ராவ் அங்கு ஒப்பந்தம் முடிந்ததும் சென்னைக்கு திரும்ப வேண்டியதாகிறது. முன்னதாக மலேசியாவில் ஜின் என்ற பேய் வகையை சார்ந்த ஒரு உருவத்தை பெட்டியில் அடைத்து  கடையில் வைத்திருக்க அதை வீட்டில் வளர்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்று எண்ணி தன் வீட்டிற்கு வாங்கி வருகிறார். வீட்டில் ஜின்னை, நாய்க் குட்டி போல் பிஸ்கட், பால் வைத்து வளர்க்கிறார். முகேன் ராவிற்கு காதல், சந்தோஷம் எல்லாம் சேர்ந்தாலும் குடும்பத்தினருக்கு அவ்வப்போது சோகங்கள் ஏற்படுகிறது. ஜின்னால்தான் இந்த சோகம் ஏற்படுகிறது என்று குடும்பத்தினர் கூறினாலும் அதை முகேன் ராவ் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதல் மனைவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையும் முகேன் ராவ், வீட்டில் வளர்த்த ஜின்னை கோபத்தில் தெருவில் தூக்கி வீசுகிறார். அடுத்து நடப்பது என்ன என்பதற்கு விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ். படத்தின் தொடக்க காட்சிகளில்…
Read More
*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*!

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*!

இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார். ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு: பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், "இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்தையும் நான்…
Read More