இலவச ஏ.டி.எம்.பரிவர்த்தனை கணக்கில் சேராது! ஆர்.பி.ஐ.கண்டிப்பு!!

‘வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை; தொழில்நுட்ப கோளாறுகளால் பணம் வரவில்லை எனில், அது போன்ற பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர்களின் இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனை கணக்கில் சேராது’ என, இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து,  இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:தொழில்நுட்ப கோளாறு, ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை உட்பட, பல்வேறு காரணங்களால், பணம் எடுக்காத பரிவர்த்தனைகளும், இலவச, ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளுக்குள் உள்ளடக்கப்படுவதாக, தெரிய வந்துள்ளது.தொழில்நுட்ப கோளாறு, தொடர்பு பிழைகள், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை, வங்கி மற்றும் சேவை வழங்குவோரால் ஏற்படும் தவறுகள், தவறான ரகசிய குறியீட்டு எண் உட்பட, பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பரிவர்த்தனைகளை, வாடிக்கையாளர்களின் இலவச, பரிவர்த்தனை கணக்கில் சேர்க்க கூடாது. இதற்கான சேவைக் கட்டணமும் வசூலிக்க கூடாது.மேலும், வங்கி கணக்கில் இருப்பு தொகையை விசாரித்தல், காசோலை புத்தகம் கோரல், வரி செலுத்துதல், பண பரிமாற்றம் செய்தல் போன்ற, பணம் அல்லாத பரிவர்த்தனைகளும், இலவச பரிவர்த்தனை கணக்கில் சேராது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts:

ஐஓபியின் சில்லறை கடன்களும், ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற பயன்பாடுகளில் கிடைக்கின்றன !

வராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் ?

வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?

ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம் !

5 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் மட்டுமே கட்டணம்..! ஆர்பிஐ அதிரடி!

பழைய வீடுகளை விற்று புது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை பெறலாம் ! வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவு !!

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தெரியும், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் தெரியுமா?

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு !