30
Jan
சென்னை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக, 83.83 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட, 240 புதிய பஸ்களின் சேவையை, முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, 37 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 103; விழுப்புரத்திற்கு, 25; சேலத்திற்கு, 10; கோவைக்கு, 20, கும்பகோணத்திற்கு, 35; மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு, தலா, ஐந்து பஸ்கள் என, மொத்தம், 240 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகன பராமரிப்பு துறை சார்பில், முதல் கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கு, இரண்டு, 'அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்கள்' வாங்கப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். அத்துடன்,கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்,திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாரில், 1.55 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, பஸ் பணிமனை; கோவை போக்குவரத்துக் கழகம் சார்பில், ஊட்டியில், 2 கோடி ரூபாயில் நவீனமயமாக்கப்பட்ட, பஸ் நிலையம் ஆகியவற்றை, முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்'…
