கட்ஸ் — விமர்சனம்.!

நாயகன் ரங்கராஜ் பிறக்கும் போது அவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவர் வளரும் போது அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார். சிறு வயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். மனைவி, ஒரு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியின் மரணத்திற்குப் பிறகு தன்னை தானே அழித்துக் கொண்டு வாழும் நாயகனுக்கு, அவரது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அவரது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலை செய்தது யார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை, நாயகனின் தந்தை கொலையின் பின்னணியோடு சேர்த்து சொல்வது தான் ‘கட்ஸ்’.ஒரு நேர்மையான போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் கைது செய்த ஒரே மணி நேரத்தில் தனது அதிகாரத்தை வைத்து வில்லன் வெளியே வருகிறான். அப்படி வெளியே வந்த வில்லன் இன்ஸ்பெக்டர் ரங்கராஜை பழிவாங்குவதும். தனது மகளை காப்பாற்ற ரங்கராஜ் எடுக்கும் முயற்சிகளே கட்ஸ் படத்தின் கதை

விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களில், அப்பா மற்றும் மகன் என முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரங்கராஜ், காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து ஏரியாவிலும் தனது கடுமையான முயற்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.கதையோ , திரைக்கதையோ எதுவுமே புதிது இல்லை, அதை கையாண்டிருக்கும் விதமும் புதிதில்லை. ஆனால் எல்லா நடிகர்களுக்கும் உணர்வுப்பூர்வமாக நடிப்பதற்கான களத்தை இயக்குநர் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது. எமோஷனலான காட்சிகளில் நடிகர்கள் எதார்த்தமாக நடிக்க வைக்க இயக்குநர் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார் என்றாலும் இந்த காட்சிகள் கோர்வையாக இல்லாமல் படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருவதே சுவாரஸ்யமிழக்க செய்கின்றன. ஒளிப்பதிவாளர் மனோஜ் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார்.

காதல் காட்சிகளில் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.மனைவியின் சடலம் முன்பு கதறி அழுகிறார். அப்பா கதாபாத்திரத்தில் பெரிய மீசையோடும், அருவாளோடும் வலம் வந்து சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டுபவர், . ஒட்டு மொத்தமாக படம் முழுவதுமே தனது நடிப்பு மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனுஷன் நடித்திருக்கிறார்.அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியின் நடிப்பிலும் குறையில்லை.மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் வயது முதிர்வும், அவர் முடியாமல் நடித்ததும் தெளிவாகத் தெரிகிறது.

குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அறந்தாங்கி நிஷா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்களத்திற்கு ஏற்றவாறும், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் பணியாற்றியிருக்கிறார்.இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் படத்தொகுப்பாளர் ரஞ்சித் தொகுத்திருந்தாலும், திரைக்கதையை சற்று வேகமாக பயணிக்க வைத்திருக்கலாம்.நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவின் பல்வேறு காலக்கட்டங்களில் நாம் பார்த்த வழக்கமான பழிவாங்கும் கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் தான் என்றாலும், சில மாற்றங்களோடும், பல திருப்பங்களோடும் விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.முதல் படத்திலேயே இயக்குநர், நாயகன் என்று இரட்டை குதிரை சவாரி செய்திருக்கும் ரங்கராஜ், ஒரு நடிகராக தனது திறமையை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்து, பல கெட்டப்புகளில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார். நடிகராக மெனக்கெட்டது போல் திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இயக்குநராகவும் ஸ்கோர் செய்திருப்பார்.

Related posts:

மூட்டு தேய்மானம் # ஸ்டெம்செல் சிகிச்சை # டாஷ் மருத்துவமனை # சாதனை #

விஜய் மில்டனின் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் இணைந்தார் நடிகர் பரத் – சக்திவாய்ந்த நட்சத்திர கூட்டணியின் புதிய பரிமாணம்!

சச்சின் டெண்டுல்கர், '800' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்!

தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!

'ஜெய் ஹனுமான்' சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

டிடி நெக்ஸ்ட் லெவல் --விமர்சனம்!

’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!