22
Sep
நாடு முழுவதும் 13,000 BSNL தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்! ஊரகங்களில் உள்ள இந்த பெரும்பான்மை தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் BSNL நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என இதற்கு விளக்கமளித்துள்ளது. கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவினை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. BSNL நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் BSNL கோரிக்கை வைத்துள்ளது. பொதுத்துறை தொலைத்…
