சினிமா

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் ‘பிரமயுகம்’!

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் ‘பிரமயுகம்’!

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான 'பிரமயுகம்' (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 அன்று அகாடமி அருங்காட்சியகத்தில் ஜனவரி 10 - பிப்ரவரி 12 வரையிலும் நடைபெறும் நிகழ்வில் திரையிடப்படும். ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய 'பிரமயுகம்' திரைப்படம் கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலங்களின் பயம், சக்தி மற்றும் மனித பலவீனம் பற்றிய கதையாகும். கருப்பு & வெள்ளையில் (Black & White) வெளியான இந்தத் திரைப்படம் அதன் ஆளுமைத்திறன், கதைசொல்லல் ஆகியவற்றிற்காகப் பாராட்டப்பட்டது. ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் கொடுமோன் போட்டி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் நடிகர் மம்முட்டி. அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு,…
Read More
“வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஐந்து நாள் விழா நடத்துகின்றனர்”

“வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஐந்து நாள் விழா நடத்துகின்றனர்”

.தமிழ் திரை உலக வரலாற்றில் மறக்க முடியாத  இயக்குநர் பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சி தொடர்பியல் துறை மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை - பண்பாட்டு ஆய்வகம் இணைந்து, நவம்பர் 7 முதல் 11 ஆம் தேதி வரை அவரது படைப்புகளை போற்றும் வகையில்  பெருவிழா நடத்துகிறது. இந்த விழாவில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் அமீர், இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரேகா, மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இவ்விழா, பாரதிராஜா அவர்களின் படைப்பாற்றல், சமூக உணர்வு மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் அளித்த மாற்றங்களை கொண்டாடும் பெரும் திரை விழாவாக அமையும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார். விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன…
Read More
சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன்,  பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி,…
Read More
‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘காந்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. கலை இயக்குநர் ராமலிங்கம், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செல்வமணிக்கு நன்றி. தமிழில் தொடர்ச்சியாக நான் பீரியட் படங்கள்தான் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குநருடைய ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்து ஆச்சரியமடைந்து அவருடன் வேலை செய்ய ஆர்வமாக இருந்தேன். சினிமாவுக்குள் சினிமாவை பீரியட் கதையாக காட்டியிருப்பதுதான் ‘காந்தா. சவாலாக இல்லாமல் மிகுந்த ஈடுபாடோடு இந்தப் படத்தில் வேலை செய்தேன். சினிமாவை காதலிக்கும் இயக்குநர் செல்வமணியிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்…
Read More
டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் ‘தி டிரெய்னர்’ – ‘காவலன்’ செயலியால் ஈர்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர்!

டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் ‘தி டிரெய்னர்’ – ‘காவலன்’ செயலியால் ஈர்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர்!

திரைப்பட ஆர்வலர்களிடையே த்ரில்லர் படங்களுக்கான வரவேற்பு எப்போதும் குறைவதில்லை. இந்த த்ரில்லர் படங்களுக்கு விறுவிறுப்பான திரைக்கதையும் திறமையான நடிகர்களின் நடிப்பும் அதிக ஆர்வம் சேர்க்கிறது. அந்த வகையில், டிரான்ஸ்இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ் நீலா தயாரிப்பில் பி. வேல்மாணிக்கம் இயக்கத்தில் ஹீரோவாக ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடித்த 'தி டிரெய்னர்' திரைப்படம் த்ரில்லர் அக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. பிரின்ஸ் சால்வின் இளம்வயது  ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படம் வெளிவரும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் 'லீ' என்ற நாயும் படம் முழுக்க முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. காவல்துறை அதிகாரியாக நடிகர் ஷ்யாம் நடித்திருக்கிறார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு காவல் துறை உருவாக்கிய ‘காவலன்’ செயலியிலிருந்து உத்வேகம் பெற்று சமூகப் பொறுப்புள்ள படமாக இது உருவாகியுள்ளது. அக்குபஞ்சர் மருத்துவராக ஜூனியர் எம்…
Read More
செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 இன் தொடக்க விழாவில் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டது!

செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 இன் தொடக்க விழாவில் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டது!

இந்திய விமானப்படையின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் வகையில், கார்கில் போரின் போது நடத்தப்பட்ட உலகின் மிக உயரமான விமான நடவடிக்கையின் (Air operation) கதையைச் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸின் இந்தத் தொடர். கார்கில் போரில் இந்திய விமானப்படையின் முக்கிய பங்கை எடுத்து சொல்லும் வகையில் நெட்ஃபிலிக்ஸில் வரவிருக்கும் தொடரான ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இருக்கிறது. புது தில்லியில் முதன்முதலில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 (SIM-25) இல் வெளியிட்டபோது இந்தியாவின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ஓனி சென் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர். புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பணியாற்றும் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப்…
Read More
‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!

‘லோகா சாப்டர்1: சந்திரா’ திரைப்படம் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் ஐந்து மொழிகளில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது!

மலையாள சினிமாவில் ரெக்கார்ட் பிரேக்கிங் வெற்றி பெற்ற 'லோகா சாப்டர்1: சந்திரா' திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பதை ஜியோஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தத் திரைப்ப்டம் மலையாள சினிமாவின் பிரம்மாண்ட கதை சொல்லல் முறையை மறுவரையறை செய்தது. மேலும், மலையாள சினிமா ஒன்று உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என்ற வரலாற்று சாதனையையும் இந்தத் திரைப்படம் படைத்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி மற்றும் உலகளவில் கவனம் ஈர்த்தது மட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டில் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. டொமினிக் அருண் இயக்கி எழுதிய இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சந்திராவாக மாறுபட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார். அவருடன் நஸ்லென், அஞ்சு குரியன், சந்து குமார் மற்றும் சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் துல்கர்…
Read More
நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, 'பிக்பாஸ்' பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், 'சில்மிஷம்' சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம்…
Read More
நிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!

நிக் மற்றும் ஜூடியின் அடுத்த அட்வென்சர் கதையான ’ஜூடோபியா 2’ படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகிறது!

  வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸின் ’ஜூடோபியா 2’ நவம்பர் 28 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. புதிய காவல்துறை அதிகாரிகளான ஜூடி ஹாப்ஸ் (ஜின்னிஃபர் குட்வின் குரல்) மற்றும் நிக் வைல்ட் (ஜேசன் பேட்மேனின் குரல்) ஆகியோர் 2016 ஆம் ஆண்டு அகாடமி விருது வென்ற ’ஜூடோபியா’வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வல் சாகச கதையான ‘ஜூடோபியா 2’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை இன்னும் ஒரு மாதத்தில் பெரிய திரையில் பார்க்கலாம். இருவரும் கேரி டி'ஸ்னேக் (கே ஹுய் குவானின் குரல்) உடன் இணைகிறார்கள். இந்தப் படத்தில், கேரி டி'ஸ்னேக் ஜூடோபியாவிற்கு வந்து விலங்கு உலகத்தை தலைகீழாக மாற்றுகிறார். அப்போது ஜூடி மற்றும் நிக் ஒரு பெரிய மர்மத்தின் திருப்பத்தில் தங்களைக் காண்கிறார்கள். இதை முறியடிக்க, அவர்கள் நகரத்தின் எதிர்பாராத புதிய பகுதிகளுக்கு ரகசியமாகச் செல்ல வேண்டும். அங்கு அவர்களின் பார்ட்னர்ஷிப்பும் சோதனைக்குள்ளாகிறது. படத்தில்…
Read More
“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

டான் டிராக்டன்பெர்க்கின் 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்' திரைப்படம் இங்கிலாந்தில் முதன் முதலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பார்வையாளர்களும் விமர்சகர்களும் படம் குறித்து தங்கள் உற்சாகத்தையும் நேர்மறை விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புகழ்பெற்ற இந்த ஃபிரான்சைஸின் சமீபத்திய வரவான இந்தப் படத்தில் எமோஷன், நகைச்சுவை மற்றும் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்துள்ளது என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'ப்ரே' (Prey) திரைப்படத்தின் மூலம் இந்தத் தொடருக்கு புத்துயிர் அளித்த டான் டிராக்டன்பெர்க், பிரிடேட்டர் பிரபஞ்சத்தின் புதிய சினிமா பார்வையை வழங்கியதற்காக மீண்டும் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். விமர்சகர்கள் இந்த படத்தை, "பிரிடேட்டர் நம்பிக்கைகளை சிறந்த முறையில், விரிவாக எடுத்துரைக்கும் பொழுதுபோக்கு அறிவியல் புனைகதை சாகசம்" என்று பாராட்டுகின்றனர். புகழ்பெற்ற வேற்றுகிரக வேட்டைக்காரர்களான Yautja- வின் கதையை விறுவிறுப்பாக சொல்லியதன் மூலம் பேட்லேண்ட்ஸ் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துள்ளது. நடிகர்கள் டிமிட்ரியஸ் சுஸ்டெர்- கோலோமடாங்கி மற்றும் எல்லி ஆகியோருக்கு…
Read More