’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட விமர்சனம்!

மிழ்நாட்டில் எப்போதாவது, எங்காவது கிறிஸ்துவர்கள் இலவச பைபிளோ அல்லது துண்டு பிரசுரமோ கொடுக்கும் போது இந்துக்கள் அதை கண்டிக்கும் காணொளியோ, செய்தியோ வருவது வாடிக்கைதான்.. ! இச்சூழலில் இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இசக்கி கார்வண்ணன் என்ற டைரக்டர் எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இணைந்து வாழும் இந்து & கிறிஸ்துவர்களிடையே மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் வகையில் இப்படத்தை வழங்கியுள்ளார்.

கதை என்னவென்றால் மதமாற்றம் நிகழும் சம்பவம் அந்த பகுதியில் ஜரூராக நடக்கிறது. இதனால் அடிக்கடி இரு சமூகத்தினருக்கிடையே மோதல் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் மர்மான சம்பவம் நடக்கிறது. அதுபற்றி விசாரிக்க அப்பகுதியில் போலீஸ் முகாமிடுகிறது. பலத்த காவல் இருந்தபோதும் மீண்டும் கொலை சம்பவம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கொலைகள்.இரண்டு ஆத்மாக்கள் செய்வது தெரிகிறது. அது ஏன் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

நாயகனாக இருப்பதைக் காட்டிலும் கதைநாயகனாக இருக்கவேண்டுமென நினைத்து நடித்திருக்கிறார் விமல்.அவருடைய எதார்த்த நடிப்பு அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவி நன்றாக இருக்கிறார்.கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்.ஆனால் பழி வாங்கும் ஆத்மாக்களாக விமல், சாயாதேவி நடித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆத்மாக்களை சினிமாவில் முதன்முறையாக பார்க்க முடிகிறது. சமையல் செய்கிறது, காய் கறி வாங்கி வருகிறது. இதுபோன்ற காட்சியெல்லாம் கொஞ்சம் காமெடியாகவே தெரிகிறது.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், காவலராக வரும் காதல் சுகுமார்,முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கலையரசன், கூல் சுரேஷ் ஆகியோர், கிறித்துவமத பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கர், சாமியாராக நடித்திருக்கும் அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் பாத்திரங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்றிருக்கும் மைனா சுகுமார் இந்தப்படத்தில் நடிகராகக் களமிறங்கியிருக்கிறார்.அதுவும் வில்லன் வேடம்.அதிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

தீபன்சக்ரவர்த்தி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாழ்வில்லை.

மைனா சுகுமார் ஒளிப்பதிவில் கிராமத்து அழகுகள் கண்களில் நிறைகின்றன.கழுகுப் பார்வைக் காட்சிகளில் கதை சொல்லவும் செய்திருக்கிறார்.

இந்துக்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்படுவது குறித்து கதை விவாதிக்கிறது. இந்தளவுக்கு வெளிப்படையாக எந்த படத்திலும் மதமாற்றம் பற்றியும், மதமோதல் குறித்தும் பேசியதில்லை, மீடியாக்கள், பத்திரிகைகளில் கூட இப்படி விவாதிக்க அனுமதி கிடையாது. ஆனால் மதமாற்றம், மதமோதல் பற்றி இந்த திரைப்படத்தில் பகிரங்கமாக விவாதிக்க தணிக்கை குழு எப்படி அனுமதி கொடுத்தது என்பது பெரிய வியப்பு. அதேபோன்ற காட்சிகளை இயக்குனர் எந்த வெட்டும் இல்லாமல் வெளிக் கொண்டு வந்திருப்பது அவரது புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம்.

ஆனால் மதமாற்றம் செய்ய வரும் எம்.எஸ். பாஸ்கரை விமல் நேரடியாக விரட்டுவதும் மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது. ஒரு கட்டத்தில் பாதிரியார் எம்.எஸ் . பாஸ்கர் இந்துவாக மாறியதுபோல் குங்குமம் வைத்து ஆசி செய்வதெல் லாம் மத நல்லிணக்கமா? மதமாற்ற அறிகுறியா என்பது புரியவில்லை. ஒரு வழியாக எல்லா சாமியும்.ஒன்று என்று மெசேஜ் சொல்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

 

Related posts:

நடிகர்கள் விமல், சூரி 'படவா' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

பூரி கனெக்ட்ஸின் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!

குரோனா வைரஸைத் தடுக்கும் ஆயுர் வேத மருந்து கண்டுபிடிப்பு !

நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!

சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்!

ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!