சென்னையில் நடிகர் மோகன்–ரசிகர்கள் சந்திப்பு!

1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.வெகுகால அமைதிக்குப் பின், சென்னை மைலாப்பூர் வி ஏ தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு செய்தி வெளியான உடனேயே, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் அவரை சந்திப்பதற்கு முன்பதிவு செய்து, மிகுந்த ஆவலுடன் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், சுமார் 200 பேருக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் ரமேஷ், குமாரசாமி, ஜெரால்டு, அம்மாப்பேட்டை கருணாகரன், கிருபானந்தம் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி மகிழ்ந்து, தங்களது வாழ்வில் இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்காக நன்றியும் தெரிவித்தனர்.

Related posts:

மழை பிடிக்காத மனிதன்- விமர்சனம் !

சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' முதல் பார்வை சந்தானம் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டது!

கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி!

'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜாவான நடிகர் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் !

தீம் பார்க்கில் தடம் பதித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ!