20
Oct
இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'டியூட்' உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் கீர்த்தீஸ்வரன் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் 'டியூட்' திரைப்படம் அக்டோபர் 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு இயக்குநர் படத்தை உருவாக்குவது மட்டுமல்லாது அந்தப் படத்தை சுற்றிலும் எந்தளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம் என்பதிலும் படத்தின் வெற்றி அடங்கும். அந்த வகையில், படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான 'ஊரும் பிளட்டும்...' முதல் டிரெய்லர் வரை படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மிகச்சரியாக கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படம் வெளியாவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கீர்த்தீஸ்வரன். இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது,…
