சினிமா

பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !

பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !

ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன் சமக்ஸ்க்கு இ.டி.எனப்படும் எக்டோடெர்மல் டிஸ்ப்ளஷ்யா எனும் பாதிப்பு இருந்தது . அதன் காரணமாக சிறுவனுக்கு கீழ்த்தாடையில் பற்களே இல்லாமலும், மேல் தாடையில் இரண்டே பற்கள் மட்டுமே இருந்தன. ராஜஸ்தானில் சிறுவனுக்கு கழற்றி மாட்டக்கூடிய பல்செட் கொடுக்கப்பட்டது. ஆனால் கீழ்த்தாடை வெறுமையாக இருந்ததால், பல்செட்டை பொருத்தி பயன்படுத்த முடியவில்லை. அதனால் போதுமான உணவு சாப்பிட முடியாமல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மேலும், மற்ற குழந்தைகளுடன் இயல்பாக பழகமுடியாத தாழ்வு மனப்பான்மையால் சிறுவனும் அவனது பெற்றோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் இந்த பிரச்னைக்கு, டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் பொருத்துவது மட்டும்தான் ஒரே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது . இந்த சிகிச்சை முறை குறித்து மைலாப்பூர் ராஜன் பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குணசீலன் ராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது: ஆசியாவில் முதலாவதாக மிகக்குறைந்த வயதில் இம்ப்ளான்ட் சிகிச்சை பெற்றவர் சிறுவன் சமக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில்…
Read More
ரூ.8.64 லட்சம் விலையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் !

ரூ.8.64 லட்சம் விலையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் !

போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை எதிர்பாராத வகையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் விற்பனையில் அசத்தி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம். ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி என்ற இரண்டு வகை பாடி ஸ்டைலில் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், ட்யூக் என்ற திறந்தமேனி வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துவிட்டன. இதனால், ட்யூக் வரிசையில் 125, 200, 250, 390 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வந்தது. இவை அனைத்துமே சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்கள். இந்த நிலையில், அண்மையில் ட்யூக் வரிசையில் மிக சக்திவாய்ந்த இரட்டை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலாக 790 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ந் தேதி இந்த புதிய ட்யூக் பைக்கை…
Read More
இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு மறுவிளக்கம் அளிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்

இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலில் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கு மறுவிளக்கம் அளிக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர்

நகரின் மையத்தில் அமைந்துள்ள நான்காம் நிலை மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், நாட்டிலேயே முதன் முறையாக இடையீட்டு கதிரியக்கவியல் வழிகாட்டுதலுடன் சிடி சூட்டில் காணப்பட்ட எலும்புக் கட்டிக்கான குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இது எலும்பு மற்றும் மெல்லிய திசுக் கட்டிகளை அதிகத் துல்லியத்துடன் கண்டுபிடித்து அகற்றும் அணுகுமுறையாகும். இந்தியாவில் இந்தப் புதுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் முழுமையான மற்றும் குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சையை முறையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல எம்ஜிஎம் ஹெல்த்கேர் முனைந்துள்ளது. குறைந்தபட்சத் துளைஅறுவை சிகிச்சை முறை சென்னையைச் சேர்ந்த 30 வயது ஸ்ரீதருக்கு நடத்தப்பட்டது. இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் கூறுகையில் ‘சிறப்பு மருத்துவங்களின் கலவையாகவும், பல்துறை அணுகுமுறை கொண்ட மருத்துவமனையாகவும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் திகழ்கிறது. இரு வித்தியாசமான சிறப்பு மருத்துவப் பிரிவுகளைஅதிகத் திறனுடன் ஒருங்கிணைத்து நோயாளிக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளோம்’என்றார். ஒரு வருடத்துக்கு முன்பு…
Read More
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !

பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.. மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா சுண்டாட்டம், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நேற்று மாலை விழா நடைபெற்றது.…
Read More
வங்கிகளின் மூலம் மக்களுக்கு ரூ.81,700 கோடி கடனுதவி !  நிர்மலா சீதாராமன் பேட்டி !! !!

வங்கிகளின் மூலம் மக்களுக்கு ரூ.81,700 கோடி கடனுதவி ! நிர்மலா சீதாராமன் பேட்டி !! !!

"மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தலின்படி, பொதுத்துறை வங்கிகளின் கடன் வழங்கும் முகாம்கள் மூலம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து 9-ம் தேதிவரை 81,700 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். பணம் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுத்து பணப்புழக்கம் ஏற்படுத்தக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை வங்கிகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் தேவைப்படும் பொதுமக்களுடன் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடன் முகாம்கள் 2 தவணையாக நடத்தப்படும்.தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு, குறு நிறுவனங்கள், சில்லரை செலவுகள் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.…
Read More
பப்பி – விமர்சனம் !

பப்பி – விமர்சனம் !

மிகவும் சீரியஸ் படங்களாக பார்த்து வந்த நம்ம தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக மிகவும் யூத்தான ஒரு கதைக்களத்தோடு ரசிகர்களை"பப்பி" திரைப்படம் மூலம் மகிழ்வித்துள்ளார் அறிமுக இயக்குனர் நட்டு தேவ். படத்தின் கதாநாயகன் வருண் சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.அவரின் யதார்த்தமான ஒரு யூத்துக்கு உண்டான துள்ளலோடு சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.ட்ரைலர் பார்த்த பலர் இது ஒரு அடல்ட் படம் போல் இருக்கும் என்ற எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல லவ் சென்டிமெண்ட் கலந்த காமெடி படம். இப்படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர் கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டி சென்றவர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு என்றே சொல்ல…
Read More
இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை 24% சரிவு, வணிக ரீதியாக 62% குறைவு!

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை 24% சரிவு, வணிக ரீதியாக 62% குறைவு!

செப்டம்பர் மாதத்திற்கான SIAM (சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள்) தரவு பயணிகள் வாகன விற்பனை 23.69 சதவீதம் சரிவடைந்ததால் இந்தியாவில் வாகனத் துறைக்கு நிவாரணம் இல்லை. வர்த்தக வாகன விற்பனை செப்டம்பர் மாதத்தில் 62.11 சதவீதம் குறைந்துள்ளது. இதுகுறித்து SIAM வெளியிட்டுள்ள அறிக்கையின் படி; உள்நாட்டு கார் விற்பனை கடந்த மாதம் 33.4 சதவீதம் குறைந்து 1,31,281 ஆக இருந்தது, இது 2018 செப்டம்பரில் 1,97,124 ஆக இருந்தது, வெள்ளிக்கிழமை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நெருக்கடியைச் சமாளிக்க, பல வாகன நிறுவனங்கள் வேலை நிறுத்த நாட்களை அறிவித்தனர். மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் போன்ற ஆட்டோ மேஜர்களும் இதில் அடங்கும். ஊதியம் இல்லாமல் கட்டாய விடுப்பு போன்ற வேலை செய்யாத நாள். தொழிற்சாலைகளில் வாகனங்களின் உற்பத்தியைக் குறைக்க இது செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 3,41,539 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது, மொத்த பயணிகள் வாகன உற்பத்தி…
Read More
ரூ.740 கோடி மோசடி ? ரான்பாக்ஸி மாஜி தலைவர்கள் கைது.!

ரூ.740 கோடி மோசடி ? ரான்பாக்ஸி மாஜி தலைவர்கள் கைது.!

ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிறுவனத்திற்காக ரூ. 740 கோடி கடன் பெற்றனர். எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம் ஆண்டு விற்றனர்.2018 டிசம்பர் மாதம், ரூ 740 கோடி மோசடி செய்ததாக, சிங் சகோதரர்கள் மீது புதுடில்லி காவல் நிலையத்தில் பொருளாதார குற்றத்தின் கீழ் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, இவர்கள் மீது கடந்த மே…
Read More
‘உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா ? சென்னை உயர் நீதிமன்றம் கருத்து !

‘உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா ? சென்னை உயர் நீதிமன்றம் கருத்து !

'உயிருடன் இருப்பவர்களுக்கு, பேனர்கள் வைக்க தடை விதிக்கலாமா, இல்லையா என்பதையும், 'டிவிஷன் பெஞ்ச்' பரிசீலிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரவி; இவரது மகள் சுபஸ்ரீ. இரு சக்கர வாகனத்தில், வீட்டுக்கு சென்றபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர் சரிந்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில், மரணம் அடைந்தார். இது, செப்., 12ல் நடந்தது. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது. பேனர் வைத்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எமிலியாஸ், அரசு…
Read More
சென்னையின் முதல் ஞாபக சிகிச்சை மையம் ! காவேரி மருத்துவமனை துவங்கியுள்ளது !!

சென்னையின் முதல் ஞாபக சிகிச்சை மையம் ! காவேரி மருத்துவமனை துவங்கியுள்ளது !!

சென்னையில் முதல் முறையாக காவேரி மருத்துவமனை தனது முதல் ஞாபக சிகிச்சை மையத்தை துவங்கியுள்ளது . பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிகிச்சையகத்தை துவங்கி வைத்தார் . மனசோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா குறித்து பரிசோதித்தல், கண்டறிதல் மற்றும் ஞாபகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கும், அவர்களின் பொறுப்பாளர்களுக்கும் தொடர் ஆலோசனை மற்றும் தேவையான தகவல்களை வழங்குதல், ஆகிய சேவைகளை இந்த ஞாபக சிகிச்சை மையமானது வழங்கும் முந்தைய நிலையிலேயே கண்டறியப்பட்ட டிமென்ஷியா உட்பட, ஞாபகம் தொடர்பான இடர்பாடுகள் உள்ள நபர்கள், எந்த வயது வரம்பை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ஞாபக சிகிச்சை மையத்தில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் . காவேரி மருத்துவமனையின் மூத்த நரம்பியல் வல்லுனரும் & நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் ப்ரித்திகா சாரி, சிகிச்சையகத்தின் சேவைகள் குறித்து பேசுகையில் கூறியதாவது , " இந்த சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் ஞாபக பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைகளில் , ஒருவரின் ஞாபகசக்தியானது…
Read More