வடிவேலுவுக்கு கை கொடுத்த மு.க.ஸ்டாலின்..!

வடிவேலுக்கு கை கொடுத்த ஸ்டாலின் ! வந்துட்டாரய்யா வடிவேலு !! கடந்த 2011ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகின் காமெடி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த வடிவேலு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால பிரச்சனையில் சிக்கினாரு.அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு இருக்கும் திரைப்படங்களை திரையிட விடாமல் சிக்கல் கொடுக்கப்பட்டது.இது எல்லாருக்கும் தெரியும்.

கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கியதோட சில முக்கிய கோரிக்கைகளையும் வடிவேலு வைத்திருந்தார் வடிவேலு, அந்த கோரிக்கைகள் அனைத்தும் தற்போது நிறைவேறியுள்ளது தான் ஹைலைட் என்கிறார்கள் வடிவேலு விசுவாசிகள்.

கடந்த 2011ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகின் காமெடி தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்த வடிவேலு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செஞ்சதுனால பிரச்சனையில் சிக்கினார். அதிமுக ஆட்சி வந்த பிறகு வடிவேலு இருக்கும் திரைப்படங்களை திரையிட விடாமல் சிக்கல் கொடுக்கப்பட்டது. இதனால வடிவேலுவை எந்த தயாரிப்பாளரும் அவங்களோட படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் தவித்து வந்தனர். பிறகு 2016 தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொடர்ந்து வடிவேலு மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது தான் கடந்த 2017ம் ஆண்டு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் இம்சை அரசன் 24ம் புலிகேஷி படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு ஒரு நாள் கூட நடைபெறாமல் முடங்கியது. இதற்கு காரணம் வடிவேலு  மற்றும் இயக்குனர் சிம்பு தேவன் இடையிலான பிரச்சனைன்னு சொன்னாங்க. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் தேர்வில் வடிவேலு தலையிட்டதால் சிம்புதேவன் டென்சன் ஆனதாகவும், தான் கூறியவர்களை படத்தில் நடிக்க வைக்காததால் வடிவேலு படப்பிடிப்புக்கு வர மறுத்ததாகவும் சொல்லப்பட்டது.

இந்த விவகாரங்களால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. அதாவது படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட செட், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு கொடுத்த அட்வான்ஸ் என எஸ் பிக்சர்ஸ் தள்ளாட நேரிட்டது. பலமுறை வடிவேலுவை அழைத்து பஞ்சாயத்து பேசியும் சிம்பு தேவன் இயக்கத்தில் தன்னால் நடிக்க முடியாதுன்னு வடிவேலு திட்டவட்டமாக சொல்லிட்டாரு. ஆனால் எஸ் பிக்சர்சோ சிம்புதேவன் மட்டுமே தன் படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தை நாட, வடிவேலுவுக்கு ரெட்கார்டு போடப்பட்டது.
என்னதான் வடிவேலுக்கு ரெட் கார்டு போட்டாலும் சமூக வலைதளங்களில் வடிவேலு மீம்ஸ் தான் ரெக்கை பறந்துச்சு.முதல்வரை சந்திப்பிற்கு வந்தப்போ அவர் என்ன பேசுனாருன்னா: “ரொம்ப சந்தோசமா இருக்கேன். முதல் முறையாக படங்களில் நடிக்க வந்தப்போ இருந்த மகிழ்ச்சியை விட இப்போதான் அதிகமா இருக்குது. உலகத்தில் உள்ள எல்லா குடும்பமும் என்னுடையதுதான். ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம்தான். இவர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்றார் உற்சாகமாக.
“இவ்வளவு நாட்கள் நடிக்காமல் இருந்தால் கூட, மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்னை தொடர்ந்து நடிப்பது போலவே, மக்களோடு மீம்கள் மூலம் இருக்க வைச்சாங்க.. என்னுடைய எல்லா ரியாக்‌ஷனும் போட்டு, என்னை படங்களில் இருப்பது போலவே உயிரோட்டமாக வைச்சிருந்தாங்க.. மீம்ஸ் கிரியேட்டர்கள் எனக்கு பெரிய கடவுள் மாதிரி. அவர்கள்தான் மக்களுக்கு என்னை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தாங்க. அவர்கள் எல்லாம் யாருன்னே எனக்குத் தெரியாது. அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி”.ன்னு சொன்னாரு.

இந்த நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பிறகு வடிவேலுவுக்கு எதிரான ரெட் கார்டை நீக்கிட்டாங்க.. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வடிவேலு சந்தித்து பேசிய சில வாரங்களிலேயே அவரது பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி இம்சை அரசன் 24ம் புலிகேசி தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து எஸ் பிக்சர்ஸ் விலகிக் கொள்ளணும் அதே நேரத்தில் அந்த படத்தை லைக்கா நிறுவனத்திற்காக வடிவேலு நடிச்சிக் கொடுக்கணும்னு ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இதனை வடிவேலு, ஷங்கர் என இருவருமே ஏற்றுக் கொண்டதாலத் தான் ரெட் கார்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் சொல்றாங்க..

இந்த விஷயத்தில் ஷங்கர் இறங்கி வர ஆளும் கட்சி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம்னு சொல்றாங்க. வடிவேலு பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி திமுகவில் சினிமா தொடர்பான விவகாரங்களை கவனிச்சிகிட்டு வர்ற முக்கிய பிரமுகர் கிட்ட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதாகவும் அப்போது முதலே அவர் இரவு பகலுமாக இந்த விஷயம் தொடர்பாக வடிவேலு, எஸ் பிக்சர்ஸ் அப்புறம் தயாரிப்பாளர் சங்கத்தோட பேசி ஒரு முடிவு வர்றதுக்கு காரணமாக இருந்திருக்காருன்னு சொல்றாங்க. அத்தோட குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்டாலினும், வடிவேலு பிரச்சனை என்னாச்சு என்னாச்சுன்னு ஃபாலோ பண்ணிகிட்டே இருந்திருக்கிறாரு. இதனால் தான் இவ்வளவு விரைவாக பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதுன்னு சொல்றாங்க.. திமுகவுக்கு பிரச்சாரம் பண்ணுனதுனாலத் தான் வடிவேலுக்கு பிரச்சினை வந்துச்சு.அதனால நாமளே தீர்த்து வைப்போம்னு தீர்த்து வைச்சிட்டாரு ஸ்டாலின்.

அந்த வகையில் உடனடியாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு வடிவேலு நன்றி தெரிவிச்சதா சொல்றாங்க. விரைவில் 24ம் புலிகேஷி திரைப்பட படப்பிடிப்பு தொடங்குவதோட மேலும் படங்களில் வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு தனது காமெடி பயணத்தை தொடங்குவார் என்கிறார்கள்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தயவால மீண்டும் வந்துட்டாரய்யா ? வடிவேலு