25
Aug
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் 'அக்யூஸ்ட்' படக்குழு மரியாதை செலுத்தினர்ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ திரையரங்குகளில் கடந்த 25 நாட்களாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி நடை போட்டு வருகிறது. வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. 'அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களின் உற்சாக பாராட்டுகளோடு படக்குழுவினர் கேக் வெட்டி 'அக்யூஸ்ட்’ வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். 'அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றிருந்த நிலையில் அதன் வெற்றி…
