‘சோனி விஷன் -எஸ்’ மின்சார கார்!

இனி மின்சார வாகனங்களுக்குத்தான் எதிர்காலம். இதை புரிந்துகொண்ட ஜப்பானின், ‘சோனி’ அண்மையில் ஒரு மின்சார காரின் மாதிரியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது. ‘சோனி விஷன் -எஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரி காரில், 33 வகை மின்னணு உணரிகள் உள்ளன.

அது மட்டுமல்ல, காருக்குள் இசை, ரேடியோ, வீடியோ என்று பொழுதுபோக்கு கருவிகள் அனைத்தையும் பொருத்தியுள்ளது சோனி. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் பிரமாண்டமான நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், யாரும் எதிர்பாராத விதத்தில் விஷன் எஸ் மின் வாகனத்தை சோனி அறிமுகப்படுத்தியது.

காரின் வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், விலையுயர்ந்த, ‘போர்ஸ்ச்’ கார்களின் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். தவிர, மின் காரின் இயந்திரப் பகுதி, கார் பாகங்களைத் தயாரிக்கும்

மேக்னாவால் உருவாக்கப்பட்டது என்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் தானோ என்னவோ, சோனி தற்போதைக்கு தன் மின்சார கார் திட்டத்தைப் பற்றி விரிவாக எதையும் சொல்லாமல் மவுனம் காக்கிறது. ஆனாலும், மின் வாகனத் துறையில் நுழையப்போகிறோம் என்பதை சோனி அழுத்தமாக சொல்லவே, விஷன் எஸ் காரை அது அறிமுகப்படுத்தியுள்ளது என்பது உறுதி.

Related posts:

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

புதிய வாகனங்களில் டிஜிட்டல் நம்பர் பிளேட் !

"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள 'மாறுவேஷம்' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி...

ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்... ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர். !