சினிமா

எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்! புதிய கண்டுபிடிப்பு !!!

எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்! புதிய கண்டுபிடிப்பு !!!

எந்த மாசும் இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிக்க எடுத்து கொண்ட முயற்சியை டி.என்.ஏ.வை அழித்தல். முத்துகிருஷ்ணன் மற்றும் லயன் இந்தியா ஆராய்ச்சி பிரைவேட் லிமிடெட் கோபிநாத் இருவரும் சேர்ந்து நிருபித்தனர். இதுகுறித்து இருவரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அழிக்க எடுத்து கொண்ட முயற்சியை பற்றி கூறுகிறோம். உலகத்தில் எல்லாரும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறோம் . இது எல்லா இடங்களிலும் உள்ளது. சுமார் 6 . 3 பில்லியன் மெட்ரிக் டன் தோராயமாக பிளாஸ்டிக் கழிவுகள் , 1 . 8 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் உலகெங்கிலும் குவிந்து மனிதன், நிலம் , நீர் , விலங்குகள் , கடல்வாழ் உயிரினங்கள் இதனுடைய நச்சு தன்மையால் பாதிப்பு அடைகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க முதலில் பிளாஸ்டிக்கின் டிஎன்ஏ வை அழித்து , மிகவும் எதிர்பார்த்த புதுமையான சூத்திரத்தை உருவாக்கி எம்பிஜி - 6…
Read More

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் ? ஏழு லட்சம் மனுக்கள் தேக்கம் ?

அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்தில், ஏழு லட்சம் மனுக்கள், அதிகாரிகள் முடிவுக்காக காத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 2018 நவம்பர், 3ல் முடிந்தது.இதில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தொழில்நுட்ப அனுமதி வழங்க வேண்டியது, நகர் மற்றும் ஊரமைப்பு துறையின் பணி.இதன்பின், தொழில்நுட்ப அனுமதி அடிப்படையில், வளர்ச்சி கட்டணங்களை வசூலித்து, வரன்முறை உத்தரவை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். தொழில்நுட்ப அனுமதி வழங்குவதில், ஆரம்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. கள ஆய்வுக்கு செல்லும் நிலையில் உள்ள அலுவலர்களுக்கே, இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது.இருப்பினும், வரன்முறை மனுக்கள் மீதான முடிவுகளை எடுப்பதில், டி.டி.சி.பி., அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், தனி மனைகள், உட்பிரிவு மனைகள், லே - அவுட்கள் என, மொத்தம், 7.97 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.விண்ணப்ப பதிவு கட்டணமாக,…
Read More
விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி

விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி

விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், மூன்று முக்கிய விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தம், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை, அதானி குழுமம் சமீபத்தில் பெற்றது. இந்நிலையில், ஆமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களையும், தனியார் மூலம் பராமரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Read More

வாகனங்களில் உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் ! மத்திய அரசு திட்டம் !!

வாகனங்களில் முக்கியமான விஷயங்கள் பல காணப்பட்டாலும், மிக முக்கியமானதாக நம்பர் பிளேட் இருக்கின்றன. அது, ஒவ்வொரு வாகனத்திலும் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பயன்பாட்டிற்கு வரும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் சேஸிஸ் எண்ணை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேக பதிவெண்களைப் பெறுகின்றன. இதனை, மாவட்டம் வாரியாக செயல்படும் ஆர்டிஓ அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. இவை மற்ற வாகனங்களுடன் ஒத்துப் போவதில்லை. மோட்டார் வாகனங்களுக்கு பதிவெண் வழங்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், மிக முக்கியமாக வாகனங்களை இனங் காண்பதற்காகவே இம்முறை கையாளப்படுகின்றது. இந்த எண்கள் அசாதாரமானதாக காணப்படலாம். ஆனால், அதில் பல்வேறு நுணுக்கங்கள் கையாளப்பட்டு வருகின்றது. இருப்பினும், வாகன பதிவெண் விவகாரத்தில் பல முறைகேடுகள் நிகழ்வதாக, புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. அதிலும் முக்கியமாக, போலி பதிவெண்தான் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஒரு வாகனத்தின் பதிவெண்ணைப் பயன்படுத்தி, வெறொரு வாகனத்தைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நாட்டில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதனை…
Read More
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை?மத்திய அரசு தீவிரம் !

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை?மத்திய அரசு தீவிரம் !

உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. இதுதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வைக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை பல மடங்கு உயர்த்துவதும் ஒன்றாகும். தண்டனைகள் கடுமையாக இல்லாததன் காரணமாகவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை என மத்திய அரசு கருதுகிறது. எனவே அபராத தொகையை கடுமையாக்கினால், அவர்கள் மாறுவார்கள் எனவும் மத்திய அரசு நம்புகிறது. இதன் காரணமாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல…
Read More

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய திட்டங்கள் !

ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது மத்திய அரசு!  ஆட்டோமொபைல் துறையை சரிவிலிருந்து மீட்பதற்கான புதிய திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று அறிவித்துள்ளார். வாகன விற்பனை கடும் சரிவு கடந்த ஜனவரி மாதம் முதல் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி வெகுவாக குறைந்து வருகின்றது. கார் மற்றும் பைக் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதையடுத்து, இந்த துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் பறி போக துவங்கியுள்ளன. பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. புதிய விதிகளால் சுணக்கம் மத்திய அரசின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள், ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை ஆட்டோமொபைல் துறையை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாக கருத்துக்கள் மேலோங்கின. இதில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. பொருளாதார மந்த நிலை ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த…
Read More

தமிழ்நாட்டில், 46% பேர் தங்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள்

இந்திய இதய ஆய்வு [India Heart Study (I.H.S)], தங்களது ஆய்வில் தமிழ்நாட்டிலில் இருந்து கலந்து கொண்டவர்களில் 46% பேர் தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை அல்லது ஹைபர்டென்ஷன் இருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இந்த ஆய்வு 2293 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் மூலம்.. · ஆய்வில் பங்குப்பெற்ற 25.1% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், ஆனால் அவர்கள் அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. · 20.8% பேருக்கு மருத்துவச் சூழல் இல்லாத, வழக்கமான சூழலில் பரிசோதிக்கப்பட்ட போது உயர் ரத்த அழுத்தம் [masked hypertension] இருப்பது தெரிய வந்திருக்கிறது. · 20.2% பேருக்கு மருத்துவ சூழலில் பரிசோதிக்கப்பட்ட போது உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. · 33.90% பேர் இயல்பான ரத்த அழுத்த நிலையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்திய இதய ஆய்வு (I.H.S)-ன் முடிவுகளின்படி, இந்தியர்கள் மத்தியில் மருத்துவ…
Read More
பிளே ஸ்டோரில் 85 ஆப்கள் நீக்கம்!  கூகுள் அதிரடி!

பிளே ஸ்டோரில் 85 ஆப்கள் நீக்கம்! கூகுள் அதிரடி!

ஆண்டிராய்டு போன்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான செயலிகளை தருவதற்காக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டார் கண்டிப்பாக இருக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பை மீறும் ஆப்கள் அவ்வப்போது நீக்கப்படும். அதன் படி தற்போது 85 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவது. தேவையற்ற ஆப்களை பயனரின் அனுமதியின்றி பதிவிறக்கம் செய்துவிடுவது. அதிகமான விளம்பரங்களை பயனர்களுக்கு அளிப்பது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் செல்ஃபீ கேமிரா ஆப்கள்தான் அதிகம் நீக்கப்பட்டுள்ளன.
Read More
உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலமாகவே மக்கள் அதிகத் துல்லியமான சர்வதேச சேனல்கள் வரையில் உங்கள் டிவியில் பார்க்க வசதி செய்யப்படும்.அதிகத் துல்லியமான டிவி சேனல் சேவையை வழங்க உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் உடன் இணைந்து செட்-டாப் பாக்ஸ் சேவையை வழங்க ஜியோ முடிவெடுத்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 42-வது வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜியோவின் பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். முகேஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் இன்றும் செயல்பாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு டிடிஹெச் சேவை என்பதை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு அபாயமான போட்டியாகவே உள்ளது. இதைத்தவிர்க்கவும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் உள்ளூர் பணியைத் தொடரவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஜியோ முடிவு செய்துள்ளது. இந்தாண்டின் துவக்கத்திலேயே நாட்டின் முக்கிய ஆப்ரேட்டர்களான ஹேத்வே (Hathway), டென் (Den), ஜிடிபிஎல் ஆகிய நிறுவனங்களை ஜியோ வாங்கியுள்ளது. இந்நிறுவனங்கள்நாட்டின் 30ஆயிரம்…
Read More
அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி!

அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி!

இந்திய அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்களின் தரத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அகில இந்திய அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்பட்ட தர நிர்ணயத்திட்டத்தில் சிறந்த தரமுடைய தொழிற்பயிற்சி நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட 120 தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 40 தொழிற்பயிற்சி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பெற்றுள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழில் நிறுவனங்களில் ரூ. 15 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவடையும் தருவாயில் தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப்பின் அதே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு…
Read More