மாமல்லபுரம் மாசிமக திருவிழா..குவிந்த இருளர் பழங்குடியின மக்கள்..!

மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரி உற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் சார்பில், ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு மாசி மகத்தை முன்னிட்டு நேற்று காலை தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தனர். பின்னர், கடலில் புனித நீராட்டினர். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராடினார்கள்..

இதேபோல் இருளர் இனமக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கினர். இதையடுத்து, இருளர்கள் நேற்று அதிகாலை எழுந்து கடலில் புனித நீராடிவிட்டு மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, கன்னியம்மனிடம் குறிகேட்டு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், திருமண நிச்சயதார்த்தம், காது குத்துதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளை செய்து வழிபட்டனர்.

பவுர்ணமி நாளில் கடலில் நீராடுவதால் வருடத்தின் 365 நாட்களும் ஸ்ரீகாசி, ராமேஷ்வரம் சென்று நீராடி வந்த பலன் கிடைக்கும். பெருமாளே கடலில் இறங்கி நீராடும் மாசி மக நன்னாளில் பெருமாள் குளித்த கடலில் நீராடினால் நன்மை உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி வழிபாடு நடத்தினர். இதேபோல் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் கடற்கரையிலும் நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் கல்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு கோயில்களில் உள்ள சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளினர். இந்த தீர்த்தவாரி உற்சவத்தைக் காண சுற்று வட்டாரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

மங்களகரமான நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீட்டிலேயே விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் தங்களது 7 ஜென்மம் பாவம் தீரும் என்பது ஐதீகம். அது போல் நீங்கள் சிவன் பார்வதி முருகனைத் தவிர பெருமாளையும் வழிபடலாம். மாசி மகம் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும் குடவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகம் நாளன்று இருளர் இன மக்கள் கடற்கரையில் ஒன்று கூடி குடில்கள் அமைத்து மூன்று நாட்கள் தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுகின்றனர்ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.

இந்நிலையில், மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர். மேலும், இன்று அதிகாலை கடற்கறையில் மணலில் ஏழு படிகள் கொண்ட கோயில் அமைத்து கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வழிபட்டனர். மேலும், குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதற்காக கன்னியம்மனிடம் அருள்வாக்கு பெற்று நிச்சயம் செய்தனர். இவர்களுக்கு அடுத்த ஆண்டு மாசிமக நாளில் கடற்கரையில் திருமணம் நடைபெறும். கடந்த ஆண்டு இவ்வாறு நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

மேற்கண்ட பாரம்பரிய வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பல ஆயிரக்கணக்கான இருளர் இன மக்கள் குடும்பத்தினருடன் கடற்கரையில் திரண்டிருந்ததால், கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் பெருந்திரளாகக் காணப்பட்டது.. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தற்காலிக கழிப்பறை மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடற்கரை பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts:

பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தில் 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் ?

‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு -

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !

'கூரன் 'திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்: மேனகா காந்தி வேண்டுகோள்!

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம்!

ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது...

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!