09
Jul
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து வெற்றி படமாக்கிய படக்குழுவினருக்கு நன்றி”. எடிட்டர் மதி, “என்னுடைய முதல் படம் இது.…
