22
Sep
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால நீட்டிப்பு கிடையாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான சில முக்கிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறையின் முக்கிய அம்சங்கள்;- 1. நடப்பில் உள்ள வரி சட்டங்களின்படி, தனிநபர் வருமான வரி செலுத்துவோர் (இந்தியாவில் வசிப்பவர்கள் அதேபோல் உள்நாட்டில் வசிக்காதவர்கள்) ஆகியோர் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர். 1. 60 வயதுக்கு உள்பட்டவர்கள், 2. மூத்த குடிமக்கள் (60 முதல் 80 வயது வரை) 3. சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் (80 வயதுக்கு மேற்பட்டோர்). 2. முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இலலை. சீனியர் சிட்டிசன்ஸ் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையில் இருந்தால் அவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூப்பர்…
