தமிழ்நாடு முழுவதுமுள்ள ரேசன் கடைகள்ல விநியோகம் செய்ய அதிமுக ஆட்சியில் ஒரு கிலோ பருப்பு ரூபாய் 143.50 க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் வெறும் ரூ .85.99 க்கு கொள்முதல் செய்து சுமார் 115 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிச்சமாக்கியுள்ளார் .
. தமிழகத்தில் ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு பருப்புகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன . இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக ஆண்டு தோறும் டெண்டர் விடப்பட்டு மொத்தமாக பருப்பு கொள்முதல் செய்யப்படும் . அந்த வகையில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் டன் பருப்பு ரேசன் கடைகளுக்காக தமிழக அரசு கொள்முதல் செய்கிறது . இப்படி கொள்முதல் செய்யப்படும் பருப்புகள் ரேசன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன . இதற்கான டெண்டரில் விலை கோரப்படுவது தான் கடந்த அதிமுக ஆட்சியில் சர்ச்சையானது .
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில்(TNCSC) ரேஷன் கடைகள் பொருட்களான சர்க்கரை,பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ 2028 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பகத்திற்கு புகார் அளித்திருந்தது. இதற்கு அந்த துறையின் அமைச்சர் காமராஜ், முன்னாள் இயக்குநர்கள் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் குமாரசாமியின் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரியபண்டாரின் ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடந்த வேண்டும்னு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து விட்டு துவரம் பருப்பை ரூ 85.99 க்கு கொள்முதல் செய்ய உத்தரவு போட்டிருக்காரு.இதனால அரசுக்கு 115 கோடி ரூபாய் மிச்சம்.வெறும் பருப்பு கொள்முதல்ல 115 கோடி மிச்சம்னா பாமாயில் சர்க்கரை கொள்முல்ல எவ்வளவு எப்படி கொள்ளையடிச்சிருக்காங்கன்னு இந்த பதிவுலப் பாக்கலாம்.
கடந்த 6 வருஷத்தில மட்டும் கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கெடுக்கிற மாதிரி இத்தனை வருஷங்களா ரேஷன் துறையான TNCSCற்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாதபடி ,டெண்டரில் பங்கெடுப்பதற்கான தகுதி விதிகளை, அதாவது சர்க்கரை கொள்முதல் விதிகளை 2019 ம் வருஷத்திலும் பாமாயில் கொள்முதல் விதிகளை 2017 வருஷத்திலும் பருப்பு கொள்முதல் விதிகளை 2015 ம் வருஷத்திலும் மாத்தியிருக்காங்க.
2. கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்டி போர்வையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறச் செய்து, அதுவரை சப்ளை செய்த நிறுவனங்கள் பங்கு பெற முடியாத வகையில் நிதித் தகுதி (turn over), அனுபவம் போன்றவைகள் மாற்றப்பட்டு, டெண்டர் சட்டத்தின் முக்கிய இலக்கான ஆரோக்கியமான போட்டி இல்லாம செஞ்ருக்காங்க.. மேலும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டார்லாம் கிரிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஏஜெண்ட் மாதிரிதான் இதில் பங்கெடுத்தாங்க.
அந்த பொதுத்துறை நிறுவனங்களே இப்பொருட்களை மீண்டும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சப்ளை செய்யட்டும்னு விட்டுட்டாங்க.
3. மிக முக்கியமாக,கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்
பங்கெடுக்கும் முன் வரை மற்ற நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட சந்தை மதிப்பிற்கு பொருட்கள் வாங்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்து டெண்டர்கள் எடுக்க ஆரம்பிச்சதுல இருந்து சந்தை மதிப்பை விட மிகவும் அதிக விலை கொடுத்து சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு வாங்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாக கொள்ளை லாபம் அடைஞ்சாங்க.
4. இதுல கொடுமை என்னன்னா கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உற்பத்தி பண்ணி இந்த பொருட்கள் சப்ளை செய்யலை. அவர்கள் அந்த வேலையை ஏற்கனவே சப்ளை செஞ்சுகிட்டிருந்த நிறுவனங்களுக்கு சந்தை விலைக்கு கொடுத்துட்டாங்க. Godown வரை அவர்கள் தான் கொண்டு போய் இறக்குவாங்க..கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெறும் பில் போடும் வேலையை மட்டும் செஞ்சு, கிலோவிற்கு ரூ 10 முதல் 30 வரை ஊழல் பண்ணியிருக்காங்க..
5. உதாரணத்திற்கு கனடியன் மஞ்சள் பருப்பு / துவரம் பருப்பு டெண்டர்கள்ல கிறிஸ்டி நிறுவனத்துக்காகவே டெண்டர் விதிகள் 2014 மற்றும் 2015ல் மாற்றியது ரேஷன் துறை. 20000 மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் பருப்பு கொள்முதல் விதிகளில் கிறிஸ்டி நிறுவனத்தை உள்ளே கொண்டு வர்றதுக்காக பருப்பு சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்பதை மாற்றி ஏதாவது ஒரு உணவு பொருள் சப்ளை செய்த அனுபவம் இருந்தால் போதுமானது என்று மாற்றப்பட்டது.கிறிஸ்டி நிறுவனம் வெறும் முட்டை சப்ளை செஞ்ச அனுபவம் மட்டுமே இருந்தது. அந்த நிறுவனத்தை உள்ளே கொண்டு வர வழிவகை செஞ்சாங்க.மேலும் அதுவரை பத்திற்கும் மேற்பட்ட பருப்பு மில் மற்றும் பருப்பு வியாபாரிகள் பங்கெடுத்து வந்தாங்க. ஆனால் turnover ஐ 3 கோடியில் இருந்து 40 கோடியா மாத்துனாங்க. மேலும் ஒரே ஒப்பந்தத்தில் 20 கோடி உணவு பொருள் சப்ளை செஞ்ச அனுபவம் வேணும்னும் மாத்துனாங்க. இந்த மாற்றங்கள் மூலம் அதுவரை போட்டி போட்டுக்கொண்டு இருந்த அனைத்து பருப்பு மில் மற்றும் பருப்பு வியாபாரிகளை பங்கு பெற முடியாத படி செஞ்சிட்டாங்க. அதுவரை சந்தை மதிப்பிற்கு கொள்முதல் செய்த ரேஷன் துறை சந்தை மதிப்பை விட ரூ 10 முதல் 30 வரை கிலோவிற்கு அதிகமாக கிறிஸ்டி நிறுவனமிடமிருந்து கொள்முதல் செய்ய ஆரம்பிச்சாங்க! .இதே போல் பாமாயில் டெண்டரில் 2017லும் சர்க்கரை டெண்டரில் 2019லும் டெண்டர் விதிகளை மாற்றி கிறிஸ்டி நிறுவனங்கள் மட்டும் போட்டி போடுற மாதிரி ரேஷன் துறைல. மாற்றங்களைப் பண்ணினாங்க.
தேர்தல் முடிந்த பிறகு மே 5 ந்தேதி முடிவடைந்த பருப்பு டெண்டர்ல கிறிஸ்டி குழுவினர் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்து ஒரு கிலோ துவரம்பருப்பு ரூபாய் 143 முதல்147 வரை ஒப்பந்தப்புள்ளி தந்தாங்க. அதே போல ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்பிற்கு ரூபாய்139 முதல்145 வரை ஒப்பந்தப்புள்ளி கொடுத்தாங்க. ஆனால் இரண்டின் சந்தை மதிப்பும் ரூபாய்100ஐ விடக்குறைவு. இந்தஆதாரங்களை வெளிக்கொண்டு வந்த பிறகு புதிதாக பதவியேற்ற தமிழக அரசு கிறிஸ்டி நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு கொடுக்கப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் புது டெண்டர் போட்டாங்க..
ஆனா இந்த முறை முதல்வர் ஸ்டாலின் என்ன பண்ணுனார்ன்னா பல விதிகளை பழையபடி தளர்த்தினாரு.அதனால கிறிஸ்டி நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களும் பங்கு பெற வழி வகை செய்த உடனேயே இந்த ஒப்பந்தத்தில்11 பேர் பங்கெடுத்து பலரும்100 ரூபாய்க்கு குறைவாக ஒப்பந்தப்புள்ளி கொடுத்தாங்களாம்.. கிறிஸ்டியின் ராசி நிறுவனம் ரத்தான ஒப்பந்தத்திலும் புது ஒப்பந்தத்திலும் பங்கெடுத்தது. மே 5 ந்தேதி இந்த நிறுவனம் ஒரு கிலோ துவரம்பருப்பு விலை146.50 ரூபாய்னு ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. ஆனா அதே நிறுவனம் இருபதே நாட்கள்ல மே 26 ந்தேதி 87 ரூபாய்னு ஒப்பந்தப்புள்ளி கொடுத்திருக்காங்க.. இந்த இடைப்பட்ட காலத்தில சந்தை மதிப்பில எந்த பெரிய மாற்றமும் இல்லை. அதேபோல் கனடா மஞ்சள் பருப்புக்கு மே 5ந்தேதி 142 ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கொடுத்த அதே ராசி நிறுவனம் இப்போ மே 26 ம் தேதி ஒரு கிலோ 78 ரூபாய்னு ஒப்பந்தப்புள்ளி கொடுத்துருக்காங்க.
அவங்களே இத்தனை நாட்களா ஒரு கிலோவிற்கு எத்தனை ரூபாய் கொள்ளை அடிச்சோம்னு ஆவணங்கள் மூலமா பதிவு செஞ்சிட்டாங்க.. இந்த ஆதாரங்களையும் மேலும் மற்றவர்களை போட்டி போடாம வைப்பதன் மூலமா எப்படி விலை அதிகமா பெற்று கிறிஸ்டி நிறுவனம் அரசையும் மக்களையும் ஏமாற்றி மக்களோட வரிப்பணத்தை கொள்ளையடிச்சாங்கன்னு ஆதாரங்கள் எல்லாத்தையும் அறப்போர் இயக்கம் புகாரோட இணைச்சுக் கொடுத்திட்டாங்க..
7. அறப்போர் இயக்கம் இந்த புகாரில் சர்க்கரை பாமாயில் பருப்பு ஒப்பந்த ஆவணங்களை விலாவாரியாகவம்.. மேலும் கொள்முதல் விலையை அன்றைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு எப்படி சந்தை மதிப்பை விட மிக அதிகமான விலை கிறிஸ்டியின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டதுங்கிறதுக்கான ஆதாரங்களையும்,. சந்தை மதிப்பிற்கான ஆதாரங்களையும் , கிறிஸ்டி நிறுவனம் மட்டும் பங்கு பெறும் வகையில் டெண்டர் ஆவணங்கள் எப்படி மாற்றப்பட்டதுங்கிறதுக்கான ஆவணங்களையும் புகாரில் சொல்லியிருக்காங்க.. மேலும் எம்எம்டிசி, எஸ்டிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் போர்வையில் கிறிஸ்டி எப்படி இந்த டெண்டர்களில போட்டி போட்டதுங்கிறதுக்கான ஆவணங்களையும் புகார்ல சொல்லியிருக்காங்க. இவை அனைத்தும் பொது ஆவணங்கள் மற்றும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலமாக பெறப்பட்ட ஆவணங்கள் தான். விசாரிக்கப்பட வேண்டிய பொது ஊழியர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் எப்படி இந்த கூட்டுச்சதியில் ஈடுபட்டாங்கங்கிறதையும் புகார்ல எடுத்து சொல்லியிருக்காங்க.
8. பாமாயில் டெண்டர்களில் கடந்த 4 ஆண்டுகள்ல மட்டும் கிறிஸ்டி குழும நிறுவனங்களிடம் வாங்கிய .56 கோடி பாமாயில் பாக்கெட்டுகள்ல அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பின் மதிப்புரூ.902 கோடி. மேலும், பருப்பு டெண்டர்களில், கடந்த 6 ஆண்டுகளில் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட 6 லட்சம் டன்பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு ரூ.870 கோடி. சர்க்கரையில் கிறிஸ்டியிடம் கொள்முதல் செய்த 2.1/2 லட்சம் டன் சர்க்கரையில் ஏற்பட்ட இழப்பு ரூ 256 கோடி. குறைந்த பட்சமாக கிறிஸ்டி நிறுவன ஊழலால் மட்டும் தமிழக அரசு இழந்த பணம் மட்டுமே ரூ 2028 கோடி .ரேஷன் பொருட்கள் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறைந்தபட்சம் ரூ.2028கோடி., இந்த புகார்கள் மேல் நடவடிக்கை எடுக்கணும்னா புதுசா ஆதாரங்களைத் தேட வேண்டியதில்லை. ஏற்கனவே அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களைத் தூசி தட்டி எடுத்தாலே போதும்.அதுல ஒண்ணு தான் இந்த பருப்பு டெண்டர்.
இப்போ திமுக ஆட்சியில் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது பருப்பு டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்குபெறும் வகையில விதிகள் மாற்றப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. . இதனால அந்த நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்று பருப்பு ஏகபோக விநியோக உரிமையை பெற்றது . கடைசியாக தமிழகத்திற்கு 20 ஆயிரம் டன் பருப்பு வழங்க ஒரு கிலோ பருப்புக்கு ரூ .143.50 என கிறிஸ்டி நிறுவனம் கேட்டது . இந்த டெண்டர் ஏற்கப்பட்டு கிலோ ரூ .143.50 என்கிற விலையில் அதிமுக அரசு பருப்பு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்தது
இதே போல் கடந்த ஆண்டு கடைசியாக நடைபெற்ற பருப்பு டெண்டரிலும் இதே விலைக்குத்தான் கிறிஸ்டி நிறுவனம் டெண்டர் கோரியது . இந்த நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது . அதோட கடந்த அதிமுக ஆட்சியில் பருப்பு டெண்டருக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிகள்லாம் தளர்த்தப்பட்டு சிறிய நிறுவனங்களும் பங்கேற்கிற மாதிரி வழிவகை செய்யப்பட்டுள்ளது . இதற்கு நீதிமன்றம் மூலம் வந்த தடையை தமிழக அரசு உடைத்து தற்போது டெண்டரை வெளியிட்டுள்ளது . அதன்படி தற்போது ஒரு கிலோ பருப்பை வெறும் 85.99 ரூபாய்க்கு வழங்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன டெண்டர் கோரப்பட்டதிலேயே சுமார் 20 ஆயிரம் டன் பருப்பை கிலோவுக்கு ரூபாய் 85.99 என்கிற விலைக்கு வழங்க வந்துள்ள நிறுவனம் தான் மிகவும் குறைவான விலைக்கு கோரியுள்ளதாக கூறப்படுகிறது . அந்த வகையில் பார்க்கும் போது , ஒரு கிலோவுக்கு கடந்த அதிமுக ஆட்சியை ஒப்பிடும் போது ரூ .57.50 குறைவாக டெண்டர் கோரப்பட்டுள்ளது . ஒரு கிலோவுக்கு ரூ .57 மிச்சமானால் 20 ஆயிரம் டன்னுக்கு சுமார் 115 கோடி ரூபாய் மிச்சமாகும் . இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ .115 கோடி இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது . திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டெண்டர் முறைகேடு தடுக்கப்பட்டுள்ளது .
கடந்த அதிமுக ஆட்சியை போல் கிறிஸ்டி நிறுவனத்திற்கே இந்த டெண்டர் கொடுக்கப்பட்டிருந்தால் கடந்த முறை ஆட்சியாளர்களை கவனித்ததை போல இந்த முறையும் திமுக ஆட்சியாளர்களையும் அந்த நிறுவனம் கவனித்திருக்கும் ஆனால் அதனை எல்லாம் தவிர்த்து மக்கள் வரிப்பணம் ரூ .115 கோடியை மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .அடுத்து சர்க்கரை பாமாயில் டெண்டர் ரத்து பண்ணப் போறாராம். அமைச்சர் சேகர் பாபு சொல்ற மாதிரி சொன்னா இது டிரெய்லர் தான்… இனிமேல்தான் மெயின் பிச்சரே இருக்கு ! மக்களும் மெயின் பிச்சரைத்தான் பாக்க விரும்புறாங்க!!