ரஜினி தலைமையில் அதிமுக… திமுகவை வீழ்த்த பாஜகவின் மாஸ்டர் பிளான்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலயுடனான ரஜினியின் திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை பத்த வைச்சிருக்குது. ஓபிஎஸ்- இபிஎஸ்ஸுன்னு இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ள அதிமுகவை ரஜினியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, திமுகவை வீழ்த்தும் பாஜகவின் மாஸ்டர் பிளானின் ஆரம்பமாகவே ரஜினியின் ஆளுநர் சந்திப்பு அரசியல் ரீ என்ட்ரியாகப் பார்க்கப்படுது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ரஜினி திடீர் சந்திப்பு
திமுகவை வீழ்த்த ரஜினியை வைத்து பாஜக போடும் மாஸ்டர் பிளான்.
அதிமுகவை ரஜினியின் கைக்கு கொண்டு வரவும் பாஜக திட்டமாம்
போர் வரட்டும்… புரட்சி வெடிக்கட்டும்…என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி, தனது ரசிகர்களை உசுப்பேத்தி அவர்களுக்கு அரசியல் ஆர்வத்தை மூட்டிய ரஜினிகாந்த், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னால , தன்னோட உடல்நிலையைக் காரணங்காட்டி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிச்சு பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றினாரு.
ரஜினியின் அந்த அறிவிப்புக்கு பிறகு, எல்லாரும் போய் அவங்க அவங்க பேரன்,பேத்திகளை நல்லா படிக்க வையுங்கய்யான்னு டயலாக் பேசாத குறையாக நொந்துப் போயிருந்த அவரது ரசிகர்களுக்கு மீண்டும் அரசியல் ஆசையை தூண்டும் விதமாக இன்றொரு சம்பவத்தை நிகழ்த்தியிருக்காரு
சூப்பர் ஸ்டார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்திந்த ரஜினி, மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் அவருடன் அரசியலும் பேசியதாக கூறி, தமிழக அரசியலில் நெருப்பை பத்த வைச்சிருக்காரு.
இபிஎஸ்- ஓபிஎஸ்ஸுன்னு இரண்டு அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவை ரஜினியின் கைக்கு கொண்டு வரும் பாஜகவின் மாஸ்டர் பிளானின் ஆரம்பம்தான் ஆளுநருடனான அவரது இன்றைய. சந்திப்புன்னு தமிழக அரசியல் அரங்கில் பரவலாக பேச்சு எழுந்திருக்குது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னாடி கொஞ்ச காலம் அதிமுக ஓபிஎஸ் -இபிஎஸ்ஸுன்னு இரண்டு அணிகளாகவே பிரிந்துதான் இருந்தது. அப்போது இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்து இபிஎஸ் தலைமையில் நான்காண்டு காலம் அதிமுக ஆட்சி நடைபெற வழிவகுத்தது பாஜக என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், அதே பாஜக இன்று ஒற்றைத் தலைமை யுத்தத்தால் மீண்டும் இரண்டுபட்டு கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க முயற்சிக்காது ஏன்ங்கிற கேள்வியின் பின்னணியில்தான் ரஜினியின் அரசியல் ரீஎன்ட்ரி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படு சட்டது.
ஓபிஎஸ்ஸுடன் இனி சமாதானமாக போவதற்கு வாய்ப்பே இல்லைன்னு பாஜகவின் டெல்லி மேலிடத்திடமே இபிஎஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்ட நிலையில், பாஜகவுக்கு எப்போதும் போல் ஓபிஎஸ் மீது கரிசனம் இருந்து வருது. அத்தோட தம்மை முதல்வரா்க்கிய சசிகலாவுக்கும், நான்காண்டுகள் முதல்வர் பதவியில் நீடிக்க முழு ஒத்துழைப்பு அளித்த ஓபிஎஸ்ஸுக்கும் விசுவாசமாக இல்லாமல், சந்தர்ப்பம் பார்த்து இருவரையும் கழற்றிவிட்டு இன்று கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நம்பகத்தன்மை மீது பாஜக தலைமைக்கு பெருத்த சந்தேகம் இருக்குதாம்.
அதனால அதிமுகவில் இப்போதுள்ள பிளவைப் பயன்படுத்தி கட்சியின் மிகப்பெரிய பலமாக உள்ள இரட்டை இலை சின்னத்தை முடக்கி, இபிஎஸ் அன்கோவை தனிமைப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்தோட இபிஎஸ்சின் இடத்துக்கு ரஜினியை கொண்டு வந்து , ஓபிஎஸ் மற்றும் சசிகலாவை அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த அதிமுகவையும் ரஜினிியின் கைக்கு கொண்டு வருவதுதான் பாஜகவின் மாஸ்டர் பிளான்னு சொல்றாங்க அரசியல் விவரம் அறிந்தவர்கள்.ஆளுநருக்கு பிஆர்ஓவாக மாறும் ரஜினிகாந்த்? அப்படி என்னதான் பேசினார்?
அப்படி ரஜினியின் கட்டுப்பாட்டில் அதிமுக வந்துவிட்டால், ஸ்டார் அந்தஸ்துடன் அக்கட்சி மீண்டும் பலம் பெற்றுவிடும். அதனுடன் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை காலி செய்துவிட்டு தமிழகத்தில் வேரூன்றிவிடலாம் என்பதுதான் பாஜகவின் தொலைநோக்கு திட்டமாம்.
தமது டெல்லி பயணத்தை முடித்த கையோடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ள நிகழ்ச்சி தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ஆளுநருடனான தமது சந்திப்பு மரியாதை நிமித்தமானதுன்னு வழக்கமாக சொல்வதை போன்றே அன்றும் ரஜினி செய்தியாளர்களிடம் கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், ‘ஆளுநருடன் நான் அரசியலும் பேசினேன்; ஆனா எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை’ன்னு முன்னுக்கு பின் முரணாக ரஜினி சொன்னது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.அது என்னான்னா
அதிமுகவில் இப்போதைக்கு இபிஎஸ் அன்கோவின் கை ஓங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை அரவணைத்து போவதாக தெரியலை. இது இருவரும் எப்போதும் போல் இணைந்திருக்க வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்துக்கு மாறானது. நான்காண்டுகள் தங்களது ஆசியுடன் ஆட்சி நடத்திட்டு, இப்போ இபிஎஸ் இப்படி விடாபிடியாக நடந்துக் கொள்வதை பாஜக மேலிடம் ரசிப்பதாக தெரியவில்லை.
அதனால தங்களுடைய சொல் பேச்சை மதிக்காத இபிஎஸ் அன்கோவை காலி செய்யும் திட்டத்துடன் அதிமுகவை ரஜினியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மாஸ்டர் பிளானை பாஜக செயல்படுத்த தீர்மானித்திருக்கலாம் எனவும், அதன் வெளிப்பாடாகவே ரஜினி ஆளுநரை சந்தித்துள்ளார் என்றும் ஒரு யூகம் வலம் வந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் நாற்காலி மேல எனக்கு என்னைக்குமே ஆசை இருந்ததில்ல ஆனா ஒரு கட்சிக்கு வேண்டுமானா தன்னால தலைவராக இருக்க முடியும்ன்னும் முன்பொரு முறை ரஜினிகாந்த் பொதுவெளியில் சொல்லியிருந்தாரு. அதாவது கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர்.ங்கிற பார்முலாவை ரஜினி சொல்லியிருந்தார்.
அந்த பார்முலாவின்படி, ரஜினி மக்கள் மன்றத்துக்கு அப்படியே அரசியல் சாயம்பூசி, அதனுடன் கூட்டணி வச்சு, இபிஎஸ்… ஓபிஎஸ்… ஏன் மோடி இமேஜியினாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கிடைக்காத தேர்தல் வெற்றியை ரஜினிங்கிற இமேஜின் மூலம் அறுவடை செய்யவும் பாஜக திட்டம் தீட்டியிருக்கலாம்ன்னும் யூகிக்கப்படுது.
இனியும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லைன்னு இன்றும் ரஜினி கூறியுள்ளதன் அடிப்படையில், இனிவரும் தேர்தல்களிலும் அவர் கட்சி ஆரம்பிக்காமல், பாஜகவுக்கு நேரடியாக வாய்ஸ் கொடுக்க வாய்ப்புள்ளது. அதற்கான அச்சாரம்தான் ஆளுநருடனான சமீபத்திய சந்திப்புன்னும் அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க.
ஏன்னா 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது, ‘நதிகளை இணைப்போம்ன்னு யார் வாக்குறுதி அளிச்சிருக்காங்களோ அவங்களுக்கு வாக்களியுங்கள்ன்னு பாஜகவுக்கு மறைமுகமாக வாய்ஸ் கொடுத்தவர்தான் ரஜினி. அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் பாஜகவுக்கு அவர் நேரடியாக வாய்ஸ் கொடுக்க வாய்ப்புள்ளதாகவே தெரியுது.
இந்த யூகங்களுக்கு எல்லாம் ரஜினி பதில் சொல்லாட்டாலும் இதுல ஏதோ ஒண்ணை நோக்கி அவரை பாஜக நகர்த்தி வருதுங்கிறது மட்டும் உண்மைங்கிறாங்க பாஜகவின் நுணுக்கமான அரசியலைப் பத்தி தெரிஞ்சவங்க.
திட்டம் என்னமோ நல்லாதான் இருக்கு ஆனால் எம்ஜிஆர். ஜெயலலிதா இடத்தில் வைத்து ரஜினியை அதிமுக தொண்டர்கள் பார்ப்பார்களாங்கிறதுதான் மில்லியன் டாலர் கேள்விங்கிறாங்க அரசியல் விமர்சகர்கள்.