திமுகவில் உள்ள தலைகளை காலிசெய்யபோகும் அண்ணாமலையின் ஊழல் பட்டியல் ! ‘என்னப்பா பில்லு தானே வேணும் இருங்கப்பா ஊழல் பட்டியலோட சேர்த்து அனுப்புறேன்’ன்னு அண்ணாமலை தன்னோட முடிவில தீர்க்கமாக இருக்கிறாரு.ஏன்ப்பா அவசரப்படுறீங்க பில்லோட சேர்த்து மொத்த ஜாதகமும் ரெடி’ப்பான்னு சொல்லியிருக்காரு. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது, குறிப்பாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் பட்டியல் ஒண்ணு வெளியாகப்போகுது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னமாதிரி திமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்களோட சொத்து பட்டியல், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியல் போன்றவற்றை ஏப்ரல் 14 ந்தேதி வெளியிடப் போகிறேன்னு சொன்னதுமே அரசியலில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அண்ணாமலையை விமர்சனம் செய்றேங்கிற பெயரில் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் என்ன விலை, அது யார் மூலமாக வாங்கினார் போன்ற விவரங்களை வெளியிட முடியுமான்னு கேள்வி கேட்டிருந்தாரு.. இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுச்சு. இதுக்கு பதிலளித்த அண்ணாமலை என்ன சொன்னாருன்னா, ‘நான் காவல்துறை அதிகாரியாக இருந்து நேர்மையான முறையில் சம்பாதித்தேன் அதற்கு வரியும் காட்டியிருக்கிறேன், அதற்கான எல்லா ரசீதுகளும் எங்கிட்ட இருக்குது. இந்த வாட்ச் வாங்கிய பில் கூட இருக்குது, அதற்கான பில்லை நான் வரும் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக வெளியிடுவேன் அப்போது வாட்ச் பில் மட்டுமல்லாமல் ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடுவேன்னு சொல்லியிருந்தாரு மேலும், ‘எனது வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் வரும். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்க இருக்குதுங்கிற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். அதைப் பார்த்து, நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும். எனவே ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த சொத்து பட்டியல் முழுவதும் இணைய தளத்தில் வெளியிடுவோம். அதன் நகல் பென்டிரைவ் வடிவில் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும். எனது 10 ஆண்டு வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்தும் அதில் வரப் போகுது. அதை பார்த்ததற்கு அப்புறம் 420 யார் என்று தெரியும். அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம்’ என ஒரே அடியாக அடித்தார்.அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தரப்பில் யார் யார் பெயர் அந்த பட்டியலில் இருக்குமோ என்பது போன்ற கடும் விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலில் அவர் பெயர் இருக்குமோ? இவர் பெயர் இருக்குமோ? அவர் இருப்பாரோ? இவர் இருப்பாரோ? இவர்தான் நிறைய சொத்து சேர்த்துள்ளார்! அவர் தான் நிறைய சொத்து சேர்த்துள்ளார்! என்பது போன்ற விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் இப்போது திமுக தரப்பில் எங்கே அண்ணாமலை வாட்ச் பில்? ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது வாட்ச் பில் இன்னும் வரலையே? இன்னும் காணோமேங்கிற திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேச துவங்கி விட்டனர், இவ்வளவு ஏன் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிச் சென்ற ஒரு சிலர் கூட எங்கே இன்னும் அண்ணாமலை வாட்ச் பில் கொடுக்கலைன்னு கேள்விகளை அதிகம் கேட்டு வந்தனர், இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக அண்ணாமலை நெத்தியடி பதில் ஒன்றை கூறியுள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஏப்., 14ல் தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியல் மற்றும் ரபேல் கடிகாரத்திற்கான பில் வெளியிடப்படும். அந்த ஊழல் பட்டியலில் திமுக பிரமுகர்கள் குவித்து வைத்துள்ள சொத்துக்கள் அவர்கள் குடும்பத்தின் பெயரில் உள்ள சொத்துக்கள், அவர்கள் பெயரில் நிறுவனங்கள், அவர்கள் வாங்கி குவித்துள்ள அயல்நாட்டு சொத்துக்கள், அவர்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குகள் அதில் குவித்து வைத்துள்ள மாபெரும் தொகை போன்ற அனைத்தும் வெளியிடப்படும்னு பேசியிருந்தாரு.. கடந்த 3 நாட்களாக சமூக வலைத்தளத்தில் அண்ணாமலையை விமர்சிக்கிறேங்கிற பேர்ல பில் எங்கேன்னு நக்கலடித்த சிலருக்கு இதன் மூலம் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட போகும் பட்டியலில் என்னென்ன அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முக்கிய வட்டாரத்தில் விசாரித்த பொழுது சில முக்கிய அமைச்சர்களின் பெயர்களை இலைமறைவு காயாக வெளியில் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமான நிர்வாகி ஒருவர், அண்ணாமலைக்கும் அமைச்சருக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறதா அந்த அமைச்சர் தொடர்பான ஊழல் புகாரை தான் பிரதானப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் அண்ணாமலை. அதேபோல் சமீபத்தில் தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருளை விநியோகம் செய்யும் முக்கியத்துறை சார்ந்த ஒரு சில ஆவணங்கள் குறித்தும் தகவல் வெளியிடப் போகிறாராம். அது மட்டும் இல்லாமல் ஜோதி மாவட்ட அமைச்சர் தொடர்பாகவும் சில ஆவணங்களையும் இலாக்கா மாற்றம் சர்ச்சை குறித்த ஆவணங்களையும் அண்ணாமலை வெளியிடப் போவதாக கூறப்படுது. மேலும் தமிழகத்தின் மோஸ்ட் சீனியர் அமைச்சரின் நிர்வகித்துறை தொடர்பாகவும், இனிப்பு பெயரைக் கொண்ட அமைச்சர் துணைக் குறித்த சில ஆவணங்களையும் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் பெண் அமைச்சர் ஒருவரின் துறையில் நடந்த குளறுபடிகள் குறித்த ஆவணங்கள் வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில அமைச்சர்களின் சொத்து பட்டியல் முதலீடுகள் குறித்தும் ஆவணங்கள் வெளியிடப் போகிறாராம் அண்ணாமலை! இந்த பட்டியல் முதற்கட்டமானது தான் எனவும் இனிவரும் காலங்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்புது பட்டியல் வெளியிடப்படும் என்றும் அழுத்தம் திருத்தமாக சில நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இதுவரை அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளாகவே இருந்திருக்கின்றன, தற்பொழுது முறையான ஆவணங்களுடன் முறைகேடுகள் குறித்த தகவல் வரும் என முக்கிய இடத்திலிருந்து செய்தி வந்துள்ளது.
மேலும் அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலிரி தமிழகத்தில் 2024 தேர்தலில் போட்டியிடும் சிலரின் பெயர்கள் இருப்பதாகவும் அவர்கள் பெயரில் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டால் அது அமலாக்கத்துறை வரை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரியுது. அப்படி அமலாக்கத்துறை வரை சென்று நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அவர்கள் 2024 தேர்தலில் போட்டியிடாத சூழல் உருவாகும் வாய்ப்புள்ளது. இப்படி இக்கட்டான சூழலை சிலருக்கும் அண்ணாமலை வெளியிடப்போகும் பட்டியல் ஏற்படுத்தவிருக்கிறது. மேலும் தமிழக அரசியல் களத்தில் கூட்டணி மற்றும் 2024 தேர்தலை நோக்கிய பயணத்தில் அண்ணாமலை வெளியிடப்போகும் இந்த பட்டியல் கண்டிப்பாக அதிர்வலைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சிலர் சிறை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்குது.
மேலும் அண்ணாமலை தமிழக பாஜகவின் தற்போது இருக்கும் நிலை மற்றும் வருங்காலத்தில் செய்ய வேண்டியது குறித்து அமித்ஷாவிடம் இரண்டு மணி நேரம் இது குறித்து பேசி இருக்காராம். தமிழகத்தில் 25 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதையும் அண்ணாமலை அப்போ சொன்னாராம். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு பற்றி அண்ணாமலை என்ன சொல்றாருன்னா, ‘கூட்டணி பத்தி அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிஞ்சிருக்கணும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. ஆனால் கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா மற்றும் நட்டா போன்றோர் தான். 2024, 2026, 2030 போன்ற தேர்தல்கள் எப்படி இருக்கும் என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவிச்சிருக்கேன். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்னால் கிளீன் பாலிடிக்ஸை பார்ப்பீங்க. . தேசியத் தலைவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். அதிமுக கூட்டணியில் உள்ள கொள்கை, எங்கு நிற்க வேண்டும், எத்தனை சீட்டுகள் என்பதில் தான் வாதம் போய்கிட்டிருக்கு. எதுவும் இங்கே கல்லில் எழுதப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறேன் அவ்வளவுதான்’ என தெளிவாக சொன்னார். இப்போதைக்கு தமிழக அரசியலில் எதிர்பார்ப்பாக இருப்பது அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல் பட்டியல்தான்.
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். DMK Files ங்கிற அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் படங்களுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதுக்கிடையில முதல்வர் ஸ்டாலின் அடிமை ஊடகங்களுக்கு அன்புக் கட்டளை போட்டிருக்காராம்.நாளை அண்ணாமலை வெளியிட இருக்கும் பட்டியலை யாரும் போட வேண்டாம்ன்னு சொல்லியிருக்காராம்.இதெல்லாத்தையும் பத்தி தெரிஞ்சுகிட்ட அண்ணாமலை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடலாம்னு முடிவு பண்ணியிருக்காராம்.