டாக்ஸி ஓட்டுநரான குணசேகரன் (கிஷோர்) வேலையை இழந்ததால், சொந்தமாக கார் வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார். ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (வாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அதே கட்சியின் முதல்வரின் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட ஆட்களை அனுப்புகிறார். அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன. இந்த சூழலில் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்ததாக நினைத்து, போலீஸ் அதிகாரி முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்) லாக்கப்பில் வைத்து தாக்க அந்த இளைஞர் இறந்து விடுகிறார்.ஆனால், அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன் தப்பிக்கப் பார்க்கிறார். அதற்காக அப்பாவியான குணசேகரனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள்.

அதிலிருந்து தனது காதலியின் அண்ணனான குணசேகரனை டெலிவரி பாய் அன்பு எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.  அன்பு என்கிற கதாபாத்திரமாக வரும் டிடிஎப் வாசன் பில்டப் இல்லாமல் அறிமுகம் ஆகிறார். அப்போது அவர் கூறும் மெசேஜ் அவரை பின்தொடர்பவர்களுக்கு கனெக்ட் ஆவதால் அவரது ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள். முதல் பாதிவரை வாசன் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு கிஷார்தான் அதிக காட்சிகளில் தோன்றுகிறார். முகபாவனைகளில் பெரிதாக நடிப்பை காட்டவில்லை என்றாலும் சண்டைக்காட்சிகளில் நம்பும்படி நடித்துள்ளார். குறிப்பாக, தன்னை பின்தொடர்பவர்களுக்காக கிளைமேக்சில் பைக் ரைடு ஸ்டண்ட் செய்துள்ளார் வாசன்.மற்றபடி நடிக்க திணறுவது தெரிகிறது. கூத்துப்பட்டறையில போய் நடிப்பைக் கத்துக்கங்க வாசன். கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கால் உடைந்த நிலையில் தாங்கி தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என பிரமாதப்படுதுகிறார்

ஆனால், அவர் போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் எல்லாம் ஏற்கனவே வந்த படங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன. மேலும் இரண்டாம் பாதி முழுவதும் கிஷோர் தாக்கப்படுவதை காட்டுவது கொஞ்சம் தொய்வாக உணர வைக்கிறது. நரேன் முதல்வராக மிரட்டுகிறார், ஜான் விஜய் ஒன்றிரண்டு இடங்களில் வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார். போஸ் வெங்கட்டும், அபிராமியும் தங்கள் பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்என்றாலும் படத்தில் பல லாஜிக் மீறல்கள் உள்ளதை இயக்குநர் சரி செய்திருக்கலாம். மதுரையில் லாக்அப் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? வாசன் சாதாரண டெலிவரி பாயாகத்தான் அறிமுகமாகிறார்.
ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் காரிலேயே பயணிக்கிறார். அது ஏன் , எப்படி என்பதை விளக்கவில்லை. ஹரிஷ் போன் செய்யாமலேயே போனில் பேசுகிறார். அது அப்பட்டமாக கேமராவில் தெரிகிறது. இதுபோல ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். ஒரு நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும் மேக்கிங்கில் சொதப்பல்கள்.தேர்ந்த நடிகர்களின் நடிப்பே படத்தை காப்பாற்றுகிறது. முதல் பாடல் அருமை. பின்னணி இசை ஓகே. படம் முடிந்த பின் லாக்அப் சித்ரவதையால் இறந்தவர்களை காட்டிய இயக்குநரை பாராட்டலாம். டிடிஎப் வாசனுக்கு இப்படம் நல்ல அறிமுகம்தான்.

வேலையை இழந்ததால், சொந்தமாக கார் வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார். ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (வாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அதே கட்சியின் முதல்வரின் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட ஆட்களை அனுப்புகிறார். அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன. இந்த சூழலில் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்ததாக நினைத்து, போலீஸ் அதிகாரி முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்) லாக்கப்பில் வைத்து தாக்க அந்த இளைஞர் இறந்து விடுகிறார்.ஆனால், அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன் தப்பிக்கப் பார்க்கிறார். அதற்காக அப்பாவியான குணசேகரனை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சேர்ந்து பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள்.

அதிலிருந்து தனது காதலியின் அண்ணனான குணசேகரனை டெலிவரி பாய் அன்பு எப்படி காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.அன்பு என்கிற கதாபாத்திரமாக வரும் டிடிஎப் வாசன் பில்டப் இல்லாமல் அறிமுகம் ஆகிறார். அப்போது அவர் கூறும் மெசேஜ் அவரை பின்தொடர்பவர்களுக்கு கனெக்ட் ஆவதால் அவரது ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள். முதல் பாதிவரை வாசன் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு கிஷார்தான் அதிக காட்சிகளில் தோன்றுகிறார். முகபாவனைகளில் பெரிதாக நடிப்பை காட்டவில்லை என்றாலும் சண்டைக்காட்சிகளில் நம்பும்படி நடித்துள்ளார். குறிப்பாக, தன்னை பின்தொடர்பவர்களுக்காக கிளைமேக்சில் பைக் ரைடு ஸ்டண்ட் செய்துள்ளார் வாசன்.மற்றபடி நடிக்க   திணறுவது தெரிகிறது. கூத்துப்பட்டறையில போய் நடிப்பைக் கத்துக்கங்க வாசன். கிஷோர்தான் முழுப்படத்தையும் தாங்குகிறார். கால் உடைந்த நிலையில் தாங்கி தாங்கி நடப்பதில் தொடங்கி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் வசனங்களை எதார்த்தமாக பேசுவது என பிரமாதப்படுதுகிறார்

ஆனால், அவர் போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகள் எல்லாம் ஏற்கனவே வந்த படங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன. மேலும் இரண்டாம் பாதி முழுவதும் கிஷோர் தாக்கப்படுவதை காட்டுவது கொஞ்சம் தொய்வாக உணர வைக்கிறது. நரேன் முதல்வராக மிரட்டுகிறார், ஜான் விஜய் ஒன்றிரண்டு இடங்களில் வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்து விடுகிறார்.

ஹரிஷ் பேரடி கொடூர வில்ல முகத்தை காட்டி மிரட்டுகிறார். போஸ் வெங்கட்டும், அபிராமியும் தங்கள் பங்குக்கு படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்என்றாலும் படத்தில் பல லாஜிக் மீறல்கள் உள்ளதை இயக்குநர் சரி செய்திருக்கலாம். மதுரையில் லாக்அப் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக மாற்ற முயற்சிக்க வேண்டும்? வாசன் சாதாரண டெலிவரி பாயாகத்தான் அறிமுகமாகிறார்.
ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் காரிலேயே பயணிக்கிறார். அது ஏன் , எப்படி என்பதை விளக்கவில்லை. ஹரிஷ் போன் செய்யாமலேயே போனில் பேசுகிறார். அது அப்பட்டமாக கேமராவில் தெரிகிறது. இதுபோல ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். ஒரு நல்ல கதையை கையில் எடுத்திருந்தாலும் மேக்கிங்கில் சொதப்பல்கள்.தேர்ந்த நடிகர்களின் நடிப்பே படத்தை காப்பாற்றுகிறது. முதல் பாடல் அருமை. பின்னணி இசை ஓகே. படம் முடிந்த பின் லாக்அப் சித்ரவதையால் இறந்தவர்களை காட்டிய இயக்குநரை பாராட்டலாம். டிடிஎப் வாசனுக்கு இப்படம் நல்ல அறிமுகம்தான்.

Related posts:

போர்ட்டர் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை பெறுவதற்கும் தடையற்ற போக்குவரத்துக்கும் இன்டர்சிட்டி கூரியர் சேவையை தொடங்குகிறது!

டாக்டர் ஐசரி கே. கணேஷின் பிறந்தநாள் விழா மற்றும் ’வேல்ஸ் மியூசிக்’ அறிமுக விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்!

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் 'அநீதி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கோழிப்பண்ணை செல்லதுரை -- விமர்சனம்.!

பம்பர்--விமர்சனம் !

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!

எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?