ஜெயலலிதாவை சிறையில் தள்ளிய நல்லம நாயுடுவை களம் இறக்கும் ஸ்டாலின்..!

நல்லம நாயுடு… தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் எஸ்.பி-யாக இருந்தப்போ தான் இவர் போட்ட கேஸ்ல தான் ஜெயலலிதாவையும், அவரின் கூட்டாளிகளையும் சிறைக்குள் தள்ள முடிஞ்சது.

வழக்கு யார் வேணும்னாலும் போடலாம் ஆனா கேஸ் நிக்கணும்னா அடிப்படை முகாந்திரம் இருக்கணும்.ஜெயலலிதா மேலப் போட்ட வருமானத்துக்கு அதிகமா சொத்து சேத்தாகப் போடப்பட்ட வழக்கு நிக்கிறதுக்கு காரணமே அவர் முதலமைச்சரா இருக்கும் போது மாசம் 1 ரூ தான் சம்பளம் வாங்குனாரு.ஒரு ரூபாய் சம்பளம் வாங்குனவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது.இந்த கேள்விக்கு ஜெயலலிதா வால் பதில் சொல்ல முடியல.சரி ஒரு நல்ல ஆடிட்டர வச்சு கணக்க எழுத வேண்டியது தானேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது.அந்த காலகட்டத்தில அவங்க யார் பேச்சையும் கேக்கமாட்டாங்களே.
அதோட பலனத்தான் அனுபவிச்சாங்க.அதுக்கு ஒரு சம்பவத்தை உதாரணமா சொல்லலாம்.

கடந்த 1996ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் நல்லம நாயுடு. ஜெயலலிதாவை கைது செய்து ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இது தான் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது முதலமைச்சர் பதவியையே இழக்க காரணமாக இருந்தது. 1997ம் ஆண்டே நல்லம நாயுடு ஓய்வு பெற்றுவிட்டார் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

இதன் காரணமா ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையைக் கிட்டத்தட்ட 20 வருஷங்களா கண்காணிச்சி வந்ததோட பல்வேறு சட்ட போராட்டங்களையும் நடத்தியவர் நல்லம நாயுடு. ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா,கூட அவரு தீர்ப்பு சொல்லும்போது நல்லம நாயுடுவின் குற்றப்பத்திரிகையை பல முறை சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் லஞ்ச மற்றும் ஊழல் வழக்குகளில் நல்லம நாயுடுவின் ஆலோசனைகளை பெற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமியை வீட்டிற்கே அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் மிக முக்கிய அதிகாரி நல்லம நாயுடுவின் பெயர் கோட்டை வட்டாரத்தில் மறுபடியும் அடிபட ஆரம்பிச்சிருக்குன்னு கோட்டை வட்டாரங்கள்ல சொல்றாங்க.இப்போது அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சியாக வலம் வரும் செய்திதான், லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் முதல்வரின் ஆலோசகராக நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட இருக்கிறார் என்பது. 1996 முதல் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் 2017-ல் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரையில் பெரிதும் பேசப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் நல்லம்ம நாயுடு. இவர்தான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அதிகாரி. இவரது தலைமையிலான 18 அதிகாரிகள் கொண்ட டீம்தான் ஜெயலலிதா வீட்டை சோதனையிட்டு அவரது ஆடம்பர வாழ்க்கையைத் தமிழக மக்களுக்கு வெளிச்சம் காட்டியது. ஆமா ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், நகைகள் எல்லாத்தையும் படம்புடிச்சி அம்பலப்படுத்தியது நல்லம்ம நாயுடு டீம்தான்.இத்தகைய நேர்மையான அதிகாரியான நல்லம்ம நாயுடுவைதான் தற்போது லஞ்ச ஒழிப்பு வழக்குகள் தொடர்பா தமக்கு ஆலோசகராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்க உள்ளாருங்கிற தகவலை தலைமை செயலக வட்டாரங்கள். சொல்லுது. டிஜிபி கந்தசாமி பிளஸ் நல்லம நாயுடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டு வரும் அடுத்தடுத்த ஸ்கெட்சுகளால் அதிமுக மாஜி அமைச்சர்கள் ரொம்பவே அதிர்ச்சியில் உறைஞ்சு போயிருக்காங்களாம்.. யார் மீது எந்த வழக்கு எப்போது பாயும் என்கிற பீதியில் கூடி கூடி ரகசிய ஆலோசனை நடத்திகிட்டு வர்றாங்களாம் அதிமுக மாஜிக்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடங்கி கடைநிலையில் இருந்த அமைச்சர்கள் வரைக்கும் அனைவரது கடந்த கால செயல்பாடுகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை தோண்டி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு சொல்றாங்க. மொதல்ல எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி ஆகிய அஞ்சு பேரை குறி வைச்சிருக்காராம் ஸ்டாலின்னு சொல்றாங்க.

இவங்க மேல் இருக்கிற புகார்கள் அதற்கான ஆதாரங்களுடன் தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் கந்தசாமி கடந்த வாரம் முதலமைச்சரை சந்திச்சதா பேசிக்கிறாங்க.. அப்போ தான் நல்ல நாயுடு குறித்து ஸ்டாலின் சில தகவல்களை கந்தசாமியிடம் டிஸ்கஸ் பண்ணுனதா சொல்றாங்க. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் மேல எடுக்கப் படும் நடவடிக்கைகளை தொடங்குறதுக்கு முன்னாடி நல்லம நாயுடுவின் ஆலோசனைகளை ஸ்டாலின் கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிச்சிருக்காராம்..

ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குள்ள தலைவரின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகக் காரணமாக இருந்த ஒரு அதிகாரியை வைத்து தங்களுக்கு ஸ்கெட்ச் போடப்போறாங்கங்கிறத எடப்பாடி பழனிசாமிக்கு தெரிஞ்சி வச்சிருக்காராம். . என்ன தான் அவர் வெளியே துணிச்சலா இருக்கிற மாதிரி காட்டிகிட்டாலும் கடந்த பத்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்தபோது செய்த சில காரியங்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமல்ல அமைச்சர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில ரெய்டு பண்ணுன உடனே ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் டெல்லிக்கு ஓடுனாங்க.தேர்தல்ல கூட்டணி வச்சதுக்கு நன்றி சொல்லப் போனோம்னு வெளில சொன்னாலும் ரெய்டு வராம காப்பாத்துங்கன்னு மோடி கிட்ட கேட்ருக்காங்க.பிஜேபியப்பத்தி இவுங்க இன்னமும் சரியா புரிஞ்சுக்கல.அவுங்க ஈரத்துணியப் போட்டு கழுத்த அறுக்கிறவங்க.இவுங்க எல்லாரும் ஜெயிலுக்கு போனால்தான் பிஜேபி நெனச்சதச் சாதிக்க முடியும்.இதுக்கு முன்னோட்டமாத்தான் திமுகவுக்கும் பிஜேபிக்குந்தான் போட்டிக்கு அண்ணாமலை பேசிட்டு வர்றதக் கவனிச்சீங்களா.அப்படி இருக்கும் போது பிஜேபி யாவது இபிஎஸ் ஓபிஎஸ்ஸைக் காப்பாத்தறதாவது.
மோடியும் அமித்ஷாவும் ரெய்டப் பத்தி வாயே திறக்கல.பேயறஞ்ச மாதிரி தான் டெல்லியில பத்திரிகையாளர்களச் சந்திச்சாங்க.

அதிமுக அமைச்சர்கள் மேல திமுக தரப்பில் இருந்து புதிசா புகாரெல்லாம் கொடுக்க தேவையில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உள்பட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், அந்த வேலையத்தான் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கந்தசாமி ரெடி பண்ணிட்டாராம்.இதனால முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருக்குமே சிக்கல்தான்..

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி என ஒட்டுமொத்த முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நாள்தோறும் நடக்குமாம். எப்படியும் ஆறு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ வழக்குகளில் தீர்ப்பு சொல்லப்பட்டு விடும்.

ஊழல் முறைகேடுகளுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் தண்டனை கிடைக்கும். அப்படிபட்ட தீர்ப்புகள் வந்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழப்பார். அவரைப் போல அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ. பதவிகளையும் இழப்பார்கள். ஆறு வருடத்திற்கு தேர்தலிலேயே நிற்க முடியாது.ஸ்டாலினப் பொறுத்த வரைக்கும் நேர்மையான ஆட்சி பண்றோம்.தேர்தல்ல கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தியிக்கோம்ங்கிற திருப்தி இருந்தா போதும்னு நெனைக்கிறாராம்.
இனி போகப்போக தரமான சம்பவங்கள் நடக்கும்னு சொல்றாங்க பாக்கலாம்.