40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

நடிகை ஊர்வசி சாரதா பழம்பெரும் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனி, 1979-ம் ஆண்டு புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நடித்த நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காமல், குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்துள்ளார்.

அதன் பின் வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள் பெரிய அளவில்வெற்றியை பெறாத நிலையில், சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை அவரால் கொடுக்க முடியாமலே போய்விட்டது. 40 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வி.வி.ஆண்டனி தனது பிள்ளைகளின் பொருளாத நிலை உயர்ந்ததையடுத்து, சாராதாவுக்கு சம்பளபாக்கியை கொடுத்துவிட விரும்பியுள்ளார்.இந்நிலையில், நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக தயாரிப்பாளர் ஆண்டனிக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட கூடுதலாக ஒரு தொகையை எடுத்துக்கொண்டு அந்த விழாவுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், விழாவுக்கு இடையே நடிகை சாராதவை சந்தித்து, வி.வி.ஆண்டனி அவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்திருந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். 40 ஆண்டுகள் கடந்த நிலையில், கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை மறக்காமல் திருப்பி கொடுத்ததில், ஆண்டனி காட்டிய நேர்மை, நடிகை சாரதாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு பிரிந்து சென்றனர்.

Related posts:

!மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

’கொலைச்சேவல்’-- திரைப்பட விமர்சனம் !

சஜீவ் பழூர் இயக்கத்தில், நிமிஷா சஜயன் நடிப்பில், ஜிதேஷ் வி வழங்கும், கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் பிறை திரைப்படம் மே 1, 2026 முதல் Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது.!

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடத்துடன் இலவச பயிற்சி !

விமல் நடிக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா', காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது!

Samsung ‘Solve for Tomorrow’ Conducts First Ever Design Thinking Workshop to Develop Problem 1