28
Sep
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம். இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதுடன், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு அரசிடம் TFAPA கோரிக்கைகள் அடங்கிய மனு: தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசின் ஆதரவையும் தலையீட்டையும் கோரி, TFAPA சார்பில் மாண்புமிகு அமைச்சரிடம் விரிவான கோரிக்கை மனு வழங்கப்பட்டது.சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை மாண்புமிகு…
