25
Nov
தமிழில் உள்ள தனியார் சாட்டிலைட் டிவிக்களில் 2008ல் துவங்கப்பட்ட ஜீ தமிழ் டிவிக்கும் தனி இடம் உண்டு.பல வித்தியாசமான நிகழ்ச்சிகளால் அவர்களும் முன்னணி இடத்திற்கு தங்களை முன்னேற்றிக் கொண்டார்கள்.தங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் டிவி தொடர்களையும், அதன் நட்சத்திரங்களையும் ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்கள்.தற்போது தமிழ் சினிமா உலகில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஜீ தமிழ் சினி விருதுகள் நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள். 2020ம் ஆண்டில் இந்த விருது விழா நடைபெற உள்ளது.இந்த விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் சுகாசினி மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், பரத்பாலா, கரு பழனியப்பன், பரத்வாஜ் ரங்கன் ஆகியோர் உள்ளனர். தமிழ் சினிமா விருதுகள் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடுவர் குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். ஜீ தமிழ் டிவியின் சுஜு பிரபாகரன், தமிழ்தாசன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில்…
