சினிமா

ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு !

ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு !

மலையாளத் திரைப்பட இசையின் மகத்தான இசை மேதையாக விளங்கிய G. Devarajan அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள முதல் “ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026”, புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக் கலைஞர் T. V. Gopalakrishnan அவர்களுக்கு, தேவராஜன் மாஸ்டரின் அன்புத் துணைவியார் திருமதி Leelamani Devarajan அவர்களால் வழங்கப்படுகிறது. 1927 முதல் 2006 வரை வாழ்ந்த தேவராஜன் மாஸ்டர், மலையாளத் திரைப்பட இசை வரலாற்றின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கவிஞர் Vayalar Ramavarma அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்கள், மலையாளத் திரைப்பட இசையின் பொற்காலத்தை உருவாக்கியவை என்றும் கருதப்படுகின்றன. அவரது இசைப் பங்களிப்பிற்காக, கேரள அரசின் உயரிய திரைப்பட விருதான J. C. Daniel Award உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் Gangai Amaran அவர்கள் கலந்து கொள்கிறார்கள். தேவராஜன் மாஸ்டர் தனது இறுதிக்காலத்தில் உருவாக்கிய அரிய இசை…
Read More
*சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!*

*சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின் முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடல் ‘வேலும் மயிலும்’!*

சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும்  அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான 'தாய் கிழவி' திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, 'வேலும் மயிலும்' வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். 'தாய் கிழவி' மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து…
Read More
சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு !

சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் வெளியீட்டின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் 'சைலண்ட் இன்ஃபுளூயன்சர்' இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் இளையராஜா, "தயாரிப்பாளர் பாரதி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" என்றார். எடிட்டர் ராம் கோபி, " வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜா மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்தாலே அந்தப் பாடல் ஹிட். இதில் அவர் நடித்தும் இருக்கிறார். நிச்சயம் இந்தப் பாடல் ஹிட் தான்". பாடலாசிரியர் ஜெயந்தி, " இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லோருக்கும் பிடித்த பின்பு தான் பாடல் இறுதியானது. அதேபோல, உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்". கலை இயக்குநர் சம்பத் திலக், "வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி". வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கிரியேட்டிவ் ஹெட், அசோக் அண்ணாமலை, "இயக்குநர் ராஜாவின் ஐடியா இது. சிறப்பாக எடுத்துள்ளார். எல்லோருக்கும் நிச்சயம்…
Read More
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'லவ் பைட்' 'டாடா' புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, 'தாய் கிழவி' புகழ் முத்துக்குமார், ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் நகைச்சுவை நிரம்பிய சர்வைவல் திரில்லர் ஆக உருவாகும் 'லவ் பைட், பெரும் வரவேற்பு பெரும் ப்ரோமோ'முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'லவ் பைட்'…
Read More

*சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!*

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா ரூரல் ஆக்‌ஷன் கதையாக உருவாகி வரும் 'ரவுடி ஜனார்த்தனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிறந்தநாள் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மழையில் முழுவதுமாக நனைந்து கையில் துப்பாக்கி பிடித்தபடி தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷூம் உள்ளார். இந்த ஜோடிகளுக்கு இடையேயான காதல் மற்றும் படத்தின் ஆக்‌ஷனை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் பெரிய திரையில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்ற பார்வையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Read More
*டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கும்,ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!*

*டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கும்,ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!*

*டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்'சைக்கிள் கேப்'!* மியூசிக்கல் காதல் ஜானர் கதைகளை தங்கள் உணர்வுகளுடன் பொருத்தி பார்க்கும் ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். ’சிந்து பைரவி’, ’முகவரி’, ’துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற காலத்தால் அழியாத தமிழ் திரைப்படங்களிலிருந்து, உலகளவில் பாராட்டப்பட்ட ’லா லா லேண்ட்’ மற்றும் பாலிவுட்டில் வெளியான மியூசிக்கல் காதல் திரைப்படங்களான ’ஆஷிகி2’,’சயாரா’ வரை இந்தத் திரைப்படங்களின் பாடல்கள், உணர்வுகள் மற்றும் உறவுகள் என ரசிகர்களுக்கு பல மறக்க முடியாத நினைவுகளை இவை உருவாக்கியுள்ளன. இதே உணர்வை இன்றைய தலைமுறையை கவரும் நவீன இசையுடன் முக்கோண காதல் கதையாக கொண்டு வரும் திரைப்படமே இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள ’சைக்கிள் கேப்’. இலக்கியம், இதழியல் மற்றும் உலகத் திரைப்படங்களால் செதுக்கப்பட்ட கதைசொல்லியான…
Read More
*சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு !*

*சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு !*

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'காவிய காதல்' திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும் இடம்பெற்றிருப்பது படத்தின் நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறது. வண்ணமயமான மற்றும் வசீகரமான காட்சிகள் உற்சாகமான காதல்…
Read More
*நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!*

*நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!*

விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும்  திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வென்றுள்ள விருது முக்கிய மைல்கல் எனவும் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்தது. தயாரிப்பாளர் கிதேஷ்…
Read More
*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!*

*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!*

நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்! இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். வழக்கத்திற்கு…
Read More
பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ முதல் ஆல்பம் – லோகோ & தலைப்பு வெளியீடு! எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும். இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகிறது. கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில், டின்சா எடிட்டிங்கில் காட்சிகள் சீரான ஓட்டத்துடன் அழகாக நகர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான காட்சியமைப்புகள்,…
Read More