சினிமா

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 'ப்ரண்ட்ஸ்'…
Read More
இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,  பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன்,…
Read More
‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்!

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் வரலாற்றை பதிவு செய்யும் பெட்டகம் என ப. சிதம்பரம் புகழாரம் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்' (Little India and the Singapore Indian Community: Through the Ages) நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார். சென்னையில் உள்ள தாகூர் அரங்கில் (தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி) நவம்பர் 15 (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ப. சிதம்பரம், "சிங்கப்பூர் தமிழர்களுக்கு 200 ஆண்டு கால வரலாறு உண்டு. இரு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். அதில் தமிழர்கள் நிறைய இருக்கிறார்கள். சிங்கப்பூர் அலுவல் மொழியாக தமிழ் இருப்பதால், சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களில் தமிழர்கள் தான் தலையாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, பெருமை. அங்குள்ள லிட்டில்…
Read More

 தெலுங்கு மற்றும் மலையாளத் திரைத்துறையின் சென்சேஷனல் முன்னணி நடிகைகளுடன் நடிகர் ஏகன் இணைகிறார்!

புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவின் விஷன் சினிமா ஹவுஸ், தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. நம்பகத்தன்மை, உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் புதிய திறமையாளர்களை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக விஷன் சினிமா ஹவுஸ் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது. டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இருவரும் இளம் திறமையாளர்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கி தருவதற்கு பெயர் பெற்றவர்கள். ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற ‘ஜோ’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தது விஷன் சினிமா ஹவுஸ். தரமான கதை மற்றும் சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்ட அந்தப் படம் திரையரங்குகளில் 52 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன் மற்றும்…
Read More
நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் ‘ரெளடி & கோ”- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!

நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் ‘ரெளடி & கோ”- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!

கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது 'ரெளடி & கோ' திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது. முன்பு சித்தார்த் நடித்த ஆக்‌ஷன் கதையான 'டக்கர்' படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை ரொமாண்டிக் காமெடி கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை 'ரெளடி & கோ' அழைத்து செல்ல இருக்கிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இந்தக் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும் உத்திரவாதம் அளிக்கிறது. படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பகிர்ந்து…
Read More
‘கிணறு’ (‘The Well’): மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்!

‘கிணறு’ (‘The Well’): மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்!

6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள 'கிணறு' குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 வெளியாகிறது.செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு பிரபலங்கள் பங்கேற்பு. திறமைவாய்ந்த இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனம் 'புர்கா' மற்றும் 'லைன்மேன்' உள்ளிட்ட பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து 'கிணறு' திரைப்படத்தை தயாரித்துள்ளது. சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரிப்பில் ஹரிகுமரன் இயக்கியுள்ள 'கிணறு' குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி ஆறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற செலிப்ரிட்டி பிரிமியர் காட்சியில் 30 ஆசிரம குழந்தைகளோடு திரைப்பிரபலங்கள் பங்கேற்று படத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பெகாசஸ் திரைப்பட விழா 2024, அக்கலேட் உலகளாவிய திரைப்படப் போட்டி, இண்டிஃபெஸ்ட் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட விழாக்களில் சிறந்த படம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்திற்கான விருதுகளை…
Read More
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ‘சிக்மா’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!

 தென்னிந்திய சினிமாவில் தரமான தயாரிப்புகளுக்கும் உலகளவில் பார்வையாளர்கள் மத்தியில் படங்களை கொண்டு போய் சேர்க்கும் உத்திக்கும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ். இந்நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பான ஆக்‌ஷன் அட்வென்ச்சர் காமெடி திரைப்படமான ’சிக்மா’ 65 நாட்களுக்கான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை சுபாஷ்கரனின்  லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது . நான்கு மாதங்கள் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் 95% ஷெட்யூல் நிறைவடைந்து உள்ளது . சமூக விதிமுறைகளை மீறி லட்சியத்துடன் தன் இலக்குகளைத் தொடரும்  அச்சமற்ற ஒருவனின் கதையைச் சொல்வதுதான் ‘சிக்மா’ திரைப்படம். இந்த திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். நடிகர் சந்தீப் கிஷனை இந்தத் திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கலாம். மொழி எல்லைகள் கடந்து ரசிகர்கள் மத்தியில் பான் இந்திய ஸ்டாராக இதன் மூலம் மாற இருக்கிறார் சந்தீப். அவருடன் ஃபரியா அப்துல்லா,…
Read More
ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்!

ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின் பெருமைமிகு தருணம்!

நவம்பர் 6, 2025 அன்று டைரக்டர்ஸ் நிறுவனம் (IOD இந்தியா) ஏற்பாடு செய்த 2025 லண்டன் உலகளாவிய பெருநிறுவன ஆளுகை மற்றும் நிலைத்தன்மை மாநாட்டில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நமது வேந்தர் டாக்டர் ரெஜீனா ஜேப்பியார் முரளி சிறப்பு விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்து கொண்டார். உலகம் முழுவதிலுமிருந்து வந்த புகழ்பெற்ற கல்வி மற்றும் வணிக தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். புதுமை, நிலைத்தன்மை மற்றும் கல்வியில் தலைமைத்துவம் குறித்த தனது ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலக அரங்கில் ஜேப்பியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கல்வித்துறைக்கு இது பெருமைமிகு மைல்கல் தருணமாக அமைந்தது
Read More
கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

கிஷோர் – TTF வாசன் இணைந்து மிரட்டும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

'IPL (இந்தியன் பீனல் லா)' திரைப்படம் நவம்பர் 28ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் - TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'IPL (இந்தியன் பீனல் லா)' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 'IPL -இந்தியன் பீனல் லா' திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார். இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும்…
Read More
கிறிஸ்டினா கதிர்வேலன் –விமர்சனம் !

கிறிஸ்டினா கதிர்வேலன் –விமர்சனம் !

ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் ஃபேக்டரி சார்பில் பிரபாகர் ஸ்தபதி தயாரிக்க, கவுசிக் , பிரதிபா , அருள் சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு நடிப்பில், அலெக்ஸ் பாண்டியன் இயக்கி இருக்கும் படம் கிறிஸ்டினா கதிர்வேலன்.   கதிர்வேலன் என்ற இளைஞன் (கௌஷிக்) கிறிஸ்டினா (பிரதிபா) என்ற பெண்ணை ஒருகோவில் திருவிழாவில் பார்த்து, அவள் மேல் காதல் கொள்கிறான் . அவளும் அவனை கவனிக்கிறாள். வெளிநாட்டு வேலைக்குப் போவதற்கான ஏற்பாடுகளில் இருக்கும் கதிர்வேலன், கிறிஸ்டினா ஒரு கல்லூரியில் படிப்பதை அறிந்து, வெளிநாடு போகும் எண்ணத்தைக் கைவிட்டு, அவளது கல்லூரியில் சேர்ந்து அவளது வகுப்புக்கே போகிறான். அவளும் அவனிடம் பேசுகிறாள். அவன் காதலிப்பதும் அவளுக்குத் தெரிகிறது. அவள் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனும் மாணவியும் காதலிக்க, சாதி வேறுபாடு காரணமாக அவர்களது பெற்றோர்கள் கல்யாணத்துக்கு மறுக்க, அவர்கள் குடும்பங்களுக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு…
Read More