14
Mar
நாயகி தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி தான் காதலித்த நாயகன் கலையரசனை திருமணம் செய்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புகிறார்கள். ஊர் வழக்கப்படி, காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கிறார். குலதெய்வத்தை வணங்கச் சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாக்காத பிரச்சனை ஒன்றை எதிர்கொள்கிறார். அது என்ன ? என்பதை சமூகத்தில் காலங்காலமாக நடக்கும், நடந்து கொண்டிருக்கும் கொடூர சம்பவத்தின் வலியாகவும், வேதனையாகவும் சொல்வதே ‘கொலைச்சேவல்வசனம் பேசாத கதாபாத்திரம் என்றாலும், அந்த வேடத்தின் வெறித்தனத்தை தன் முகத்திலும், நடிப்பிலும் வெளிக்காட்டியிருக்கிறார் கஜராஜ்.விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் மண் சார்ந்த…
