ஒரே கம்ப்யூட்டர்ல ஒரே ஐபி அட்ரஸ், ஒரே போன் நம்பரை கொடுத்து இரண்டு பேர் போட்டி போடுறது மாதிரி கணக்கு காட்டி ஒருத்தரே டென்டர் எடுத்ததாக அறப்போர் இயக்கம் சொல்லுது.

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ 811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி வருது.எஸ் பி வேலுமணி உள்பட 8 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செஞ்சிருக்கு. ஆன்லைன் டெண்டர் கட்டியதால் டெக்னிக்கலா ஒரே ஐபி அட்ரஸை பயன்படுத்தி 130 டெண்டர்கள் எடுத்ததாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கு

இந்த ஊழல் சம்பந்தமா அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் என்ன சொல்றாரு ரத்னா இந்த சோதனை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுனேயே நடக்குது. இதுதான் விசாரணையின் ஆரம்பம் என சொல்லலாம். அதாவது 2018 ஆம் ஆண்டு ஜெயராமன் கொடுத்த புகாரின் சாராம்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கையில் தெளிவா இப்ப குறிப்பிட்டிருக்காங்க..

அதில் மிக முக்கியமாக எஸ் பி வேலுமணி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவரது சகோதரர் எஸ் பி அன்பரசனின் நிறுவனங்களுக்கு முறைகேடாக டெண்டர்களை வாங்கி கொடுத்திருக்காரு.
எஸ்பி வேலுமணியின் சகோதரர் இன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரே ஐபி அட்ரஸ், ஒரே போன் நம்பர் கொடுத்து இருவர் போட்டியிடுவது போல் காண்பிப்பார்கள்.

ஆனால் ஒருவர் மட்டுமே டெண்டர் எடுக்கக் கூடிய முறையில் செயற்கையாக இருவர் எடுப்பது போல் காட்டி ஒருவரே எடுத்துள்ளார். இதற்கான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்டுபுடிச்சி எடுத்திருக்காங்க. வேலுமணியின் உறவினர் சந்திரசேகரின் வடவள்ளி வீட்டிலும் தற்போது சோதனை நடந்தது. இந்த நபருக்கு சொந்தமான கேசிபி பிரைவேட் லிமிடெட், வரதன் உள்கட்டமைப்பு நிறுவனங்கள், இந்த நிறுவனத்தின் இணை இயக்குநராக உள்ள சந்திரபிரகாஷ் அவருக்கு சொந்தமான ஏராளமான நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருது.

இந்த நிறுவனங்கள் சென்னை, கோவை மாநகராட்சிகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கான டெண்டர்களை முறைகேடாக ஒரே ஐபி அட்ரஸை வைத்து போடப்பட்டு அடுத்தடுத்து டெண்டர்கள் போடப்பட்டுள்ளதால் ஊழலுடன் நிறைய வரிப்பணம் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சந்தை மதிப்பை விட அதிகமாக டெண்டர் போட்டு எடுத்திருக்காங்க. அதற்கான ஆதாரங்களையும் புகாரில் இணைச்சிருக்காரு ஜெயராமன்.

எந்தவித தகுதியும் இல்லாமலேயே வரதன் இன்பிராஸ்டிரக்சர் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்குது. இதன் மூலம் எஸ் பி வேலுமணி தனது சகோதரர் மற்றும் தனக்கு நெருக்கமான நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்துகளை சேர்த்துள்ளார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரெய்டு மூலம் மேலும் பல ஆவணங்கள் சேர்க்கப்பட்டு விசாரணையானது துரிதமாக நடைபெறும்.

இந்த எஃப்ஐஆரில் இருக்கக் கூடிய ஒவ்வொன்றும் ஜெயராமன் கொடுத்த புகாரில் இருக்கக் கூடிய ஒன்றுதான். கோவை மாநகராட்சியில் எஸ்பி வேலுமணியின் சகோதரர் அன்பரசனும் , அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராஜன் ரத்தினசாமி ஆகியோர் 47 டெண்டர்களை ஒரே ஐபி அட்ரஸில் அடுத்தடுத்து டெண்டர்களை எடுத்திருக்காங்களாம். கேசிபி என்ஜினியர்ஸ், வரதன் உள்கட்டமைப்பு, கான்ஸ்டானிக் ஆகிய 3 நிறுவனங்களும் அவர்களுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கான டெண்டர்களை சென்னை, கோவை மாநகராட்சியில் முறைகேடாக எடுத்துள்ளதையும் ஜெயராமன் புகாரா கொடுத்திருக்காரு.

மிக அதிகமாக டெண்டர்களை எப்படி எடுத்துள்ளார்கள் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக கொடுத்திருக்காராம். கடந்த ஜூலை மாதம் திமுக அரசால் தாக்கல் செய்த சிஏஜி அறிக்கையில் சென்னை மாநகராட்சியில் எப்படி முறைகேடு செய்தார்கள் என்பது குறித்து அறப்போர் இயக்கம் தெரிவித்திருந்த விஷயங்களை உறுதி செஞ்சிருக்காங்களாம். மாநகராட்சி அதிகாரிகள், எஸ் பி வேலுமணி, ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளதாக ஜெயராமன் சொல்றார். சென்னை மாநகராட்சியில் 2018 ஆம் ஆண்டு சாலை, மழைநீர் வடிகால் திட்டங்களில் ரூ 740 கோடிக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் குறித்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்கிறார்கள். மின்சார வாரியம், உணவுத் துறை ,சுகாதாரத் துறை ஆகியவற்றில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து புகார்கள் கொடுத்துள்ளது அறப்போர் இயக்கம். அடுத்தடுத்து எஃப்ஐஆர் போடப்படும் என்கிறார் ஜெயராமன்.

இது போல் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை எஸ் பி வேலுமணியின் சகோதரர் 47 டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. அது போல் எஸ் பி பில்டர் நிறுவனத்துக்கு கோவை மாநகராட்சியில் 131 டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் கே சி பி என்ஜினியர் நிறுவனத்திற்கு 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 130 டெண்டர் விடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் வேலுமணியின் சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தின் சொத்து மதிப்பு 967 சதவீதம உயர்ந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவிச்சிருக்காங்க..

வேலுமணியின் ஊழல் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூட தனது தேர்தல் பிரச்சாரத்தில் பட்டியலிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது உதயநிதி பேசுகையில் ” இந்த அதிமுக ஆட்சியே ஒரு துயரத்தில்தான் நடக்குது. இந்த அமைச்சர் எஸ் பி வேலுமணியால் ப்ளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளது. எஸ் பி வேலுமணியின் ஊழல் பட்டியலை படிக்கிறேன் கேளுங்கள். கோவை மாநகராட்சி சென்னை, கோவை மாநகராட்சிகளில் எஸ் பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களான கேசிபி என்ஜினியர்ஸ், செந்தில் அன்ட் கோ, வரதன் உள்கட்டமைப்பு, கான்ஸ்டானிக்ஸ் இந்தியா, ஆலயம் அறக்கட்டளை பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ராமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்விக்டா மெடிடெக் ஆகிய 7 நிறுவனங்கள் மட்டுமே அனைத்து டென்டர்களையும் மாற்றி மாற்றி எடுத்துள்ளன.  அது போல் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 595 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு ரூ 3150 கோடிக்கு ஒப்பந்தம் செய்து ஊழல் செய்திருக்கிறார் எஸ்பி வேலுமணி. 349 டெண்டர்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கோம். கோவையில் 998 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகளிலும் ஊழல், ரூ 230 கோடி வளர்ச்சி பணி என்ற பெயரில் நொய்யல் ஆற்றை புனரமைப்பதிலும் ஊழல் , தமிழகம் முழுவதும் 1300 ரூபாய் மதிப்புள்ள ஒரு எல்இடி லைட்டுகளை ரூ 6000 என கொள்முதல் செய்து எல்இடி விளக்குகளை பொருத்தமட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இது போல் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் ஸ்டாலினிடம் இருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இந்த எடப்பாடி பழனிச்சாமி, எஸ் பி வேலுமணி உள்ளிட்ட ஊழல் செய்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என உதயநிதி பேசினார். இன்றைய தினம் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
வேலுமணியின் பினாமி நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் 11,300 மடங்கு அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறதாம். இத்தனையும் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட்டவைதான். நீதிமன்றத்திலும் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் இன்று காலை முதல் 60 இடங்களில் பல மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். எஸ்பி வேலுமணியிடம் 7 மணி நேரம் விசாரணை.. பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்கள் 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளில் திளைத்திருக்கிறார் எஸ்.பி.வேலுமணி என்கின்றனர் திமுக மூத்த தலைவர்கள். இதனாலேயே அதிமுகவில் என்னதான் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி இருந்தாலும் அவரை ஆட்டுவிக்கும் சக்தியாக இருந்தவ்ர் வேலுமணிதான் என்கின்றனர். இப்போது திமுக அரசின் விசாரணை வளையத்துக்குள் வேலுமணி சிக்கிவிட்டார். சென்னையில் வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் வேலுமணியும் அவரது அடிப்பொடிகளும் கெத்து காட்டுவதற்காக ஆதரவாளர்களை திரட்டி வீடுகள் முன்பு குவித்துள்ளனர். அவர்களுக்கு டிபன், சாப்பாடு, டீ, காபி என அனைத்தும் வாங்கி கொடுத்து உபசரிக்கிறது வேலுமணி அண்ட் கோ. நடுசாலையிலேயே அவுங்க ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கும் வேலுமணியின் நடவடிக்கை கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகி இருக்குது. இந்த நிலையில்தான் வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார் என்கிற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக நடந்து வருது. அதிமுகவில் ஓங்கிய வேலுமணி கை சட்டசபை தேர்தலில் கடுமையான போட்டிக்கு மத்தியில்தான் வேலுமணி வெல்ல முடிந்தது. வேலுமணி தொகுதியைவிட்டு வெளியே போய்விடக் கூடாது என்பதற்காகவே அவர் போட்டியிட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதியை திமுக வேட்பாளராக நிறுத்தியது. இன்னொரு பக்கம் எடப்பாடி மூலம் தமக்கு ஆதரவானவர்களை பல தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தி பணப்பட்டுவாடா செய்திருந்தார் வேலுமணி. அவர் நிறுத்திய வேட்பாளர்களும் கணிசமான அளவில் ஜெயித்திருப்பதால் அதிமுகவில் கை ஓங்கியும் இருக்கிறது. இந்த நிலையில் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் கோவை இல்லாமல் இருந்தாலும் அதிமுகவை ஜெயிக்க வைக்க வேலுமணியை எடப்பாடி பழனிசாமி களமிறக்குவார். சட்டவிரோதமான, ஊழல் முறைகேடுகள் மூலம் குவித்து வைத்திருக்கும் பணம் இருக்க பயமேன் என்ற நிலையில்தான் வேலுமணியின் போக்கு இருந்தது. இதே அணுகுமுறையைத்தான் வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கெத்தாக காட்டுவார் வேலுமணி என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ரெய்டுக்குள் சிக்கிக் கொண்டதால் வேலுமணி முடக்கப்பட்டுவிட்டார். தற்போதைய ரெய்டு, இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது. அல்லது இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் போது இன்றைய சோதனைகள் முடிந்த உடனேயே கூட வேலுமணியை கைது செய்து சிறையில் அடைக்கவும் சாத்தியம் இருக்கிறது. அனேகமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது வேலுமணி சிறையில்தான் இருப்பார் என்கின்றன அரசியல் கட்சிகள்.