09
Jun
யோகியே முதல்வர் வேட்பாளர் ? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உத்தரப் பிரதேச பாஜக?! உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் வருகிற தேர்தலில் பாஜக தேர்தலை சந்திக்காது என கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு அம்மாநில பாஜக தலைவர் விளக்கம் கொடுத்து, 'யோகியே முதல்வர் வேட்பாளர்' என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அரவிந்த் குமார் சர்மா, சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக இருந்தவர் இந்த அரவிந்த் குமார் சர்மா. சில வாரங்களாக இவர், மோடியின் வாரணாசி தொகுதியில் நேரடியாக முகாமிட்டு கொரோனா நிவாரண பணிகளை பார்வையிடுவது, பின்னர் அதுபற்றி மோடி - அமித் ஷாவுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவது என உத்தரப் பிரதேசத்தில் சுற்றிச் சுழன்று வருகிறார். கடைசியாக மத்திய அரசு பணியில் இருந்த இவர், கடந்த…
