விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சி

விமான நிலையங்களை தனியார் மூலம் பராமரிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், மூன்று முக்கிய விமான நிலையங்களை, 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தம், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர், கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை, அதானி குழுமம் சமீபத்தில் பெற்றது.

இந்நிலையில், ஆமதாபாத், லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களையும், தனியார் மூலம் பராமரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.