2024’ல் 3வது முறையாக மோடியைப் பிரதமராக்க தீவிரமாக உழைக்கும் எதிர்கட்சிகள்! எதிர்க்கட்சிகளே மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியைப் பிடிக்க உதவி செய்யும் என அறிக்கைகள் வெளிவந்துள்ளன. தற்பொழுதைய அரசியல் கள நிலவரங்கள் மூன்றாவது முறை பிரதமர் பதவியில் மோடியை மக்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சிகளே ஆட்சி அமைக்க உதவும்ங்கிற சூழ்நிலை நிலவுது. இன்னும் சரியாக 13 மாத கால இடைவெளியில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்குது, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முதன்முறையாக பிரதமராக பதவி ஏற்றார் அதற்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்த காரணத்தினால் குஜராத் மாநிலத்தை வறட்சி மாநிலத்தில் இருந்து மாற்றி செழுமையான மாநிலமாக கொண்டு வந்த காரணத்தினால் இந்தியா முழுவதும் மோடி தேவைங்கிற மோடி அலை வீசுச்சு. அதன் காரணமா 2014 ஆம் ஆண்டு மிகப் பெரும்பான்மையுடன் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடிச்சது, அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்த காரணத்தினால் தான் இரண்டாவது முறையாகவும் மோடியே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை சரியான முறையில் கொண்டு வர ஜிஎஸ்டியை அமல்படுத்துதல் போன்ற திட்டங்களை பிரதமர் கொண்டு வந்த காரணத்தினால் இவர்தான் இந்தியாவின் சிறந்த தலைவர் என மக்கள் 2019 ஆம் ஆண்டும் தேர்ந்தெடுத்தனர். அது வரையில் பிரதமர் மோடியை பற்றி மக்கள் ஒரு சிலரிடம் இருந்து வந்த தவறான எண்ணம் அப்படியே மாறிப்போனது. இப்பொழுது மோடின்னாலே எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமா ஆகிட்டாரு. எதிர்க்கட்சிகள் 10 பேர் சேர்ந்து மோடி மேல அவதூறு பரப்பினாலும் அது மோடிக்குத் தான் சாதகமாக முடியுதே தவிர எதிர்க்கட்சிகளுக்கு பாதமாகத் தான் முடியுது. அதனால இப்போ மோடி மேல அவதூறு பேசுறதை பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் நிறுத்திட்டாங்க., அதன் காரணமா பிபிசி ஆவணப்படம், வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை இது போன்ற பிரச்சினைகளை முன்னெடுத்து பேசிகிட்டு வர்றாங்க. சமீப காலத்தில் பார்த்தீங்கன்னா மோடி மேல எந்த ஒரு எதிர்க்கட்சியும் வன்மத்தையோ, அவதூறையோ பரப்பாமல் இருந்து வர்றது குறிப்பிடத்தக்கது. காரணம் அவங்கள்லாம் ஒவ்வொரு முறையும் மோடி மேல வன்மம் பரப்பும் போது அந்த கட்சிகளுக்கு தான் நஷ்டம் ஆகிறதே தவிர பிரதமர் மோடிக்கு அது லாபம் ஆகுது.2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி பிரதமராவுறதுக்கு பாஜக காரங்களை விட தீவிரமா உழைச்சது பிரசாந்த் கிஷோர் தான்.காங்கிரஸ் தலைவர் ஒருவர் மோடி டீ வித்ததா சொல்றாங்க வேணும்னா காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன்னாடி வந்து மோடி டீ விக்கட்டும்ணு சொல்லியிருந்தாரு.
உடனே பிரசாந்த் கிஷோர் என்ன பண்ணுனாருன்னா வடமாநிலங்கள்ல எல்லா டீக்கடையிலயும் எல்இடி டிஸ்பிளே வச்சு டீ சாப்பிடவர்றங்க கிட்ட மோடிய பிரச்சாரம் பண்ணவச்சாரு.இது மாநிலம் முழுவதும் பரபரப்பா பேசப்பட்டுச்சு.கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி ஒரு புதிய புராடெக்ட அறிமுகப்படுத்துவாங்களோ அதே மாதிரி மோடிய புரமோட் பண்ணுனாங்க.
தமிழ்நாட்ல மறைந்த முதலமைச்சர் மோடியா இந்த லேடியான்னு பேசி பிரபலப்படுத்துனாங்க.வரப்போறத் தேர்தல்ல மோடிய எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஈசியா ஜெயிக்க வச்சிருவாங்க. எப்படியோ அவர்கள் மோடியை பற்றி பேசுகிறார்கள் என மக்கள் அதன் பின்னணியில் உள்ள உண்மையை தெரிந்து கொண்டு மோடியின் ஆதரவு மனநிலைக்கு மாறிடுறாங்க.. இந்த நிலையில் கடந்த இரண்டு முறை 2014, 2019 என பிரதமர் பதவியில் அமர்ந்த மோடி அடுத்து நடைபெறவிருக்கும் 2024 தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பாருன்னு அறிக்கைகள் சொல்லுது. இதன் காரணமாகவே பிராந்திய கட்சிகள் எனப்படும் மாநிலக் கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என இப்பொழுது அரசியல் வல்லுனர்கள் சொல்றாங்க. குறிப்பா ஆம் ஆத்மீ கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் பிரதமர் மோடி 3வது முறை பிரதமர் ஆகுறதுக்கு அஸ்திவாரமாக இருப்பாங்கன்னு தெரியுது. ஒருபுறம் ‘காங்கிரஸ் ஊழல் கட்சி. அவர்களுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. அடுத்த தேர்தலை தனியாகவே சந்திப்போம்’ன்னு கெஜ்ரிவால் அறிவிச்சிட்டாரு. மறுபுறம் மம்தா பானர்ஜியும், ‘அடுத்த லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்; தனியாகவே தேர்தலை சந்திப்போம்னு சொல்லிட்டாரு. கடந்த 2019 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மு.க.ஸ்டாலின் போன்ற மாநில கட்சிகள் அனைவரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்ய திட்டமிடப்பட்ட வேளையில் ஸ்டாலின் முந்திக்கொண்டு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்ன்னு அறிவிச்சாரு. அதுவே காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவா போய்டுச்சு. ஆனால் இந்த முறை மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க போவது இல்லை. மம்தா பானர்ஜி இப்போ காங்கிரசையே பாஜகவின் பி டீம்னு சொல்லிக்கிட்டு வர்றார். இந்த நிலையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மம்தாவின் ஆதரவு இல்லாமல் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவாக அமையாதுங்கிற நிலை ஏற்பட்டிருக்குது. மேலும் டெல்லி பஞ்சாப் என இரு மாநிலங்களை கையில் வைத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலோ திமுக போன்ற கட்சிகளுடன் சகஜமாக போனாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து இன்னமும் சற்று தள்ளியே இருக்கிறார். இதன் காரணமாகவே இவரை எதிர்க்கட்சி வரிசையில் ஒருங்கிணைப்பதும் இவரை எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வைப்பதும் சற்று சிரமமாகத்தான் இருக்கும். மேலும் கம்யூனிஸ்டுகள் இப்போ அதுவும் குறிப்பா கேரளத்தில் காங்கிரசை எதிர்த்தே அரசியல் செஞ்சுகிட்டு வர்றாங்க. கடந்த காலத்தில் ராகுல் காந்தியின் வயநாடு காங்கிரஸ் கட்சி அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இது எல்லாருக்குமே தெரியும். இப்படி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளரா கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்ப மாட்டாங்கன்னு தெளிவா தெரியுது. அந்த மாதிரி விரும்பாமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மூன்றாவது அணி உருவாவதற்கோ அல்லது மறைமுகமாக பாஜகவிற்கு உதவி செய்வது போன்ற அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார்கள். இப்படி பாஜக பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வைக்க செய்யும் முயற்சியை விட எதிர்க்கட்சிகள் எல்லாரும் சேர்ந்து செய்யும் முயற்சியே பிரதமர் மோடியை நிச்சயம் 2024ல் மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைக்கும்னு இப்பொழுது அரசியல் வல்லுனர்கள் அடிச்சி சொல்றாங்க. நிலைமையும் அப்படித்தான் போய்க்கிட்டிருக்குது, ஆய்வு அறிக்கைகளும் அப்படித்தான் சொல்லுது.எதிர்க்கட்சிகளிடையே உள்ள குழப்பம் இன்னமும் தீர்ந்த பாடில்லை.ஆனா பாஜக எதைப் பத்தியும் கவலைப் படாம தேர்தல் வேலைகளைப் பாத்துகிட்டு தான் இருக்குது.
இப்படிப்பட்ட சூழ்நிலைல பா.ஜ.க தனி வியூகம் வகுத்து வருதுன்னு சொல்றாங்க. பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலில் கைநழுவிய 160 தொகுதிகளை கையில் எடுத்து கூடுதல் கவனம் செலுத்திகிட்டு வருது. அடுத்த ஆண்டு வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே பா.ஜ.க தீவிரமா தயாராகிட்டு வருது. பாராளுமன்ற தேர்தலில் மனசுல வச்சு பல்வேறு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் சுற்றுப்பயணம் செஞ்சு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிமுகம் செஞ்சு வச்சு அதுல கிடைக்கும் பயன்களை மக்கள் பெறணும்னு பேசிக்கிட்டு வர்றார். நிறைவடைந்த பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பது, பிரமாண்டமான பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதுன்னு பல்வேறு வியூகங்களை பாரதிய ஜனதா செய்து வருது. அந்த வகையில் தற்பொழுது இருக்கும் தொகுதிகளை தக்க வைப்பதில் எல்லா கட்சிகளும் தீவிர கவனம் செலுத்துகிறது. ஆனால் பா.ஜ.க கடந்த தேர்தலில் கைநழுவிய 160 தொகுதிகளை கையில் எடுத்து அந்த தொகுதிகள்ல கூடுதல் கவனம் செலுத்தி வருது. வருகின்ற தேர்தல் சமயத்துல இந்த தொகுதிகளை கைப்பற்றத் தேவையான திட்டங்களை அவங்க வகுத்துட்டு வர்றாங்க. 80 தொகுதிகளை அமித்ஷாவும் 80 தொகுதிகளை J. P.நட்டாவும் தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்து இருக்கிறாங்க. அனைத்து தொகுதிகளிலும் பொறுப்பாளர்களாக தேசிய பொது பொறுப்பாளர்கள் மூணு பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறாங்க.. இந்த தொகுதிகளில் அதிகபட்சமாக ஐந்து தொகுதிகள் கொண்ட தொகுப்பாளர்களாக பிரித்து விடப்பட்டு இருக்குது. ஒவ்வொரு தொகுதிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அழைத்து பிரம்மாண்டமான அணிகள் இணைப்பு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்குது. 45 முதல் 55 பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த தற்போது வரை திட்டமிட்டு இருக்கிறாங்க. தேர்தல் நேரத்தில் இந்த 160 தொகுதிகளுக்கான பிரச்சாரங்கள் செலவுகள் மற்றும் செலவுகளை விட சற்று கூடுதலாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்குது.
இதுக்கிடையில திமுக தலைமையில் கூட்டணி அமைந்தால் தன்னால் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியும்ங்கிற கணக்கிலும் முதல்வர் ஸ்டாலின் இருந்து வருவதாக தெரியுது, இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு அறிக்கையில் எதிர் வரும் 2024 தேர்தலில் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு தான் அதிக ஆதரவு இருப்பதாகவும், பிரதமர் மோடி தான் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக வரவேணும்னு மக்கள் நினைத்து வருவதால் கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகளில் எதிரொலிக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய அரசியலில் நாம் இறங்க வேண்டும் அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து நம்மால் ஒரு பெரிய சக்தியாக நிறுத்திக்கொள்ள முடியும்னு திமுக தரப்பு கணக்கு போட்டு வரும் சமயத்தில் 2024 தேர்தலிலும் பாஜக தான் வெற்றி பெறும்ங்கிற கருத்துக்கணிப்பு, உளவுத்துறை அறிக்கை முதல்வர் ஸ்டாலினை தூக்கத்தை கெடுப்பது போல் அமைஞ்சிருக்குதுன்னு சொல்றாங்க. வட மாநிலங்கள்ல பாஜகவுக்கு செல்வாக்கு இருந்தாலும் தென் மாநிலங்கள்ல அதிலும் குறிப்பா தமிழ்நாட்டுல நிலமை மோசம்.இந்த இக்கட்டான சூழ்நிலைல தமிழகத்துல பாஜக தலைமைக்கு திடீர் குழப்பம் ஏற்பட்டிருக்குது.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்துச்சு. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினாரு. அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினாரு. மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது தான் பரபரப்பை ஏற்படுத்திடுச்சி அண்ணாமலை பேச்சு தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார். ராஜினாமா செய்வேன் நான் தேசிய மேனேஜர் அல்ல, கட்சியின் மாநில தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்குது. என் ஸ்டைலில் செயல்பட முடியலன்னா நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்னு பேசினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு இருக்கிறேன். கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறதுனால வருகிற மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன் என்றும் அண்ணாமலை பேசினாரு., கரு. நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி இரண்டு பேரும் பரபரப்புடன் எழுந்து நீங்கள் இப்படி பேசக்கூடாதுன்னு சொன்னாங்க.லோக்சபா தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக மத்திய அளவில் கூட்டணியை வலிமைப்படுத்த எதிர்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி பிளவுபடும் சூழ்நிலை உருவாகி வருது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.ஆனா பாஜகவைப் பொறுத்த வரைக்கும் வெற்றிதான் முக்கியம்.ஆனானப்பட்ட எல்.கே.அத்வானி. முரளி மனோகர் ஜோஷியவே தூக்கி எறிஞ்சவங்களாச்சே.
அண்ணாமலைய தூக்கி எறியிறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்.பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.