06
Dec
நாயகன் கார்த்தீஸ்வரன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார். போலீஸிடம் சிக்கிக் கொண்ட கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? , அவர் செய்த மோசடிகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை. படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் கதாநாயகனுக்கு தேவையான கவர்ச்சிகரமான உடலமைப்பு இல்லையென்றாலும் அவர் செய்யும் செய்யும் மோசடிகள் அனைத்தும், ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றினாலும், அவற்றுக்கு பொருத்தமாக இல்லாதது தான் சற்று வருத்தமளிக்கிறது. இருந்தாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என…
