எடப்பாடிக்கு ஓகே சொன்ன பாஜக !!

எடப்பாடிக்கு ஓகே சொன்ன பாஜக !! ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒண்ணு வந்திருக்குது. ஓ பன்னீர்செல்வத்திற்கான கடைசி கதவும் மூடப்பட்டு விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்குது. ஈரோடு கிழக்கு சட்டசபை சபாநாயகர்தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிடுச்சி. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்குது. திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துயிருக்குது. இதனால எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகிட்டாரு.ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கைதான் ஓங்கியிருக்குது. திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சில பேசிய எடப்பாடி, அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகுது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யலை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடிச்சுகிட்டு வருது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுதுன்னு பேசினாரு. மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? இப்போ பாஜக எங்கள் கூட்டணியில் தான் இருக்குது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பாஜக குஷியாயிருக்குது. எடப்பாடி கிட்டத்தட்ட பாஜகவிடம் பணிஞ்சு போய்ட்டாருன்னுதான் சொல்லணும். பாஜகவுடன் பெரிதாக எடப்பாடி நெருக்கம் காட்டாமல் இருந்து வந்தார். பாஜகவின் பெயரை இவர் கூட்டணி கட்சிகளின் பணிமனையில் கூட பயன்படுத்தலை. அதேபோல் பாஜக தலைவர்கள் புகைப்படத்தையும் அவர் பயன்படுத்தாமல் இருந்தார். இந்த நிலையில் திடீரென பாஜகவுடன் கூட்டணி தொடரும்ணு எடப்பாடி அறிவிச்சிருக்கிறார். எடப்பாடியின் இந்த அறிவிப்பு பாஜக தரப்பிற்கு குஷியை ஏற்படுத்தி உள்ளதாம். லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணிக்காக அலைய வேண்டிய நிலை கிடையாது. பாஜகவின் ரூட் இதனால் கிளியர் ஆகி இருக்குது. இனிமே பாஜகவுக்கு ஓபிஎஸ் தேவையில்லை இதுதான் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்குதாம். அதிமுகவில் பாஜகவிற்கு ஆதரவாக இருந்த ஒரே ஆளு ஓபிஎஸ்தான். ஓபிஎஸ் மூலம் நினைத்ததை சாதிக்கலாம்ங்கிற நிலைப்பாட்டில்தான் பாஜக இருந்துச்சு. அதிமுக உள்ளே இருக்கும் பாஜக அனுதாபியாக ஓபிஎஸ் இருந்து வந்தார். ஆனா இப்போ ஓபிஎஸ்சுக்கான தேவை இல்லாமல் போய்டுச்சு. பாஜகவுடன் கூட்டணி தொடரும்னு எடப்பாடியே வெளிப்படையாக அறிவிச்சிட்டாரே! அதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கான தேவை இப்போது இல்லாமல் போய்விட்டது. பாஜகவுடன் கூட்டணி தொடரும்னு எடப்பாடி சொல்லிவிட்டதால் அவர்களுடன் கூட்டணி வைக்க ஓபிஎஸ் உதவியை பாஜக நாட வேண்டியது இல்லை என்ற நிலை உருவாகிடுச்சி.. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்னு சொல்லியிருந்தாரு.. அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர்ன்னும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன்னும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எடப்பாடிக்கு கிடைச்சிடுச்சிங்கிறது உறுதியாகியிருக்குது. இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணி தொடரும்ன்னு எடப்பாடியும் அறிவிச்சிட்டாரு.. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கு இடையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்து உள்ளது. பாஜக வழியாக அதிமுக உள்ளே நுழையலாம்னு அவர் நினைச்சுக்கிட்டு இருந்தாரு. ஆனால் இப்போ பாஜக – எடப்பாடி பக்கம் நெருக்கம் ஆகியிருக்காங்க. இதனால் ஓ பன்னீர்செல்வத்திற்கான கடைசி கதவும் மூடப்பட்டு விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக – காங்கிரஸ், நாம் தமிழர், தேமுதிக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கி உள்ளன.பாஜக கட்சி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க போவதாக சொல்லியிருக்காரு. ஓ பன்னீர்செல்வம் இல்லைன்னா சசிகலா மூலமும், தினகரன் மூலமும் அதிமுகவை அபகரிக்க பாஜக நினைச்சது. ஆனால் இதற்கு எடப்பாடி அனுமதி கொடுக்கலை. ஓ பன்னீர்செல்வத்தை அனுமதிக்காமல் அதிமுகவை முழு கட்டுப்பாட்டில் வைக்கணும்னு எடப்பாடி நினைக்கிறார். ஏன்னா எதிர்காலத்தில் பாஜகவை நேரடியாக எடப்பாடி எதிர்ப்பார். ஜெயலலிதா பாஜகவை எதிர்த்தது போல. லோக்சபா தேர்தலில் ஒன்றாக இருந்தால் கூட சட்டசபை தேர்தல்களில் பாஜகவை ஜெயலலிதா எதிர்த்து இருக்கிறார். அந்த ஜெயலலிதா பாதையில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். எடப்பாடி நினைச்சா இதை செய்ய முடியும். அதிமுக தொண்டர்களை எடப்பாடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். தனக்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் போதும் பாஜகவை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். அதனால்தான் ஈரோடு கிழக்கில் மோடி படத்தைக் கூட பயன்படுத்தலை. ஈரோடு கிழக்கில் பாஜக பெயரை பயன்படுத்தவேயில்லை. ஈரோட்டிலேயே பாஜக எடப்பாடியிடம் பணிந்துவிட்டது. மோடியை எதிர்க்க எடப்பாடி தயாராகிவிட்டார் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அவ்வளவுதான் இதில் வாதம் வைக்க எதுவும் இல்லை. இதனால்தான் எடப்பாடியை எதிர்க்க வேண்டாம்ன்னு ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை வாபஸ் வாங்க வைச்சது பாஜக. நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியின் ஆதரவு வேணும்ங்கிறதுக்காக பாஜக இப்படி இறங்கி போகுது. பத்திரப்படுத்த வேண்டிய குதிரை எடப்பாடிங்கிறதுனால, அவர்கிட்ட பாஜக நெருங்கி செல்கிறது. எடப்பாடிக்கு இப்போதைக்கு கட்சிதான் முக்கியம். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். ஓ பன்னீர்செல்வம் உள்ளே வந்தால் பாஜகதான் முக்கியம்னு நெனைப்பார். அதிமுகவுக்கு உள்ளே பாஜகவிற்காக ஓ பன்னீர்செல்வம் வேலை பார்ப்பார். பாஜகவின் ஆளாக ஓ பன்னீர்செல்வம் இருப்பார். ஆனால் அதை எடப்பாடி விரும்பமாட்டார். ஓ பன்னீர்செல்வத்திற்கு டெல்லி ஆதரவு இருக்குது. ஆனாலும் அவரால் எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற முடியவில்லை. அன்னைக்கு கூவத்தூரில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக சசிகலா எம்எல்ஏக்களை
கூவத்தூருக்கு கொண்டு போனாரு. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்ட எடப்பாடி கூவத்தூரில் சசிகலா கேம்பில் இருந்த ஆட்களை மொத்தமாக தன் பக்கம் தூக்கிட்டாரு. அரசியலில் இதை சிலர் துரோகம் என்பார்கள். சிலர் சாணக்கிய வியூகம் என்பவர்கள். சிலர் சக்கர வியூகம் என்பார்கள். அந்த வியூகத்தைதான் எடப்பாடி மேற்கொண்டு இருக்கிறார். பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்து அதிமுகவை வெளியே கொண்டு வரணும்னு எடப்பாடி நினைக்கிறார். தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கும் வரை சென்றுஎடப்பாடி அமைதியாக இருந்தார். அந்த தொண்டர்கள் சப்போர்ட் தனக்கு கிடைத்துவிட்டது. ஜெயலலிதா சப்போர்ட் இல்லாமலே 66 எம்எல்ஏக்களை பெற்று இருக்கிறார். வெறும் 3 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில்தான் எடப்பாடி முதல்வர் பதவியை இழந்தார். அந்த வாக்குகள் இஸ்லாமியர் வாக்குகள். அவர்கள் வாக்குகளை பெற்று இருந்தால் எடப்பாடி முதல்வர் ஆகி இருக்க முடியும். தனக்கு இப்போது தொண்டர்கள் சப்போர்ட் இருப்பது எடப்பாடிக்கு தெரியும். இப்போது தொண்டர்கள் சப்போர்ட் இருப்பதால் எடப்பாடி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டார், என்கிறார்கள்/