நிதி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு.!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ஜாக்பாட்.! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு.!!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டு கடன் பிரிவில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இப்புதிய திட்டத்தின் படி மக்களை ஏமாற்றும் பில்டர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது. இப்புதிய திட்டம் அடுத்தச் சில மாதங்களில் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பில்டர்கள் பொதுவாகப் பில்டர்கள் மக்களிடம் தங்களது வீடுகளை வேகமாக விற்பனை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காகப் பல பொய்களைக் கூறி விற்பனை செய்வார்கள். இதில் முக்கியமான ஒன்று டெலிவரி டைம். டெலிவரி டைம் என்பது குறித்த நாளுக்குள் பில்டர்கள் கூறிய படி வீட்டின் கட்டுமான பணிகளை முடித்து வாடிக்கையாளர்கள் கையில் சாவியைக் கொடுக்க வேண்டும். பில்டர்கள் காலந்தாழ்த்துவது தற்போது மிகவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பில்டர்களுக்குப் பெரிய விஷயமாக…
Read More
டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?

டெபிட் அட்டைகள் இன்றி ஏடிஎம் -ல் பணம் எடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவி வரும் இந்த நாட்களில், அரசாங்கமும் வங்கிகளும் முடிந்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் நோட்டுகளில் இருந்து தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு நீங்கும் என்று தெரிவித்து வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் SBI மற்றும் ICICI போன்ற வங்கிகள் தங்களது ATM-களில் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுக்க அனுமதிக்கின்றன. இந்த முறைகளைப் பற்றி இன்று நாம் இந்த பதிவில் நாம் கூற இருக்கிறோம். அதன் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர்க்கலாம். டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் இருந்து பணம் எடுக்க, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI YONO பயன்பாட்டில் YONO ரொக்க வசதியை வழங்கியுள்ளது, அதே நேரத்தில் ICICI வங்கியும் இதே போன்ற வசதியை iMobile மூலம் வழங்குகிறது. இந்த இரண்டு வசதிகளின் உதவியுடன் நீங்கள் எவ்வாறு பணத்தை எடுக்க முடியும் என்பதை பார்ப்போம். YONO App பயன்பாட்டிலிருந்து…
Read More
SBI வங்கி அதிரடி அறிவிப்பு ?  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. ?

SBI வங்கி அதிரடி அறிவிப்பு ? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. ?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் SBI சில்லறை கால வைப்புக்கான வட்டி குறைத்துள்ளது. SBI சில்லறை கால வைப்புக்கான வட்டியினை 15 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது. புதிய விகிதங்கள் 2020 ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடனான வைப்பு காலம் ஒரு வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, கடன் வழங்குபவர் நிலையான வைப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 6.25 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாகவும், ஒரு வருடத்திலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்துள்ளார். ஆதாரங்களின்படி பெறப்பட்ட தகவல்களின்படி, நிலையான வைப்புகளுக்கு ஏழு நாட்கள் முதல் 45 நாட்கள் மற்றும் 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை, வங்கி முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் வட்டி விகிதங்களை அளிக்கிறது. 180 நாட்கள் மற்றும் ஒரு வருடத்திற்கும்…
Read More
சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இ-கோர்ட் !

சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இ-கோர்ட் !

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இணையமயமானதால் உதயமாகிறது சென்னையின் முதல் இ-கோர்ட்.வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அன்றாட பணிகளின் செயல்திறத்தை மேம்படுத்தும் விதமாக, கடந்த 2012 முதலே புதிய தொழிட்நுட்பங்களை வரவேற்று, அவற்றை தமது தனி தேவைகளுக்கென ஆற்றுப்படுத்தி, டிஜிட்டல் கோர்ட் அல்லது இ-கோர்ட்டாக உருமாற்றி வருகிறது. தில்லி, நாக்பூர், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இந்த இ-கோர்ட் தங்கு தடையற்ற இணையவழி வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்படுகிறது. சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகத்தில், ஒரு தனி அறையில் அதிநவீன இணையவழி வீடியோ கான்பரன்சிங் வசதிகளுடன் ஒரு புதிய நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் அமையவுள்ள இந்த புதிய இ-கோர்ட்டை மாண்புமிகு நீதியரசர் திரு பி பி பட், தலைவர், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சென்னை, மேதகு திரு ஜி எஸ் பண்ணு,…
Read More
வருமான வரியில் இப்போதைக்கு மாற்றம் இல்லை..!

வருமான வரியில் இப்போதைக்கு மாற்றம் இல்லை..!

சமீபத்தில் நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில், வருமான வரி விகிதங்களில் சில மாற்றங்கள் வரலாம் என சில செய்திகள் பரவிக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் எதுவும் இப்போதைக்கு நடக்காது என விஷயம் தெரிந்த சில அதிகாரிகள் சொல்லி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதற்கு காரணமாக கடந்த காலங்களில் நடந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு, ஏற்றுமதி வியாபாரங்களுக்கு கொடுத்த சில வரி குறைப்புகள் போன்ற காரணத்தால், அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள். அதோடு கடந்த சில மாதங்களாக சரக்கு மற்றும் சேவை வரி கூட நிர்ணயித்த இலக்கில் வசூலிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே மேற்கொண்டு வருமான வரியையும் குறைக்கும் திட்டம், அரசுக்கு இல்லை என அந்த விவரம் தெரிந்த அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்களாம். அதோடு தனி நபர்களுக்கு, ஏற்கனவே போதுமான அளவுக்கு வருமான வரிச் சலுகைகள் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இந்த 2018-19…
Read More
சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு !

சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு !

டெல்லியில் உள்ள தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீடு தீர்ப்பாயத்துக்கு இணையாக சென்னையில் வரும் டிசம்பர் முதல் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாய அமர்வு செயல்பட உள்ளது. நிறுவனங்கள் வாங்கும் கடன்கள், திவால் அறிவிப்பு போன்ற விஷயங்கள் தொடர்பான வழக்குகளை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயங்கள் விசாரித்து வருகின்றன. கடன் வசூல், திவால் போன்ற வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கம்பெனிகள் சட்ட வாரியம் உள்ளன. இந்த வாரியங்களின் தீர்ப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதனால், பெரும் பணச்செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. இதையடுத்து, சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தின் அமர்வை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி ஆடிட்டர் வி.வெங்கட சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில், தமிழகத்தில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு…
Read More
ஏப்ரல் 2019க்கான நம்பகமான வங்கியாக இந்தியன் வங்கி தேர்வு !

ஏப்ரல் 2019க்கான நம்பகமான வங்கியாக இந்தியன் வங்கி தேர்வு !

நிகர லாபம் 139% அதிகரித்து ரூ 359 கோடி இது திண்மையான 72% மற்ற வருவாயின் பின்புலத்தில் உள்ளது இந்தியன் வங்கியின் இயக்குநர் குழுமம் 2019-20ன் இரண்டாவது காலாண்டிற்கான நிதிநிலையறிக்கை, லாப நஷ்ட கணக்கு அறிக்கையையும் மற்றும் செப்டம்பர் 30 2019 அன்று நிறைவடையும் அரையாண்டிற்கான அறிக்கையையும் (ஏப்ரல் முதல் செப்டம்பர் நிதியாண்டு 2020) அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. வங்கியின் இயக்க லாபம் நிதியாண்டு 2020 Q2வில் 26% வளர்ச்சி கண்டு ரூ 1502 கோடியாக உள்ளது. நிதியாண்டு 2019 Q2வில் ரூ 1191 கோடியாக இருந்தது. செப்டம்பர் 30, 2019 நிறைவுற்ற ஆறு மாத காலத்திற்கு 16% வளர்ச்சி கண்டு ரூ 2876 கோடியாக உள்ளது. இது செப்டம்பர் 30, 2018 நிறைவுற்ற ஆறு மாத காலத்திற்குரூ 2489 கோடி ஆக இருந்தது.வங்கியின் நிகர லாபம் நிதியாண்டு 2020 Q2வில் ரூ 359 கோடி. வங்கியின் நிகர லாபம் நிதியாண்டு…
Read More
கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு ! இந்திய முதலீட்டை புதுப்பிக்க உதவும்.. !!

கார்ப்பரேட் வருமான வரி குறைப்பு ! இந்திய முதலீட்டை புதுப்பிக்க உதவும்.. !!

கார்ப்பரேட் வருமான வரியைக் குறைப்பதற்கான இந்தியாவின் சமீபத்திய முடிவை சர்வதேச நாணய நிதியம்(IMF) வெள்ளிக்கிழமை ஆதரித்தது, இது முதலீட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், இந்தியா தொடர்ச்சியான நிதி ஒருங்கிணைப்பை நிவர்த்தி செய்ய வேண்டும் மற்றும் நிதி நிலைமைகளின் நீண்டகால ஸ்திரத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளது."இந்தியாவுக்கு இன்னும் குறைந்த நிதி இடம் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம், எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் பெருநிறுவன வருமான வரி குறைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏனெனில் இது முதலீட்டில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் சாங்யோங் ரீ செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த இரண்டு காலாண்டுகளில் குறிப்பிடத்தக்க மந்தநிலையைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டில் பொருளாதாரம் 6.1 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2020-ஆம் ஆண்டில் 7.0 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என அவர்…
Read More
பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றம் !

பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றம் !

பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் நோக்கில் இந்திய அரசின் நிதித்துறை பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை ஒரே மாதிரியாக மாற்றி அமைக்க இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ) முடிவு செய்து உள்ளது. தற்போது ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் மாவட்டத்திற்கு மாவட்டம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சேவை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கம் பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரத்தை நாடுமுழுவதும் ஒரே மாதிரி மாற்றி அமைக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த ஆகஸ்டு…
Read More
ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம் !

ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம் !

ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளிலும், சேவைக் கட்டணத்திலும் எஸ்பிஐ வங்கி புதிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு வேளை நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏடிஎம்மில் பணமெடுப்பதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்: 1. வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ரொக்கம் இருக்க வேண்டும் என்பது எஸ்பிஐ வங்கியின் விதிகளில் ஒன்று. அதன்படி, ஒருவரது வங்கிக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை என்பது ரூ.25,000க்குள் இருந்தால் அந்த வாடிக்கையாளர் எஸ்பிஐ ஏடிஎம்களில் 5 முறையும், இதர வங்கியின் ஏடிஎம்களில் இருந்து 8 முறையும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். அதேப்போல, ஒரு வாடிக்கையாளரது வங்கிக் கணக்கில் மாத சராசரி தொகை ரூ.25,000க்கு மேல், ரூ.1 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம்மில் அளவிலாத பணம் எடுக்கும் வாய்ப்புகளும், இதர வங்கி ஏடிஎம்களில் கட்டணமின்றி 8…
Read More