கவர்னர் ஆகிறார் ரஜினிகாந்த் ?

கவர்னர் ஆகிறார் ரஜினிகாந்த் ?..பச்சைக்கொடி காட்டிய பாஜக மேலிடம் ! ரஜினிகாந்த் ஆளுநராக போகிறார்ங்கிற தகவல்கள் வட்டமடிச்சிக்கிட்டு வரத் தொடங்கியிருக்குது… ரஜினியை வைத்து பாஜக மிகப்பெரிய பிளானை போட்டு வர்றதாகவும் சொல்லப்படுது. ரஜினி ஆளுநரைச் சந்திக்க ப என்ன காரணம்? இது தான் தமிழக அரசியல் களத்தில எல்லாருடைய கேள்வியும். விரைவில் எம்பி தேர்தல் வர இருக்குது.. இதுக்காக தமிழகத்தை நோக்கி இப்போதே பாஜக மேலிடம் காய் நகர்த்த தொடங்ங்கிடுச்சி. இதுக்கிடைல, சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.. அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கலைங்கிறார். ஆளுநர் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநரை நிறைய புகழ்ந்து பேசினார். “மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.. 30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன்.. அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர்.. ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார்.. முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது.. இங்கே உள்ள ஆன்மீக உணர்வை அவர் ரொம்ப நேசிக்கிறார்.. தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன்னு ஆளுநர் சொல்லி இருக்கிறாரு. தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது” என்றார் ரஜினி. அரசியல் காரணங்களுக்காக பேசினேன் என்று வெளிப்படையாக சொன்ன ரஜினி, அது என்னங்கிறத சொல்ல மறுத்திட்டாரு.. இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுகவின் கேசி பழனிசாமி புதுகுண்டை ஒன்றை தூக்கி போட்டார்.. அதன்படி, “அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை அதிமுகவுக்குள் கொண்டு வந்து, அவரை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிடுது” என்று கூறியிருந்தது, அதற்கு மேல் பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது ஏற்கனவே, திமுகவுடன் ஆளுநருக்கான உரசல் அதிகமாகி உள்ள நிலையில், ஆளுநரின் தொடர் வெறுப்பரசியல் பேச்சால், திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், ஆளுநர் ரவி மீதான இமேஜை உயர்த்தி ரஜினி பேசியிருந்தது, பல்வேறு தரப்புக்கு கடுப்பை ஏற்படுத்தியிருந்தது.. அரசியலுக்கு வரப்போவதில்லைன்னு ரஜினியே ஓபனாக அதே செய்தியாளர் கூட்டத்தில் சொல்லிவிட்ட நிலையில், ரஜினியால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் வராதுன்னு ஒரு தரப்பு சொல்லுது. ஆளுநருடன் ரஜினி என்ன பேசியிருப்பாருங்கிற யூகங்கள் வட்டமடித்து வந்தாலும், எப்படியும் ரஜினியை பாஜக முழுமையாகவே பயன்படுத்தி கொள்ளக்கூடும், அவரை இந்த முறை லேசில் நழுவ விடாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், ரஜினியை பாஜகவுக்குள்ளேயே ஒரு தரப்பு விரும்புது, இன்னொரு தரப்பு விரும்பலையாம்.. அதாவது, மோடி தரப்பில் ரஜினியை விரும்புறாங்களாம், ஆனால், அமித்ஷா தரப்பில் அந்த அளவுக்கு ரஜினி விஷயத்தில் ஆர்வம் காட்டப்படலையாம். இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவல் தீயாய் வட்டமடிச்சிட்டு வருது.. இப்போதைக்கு சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே இருப்பதால், இவைகளில் சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம்ன்னு கூட ஆலோசிக்கப்பட்டதாக, ஒரு வார பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது… இந்த தகவல் ஓரளவுக்கு உண்மைன்னு இப்போ டெல்லி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுதாம்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் ரஜினிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லைங்கிறது ஊரறிஞ்ச விஷயம்.இது பாஜவுவுக்கும் தெரியும். அதிலும், 1996-களில் இருந்த ஆதரவு அலை இப்போ படிப்படியா குறைஞ்சிட்ட நிலையில், இழந்த கிரேஸை அவருக்கு எப்படி மீட்டு தர்றதுன்னும் பாஜக யோசிச்சுகிட்டு வருதாம். என்ன பிளான் போட்டிருக்காங்கன்னா ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து, சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும், இழந்த ஆதரவை அறுவடை செய்யலாம்ன்னு பாஜக நினைக்குதாம்.. இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பாஜக தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுது.. ஒருபக்கம் கவர்னர் பதவி, இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் இழுத்து, மக்களின் வாக்குகளை பெர்றதுங்கிற இரண்டுவித திட்டங்களை பாஜக கையில் எடுத்திருப்பதாக டெல்லி தகவல்கள் தீயா பறந்துகிட்டு இருக்குதாம்.. ஆகமொத்தம், ரஜினியை இப்போதைக்கு விடுவதாக இல்லை போலும்..!