கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள இடர்களை தவிர்ப்பதற்கான வழிகள் !

இந்தியர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள டிரான்ஸ் யூனியன் சிபில் அறிக்கை, இந்தியர்கள், 3.69 கோடி கிரெடிட் கார்டு கணக்கு பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. அதே போல, கிரெடிட் கார்டு பாக்கித்தொகையை செலுத்தாமல் நிலுவையில் கொண்டு செல்வதும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையை தவிர்ப்பதற்கான வழிகள்:கிரெடிட் கார்டு பயன்பாடு வசதியானது, பல அனுகூலங்கள் கொண்டது என்றாலும், அதில் இடர்களும் அதிகம். கிரெடிட் கார்டை சரியாக நிர்வகிக்காமல், இஷ்டம் போல பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக செலவு செய்ய நேரலாம். எனவே, மாத அடிப்படையில் திருப்பி செலுத்தக்கூடிய தொகைக்கு மட்டும் கார்டை பயன்படுத்துவது நல்லது.

பொதுவாக கிரெடிட் கார்டு பயனாளிகளால் கார்டு பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இது மாதாந்திர பில்லில் வெளிப்படலாம். இதனால், பகுதி அளவு தொகையை செலுத்தி, சுழலும் கடன் முறைக்கு நிர்ப்பந்திக்கலாம். இதனால் கடன் சுமை அதிகமாகும். சுழலும் கடனை தவிர்க்கும் உறுதி வேண்டும்.கிரெடிட் கார்டு தொகையை நிலுவையில் வைக்கும் வழக்கம் கொண்டிருந்தால் கடன் சுமை அதிகரிப்பது மட்டும் அல்ல, கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். முறையாக செலுத்தப்படாத பில் தொகை கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். எனவே, உரிய காலத்தில் பில் தொகையை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.கிரெடிட் கார்டுக்கு கடன் வரம்பு உண்டு. இந்த வரம்பில் பயன்படுத்தப்படும் தொகை கடன் பயன்பாடு விகிதம் என குறிப்பிடப்படுகிறது. இந்த விகிதம் அதிகமாக இருப்பது ஏற்றது அல்ல. இந்த விகிதம், 40 சதவீதத்திற்கு மேல் இருந்தால் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். கடன் பயன்பாட்டு விகிதத்தில் கவனம் தேவை.வழக்கமான கிரெடிட் கார்டுகளுடன் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான கோ பிராண்டட் கார்டுகளும் வழங்கப்படுகின்றன. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நிலை வரலாம். இதனால், அளவுக்கு அதிகமாக செலவு செய்யும் வாய்ப்பு உண்டு. தேவை இல்லாத கார்டுகளை ரத்து செய்துவிடலாம்.

Advertisement

Related posts:

டெட்பூல் மற்றும் வால்வரினின் இந்திய ரசிகர்களுக்கான அட்வான்ஸ் புக்கிங்கை மார்வெல் ஸ்டுடியோஸ் இன்று முதல் தொடங்கி இருக்கிறது!

*மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது!*

டிடி நெக்ஸ்ட் லெவல் --விமர்சனம்!

'டியூட்' --- விமர்சனம் !

“வெற்றிமாறன் சாரின் 'விடுதலை' படத்திற்குப் பிறகு, ’ஜமா’ படத்தில் இன்னொரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” - நட...

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!

’பறந்து போ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் !