டிரைவிங் லைசென்ஸ் பெற வந்துவிட்டது தொழில்நுட்பம் !

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் என்ற தொழில்நுட்பத்தின் உதவியால் வாகனம் ஓட்டும் திறனை மதிப்பீடு செய்து லைசென்ஸ் வழங்கப்படும் முறை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.வாகன ஓட்டிகள் லைசென்ஸ் பெறுவதற்கு ‘8’ அல்லது ‘S’ போட்டால் போதும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது தகுதியான ஓட்டுநர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சில சோதனை முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள ஹாம்ஸ் (HAMS) என்ற தொழில்நுட்பத்தை சோதனை முயற்சியாக உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை பதிவேற்றி, அதை வாகன ஓட்டிகளின் முன்பக்கமாய் பொருத்துகின்றனர். இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்கள், சென்சார்கள் ஆகியவற்றின் மூலம் வாகன ஓட்டுபவரின் திறனை துல்லியமாக கண்காணிக்கிறது. மேலும், வாகனைத்தை பின்நோக்கி சென்று நிறுத்துதல் (ரிவர்ஸ் பார்க்கிங்), ‘S’ வடிவத்தில் வளைந்து ஓட்டுவது போன்றவற்றையும் சரியாக சோதிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் மூலம் லைசென்ஸ் பெற விண்ணப்பத்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெறுவதாக கூறப்படுகிறது. சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையால், ஓட்டுநர்களை மதிப்பீடு செய்வது எளிதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts:

*அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'சூப்பர் ஹீரோ' படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது...மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும...

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள 'Unaccustomed Earth' என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

’தில் ராஜு ட்ரீம்ஸ்:’ ஆர்வமுள்ள சினிமா திறமையாளர்களுக்கான புதிய தளம் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது!

பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்...

டாக்டர் சிவராஜ் குமாரின்,'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது!

ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி வருகிறது.!

லோகா-- அத்தியாயம்-1 சந்திரா --- விமர்சனம்..!

*வரலட்சுமி சரத்குமார் – இலங்கையில் எடுத்த புகைப்படங்களில் மென்மையும் மின்னலும்! அழகு, ஆற்றல் மற்றும் தனித்துவ திறமையின் சின்னமாக ஜொலிக்கிறார்!*