நிதி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்

ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய சேமிப்புத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. எஃப்டி எக்ஸ்ட்ரா என்ற பெயரில் இந்தத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே சமயம், கூடுதலாக டேர்ம் இன்ஷூரன்ஸ் வசதியுடனும் வரும் டெபாசிட் திட்டங்களாகும். எஃப்டி எக்ஸ்ட்ரா திட்டங்கள், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது. முதல் திட்டம் எஃப்டி லைஃப் (FD Life). இது 18-50 வயதான வாடிக்கையாளர்களுக்கு வருமான வளர்ச்சி தரும் எஃப்டி முதலீட்டுத் திட்டத்தையும், இலவசமாக ஓராண்டுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தையும் வழங்கும் இரட்டை பலனுள்ள திட்டமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் அடுத்த ஆண்டும் இந்த காப்பீட்டு சலுகையை நீடித்துக் கொள்ளலாம்.மேலும் பிரத்யேக பலனாக இலவச டேர்ம் ஆயுள் காப்பீடு வசதியையும் ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மூலம் அளிக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3 லட்சம் நிரந்தர சேமிப்புக் கணக்கில் போட்டால், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள டேர்ம்…
Read More
வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும் ? ஆடிட்டர்கள் கோரிக்கை !

வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும் ? ஆடிட்டர்கள் கோரிக்கை !

வருமானவரித் துறை அதிகாரிகளைக் கண்காணித்து அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திடம் நாடு முழுவதுமுள்ள ஆடிட்டர்கள் ஒருமித்த கோரிக்கையை வைத்துள்ளனர். வருமானவரி வசூல் இந்த நிதி ஆண்டில் இலக்கை எட்டவில்லை. எனவே, மத்திய நேரடி வரிகள் ஆணையம், வரி வசூலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதனால், வருமானவரித் துறை அதிகாரிகள் வரம்பு மீறி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி மட்டுமே அவர்களுடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள ஆடிட்டர்கள் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். 2018-19 நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரி வசூல் இலக்கு 85.1 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. அதாவது ரூ. 10.21 லட்சம் கோடி மட்டுமே வசூல் ஆகியிருக்கிறது. சுமார் 15…
Read More
ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் முடக்கப்படும்.!

ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் முடக்கப்படும்.!

ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டுகள் இன்னும சில நாட்களில் முடக்கப்படலாம். மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.இதனைத் தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைத்துவிடுவது நல்லது. கடந்த ஆண்டு மட்டும் 11.44…
Read More
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு !

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு !

நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேம்படுத்த, நந்தன் நிலேகனி தலைமையில் 5 நபர்கள் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள டிஜிட்டல் பணவரித்தனை முறையை ஆய்வு செய்து, அதிலுள்ள குறைபாடுகளை களைந்து பாதுகாப்பாக நடைமுறைப்படுத்த இந்த குழு ஆலோசனை அளிக்கும். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலேகனி இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதார் திட்டத்தை செயல்படுத்திய தனி நபர் அடையாள ஆணையத்தின் தலைவராக இருந்தவர். ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எச்.ஆர்.கான், விஜயா வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குனர் கிஷோர் சன்சி உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற பின் 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது
Read More
நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசு புது செயல் திட்டம் !

நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசு புது செயல் திட்டம் !

வங்கிகளில் நிகழும் ரூ. 1 லட்சத்துக்கும் குறைவான நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதிய செயல் திட்டத்தை வகுத்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். நிதி தகவல் பாதுகாப்பு மசோதா விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வங்கிகளில் நிகழும் தகவல் திருட்டு, சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் புதிய மசோதா இருக்கும் என்றார். தற்போது ரிசர்வ் வங்கி மற்ற பொதுத் துறை வங்கிகளுடன் இணைந்து வங்கி மோசடி குறித்து விசாரித்து வருகிறது. குறிப்பாக கிரெடிட்கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையதளம் மூலமான பண பரிவர்த்தனையில் நிகழும் மோசடிகளில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான மோசடிகளை விசாரித்து வருகிறது. தகவல் திருட்டு மோசடிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகுக்கும் என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் மொத்தம் 921 மோசடிகள் நிகழ்ந்துள்ளன.
Read More
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தெரியும், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் தெரியுமா?

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தெரியும், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் தெரியுமா?

கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் என்றால் என்ன? ஒரு பெரிய கம்பெனிக்கு அவசரமாக பிசினஸ் செய்ய 1,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அவர்கள் வங்கிகளிடம் பேசிப் பார்க்கிறார்கள். வங்கிகளின் கடன் திட்டங்கள் அனைத்தையும் அலசிப் பார்க்கிறார்கள். எதுவும் ஒத்து வரவில்லை. எப்படிக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும், கடனுக்கான வட்டி விகிதம் 11 %க்கு கீழே வர வில்லை. ஆக நாமே ஒரு கார்ப்பரேட் டெபாசிட் திட்டத்தை அறிவித்து ஒரு நல்ல வட்டிக்கு மக்களிடமே கடன் வாங்குவோம் என்று நிர்வாகக் குழு மற்றும் இயக்குநர்கள் முடிவு எடுக்கிறார்கள். இப்படித் திரட்டப்படும் பிக்ஸட் டெபாசிட்டுக்குத் தான் கார்ப்பரேட் எஃப்.டி என்று பெயர். நிறுவனத்துக்கு என்ன லாபம் இதனால் நிறுவனங்களுக்கு ஒரு சில சதவிகிதம் வட்டி குறைந்து செலவைக் குறைக்கும். செலவு குறைகிறதென்றால் லாபம் கூடத் தானே செய்யும். இப்படி 1000 கோடி ரூபாய்க்கு 1 சதவிகித வட்டி குறைவு என்றால் கூட 10 கோடி ரூபாய்…
Read More
ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கு வரும் புகார்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. டெபிட் அட்டைகளில் புதிதாகச் சிப் பொருத்துவது போன்ற பல்வேறு வழிகளில் மோசடிகளைத் தடுக்க வங்கிகள் முயன்றுவரும் நிலையில்,வாடிக்கையாளர்களும் தங்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு சொந்த பணத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அதே நோக்கத்துடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என முக்கிய அறிவுரைகளை மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்துள்ளது. அவை என்னவென்று இங்குப் பார்க்கலாம். செய்யக்கூடியவை *உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளை முழுவதும் அந்தரங்கமாகச் செய்யவும், கடவுச்சொல் உள்ளீடு செய்வதைப் பார்க்க யாரையும் அனுமதிக்கக்கூடாது. *பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏடிஎம் திரையில், வரவேற்றுத் திரை உள்ளதை உறுதிசெய்யவேண்டும். *உங்களின் தற்போதைய கைப்பேசி எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். அதன் மூலம் உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை குறுஞ்செய்திகள் பெறமுடியும். * ஏடிஎம்-ல் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின்…
Read More