23
Sep
குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை உன்னி முகுந்தன் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைகின்றன. பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம். விமர்சன ரீதியாகவும் வர்த்த ரீதியாகவும் புகழ்பெற்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பனோரமா ஸ்டுடியோஸ் திகழ்கிறது. ‘ஓம்காரா’, ‘ஸ்பெஷல் 26’, ‘பியார் கா பஞ்ச்நாமா’, ‘ரெய்டு’, ‘ஷைத்தான்’ மற்றும் பிளாக்பஸ்டர் ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரி்த்துள்ளது. இதுவரை…
