12
Aug
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.25 லட்சம் கோடி கடனில் இருந்து மீளுமா? தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுதான் தீர்வா? தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மிகப் பெரிய கடன் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தக் கடனில் இருந்து தமிழ்நாடு மின்வாரியம் மீள முடியுமா? ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (டான்ஜெட்கோ) கடந்த நிதியாண்டின் முடிவில் 1,34,119.94 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கடன் நீங்கலாக டான்ஜெட்கோவின் மொத்தக் கடன் 1,24,974.49 கோடி ரூபாய். இந்த வெள்ளை அறிக்கையின்படி ஒரு யூனிட் மின்சாரத்தை வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ. 9.06 செலவாகும் நிலையில் சராசரியாக ஒரு யூனிட்டிற்கு 6.7 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடிகிறது. இதனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனையில் 2.36 ரூபாய்…
