தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலையை நியமித்து பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

அண்ணாமலையின் அப்பா பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம். இப்போதும் அங்கே 72 ஏக்கர் நிலமிருக்கிறது.விவசாயத்தில் அதிக ஈடுபாடு உடையவர். அப்பா பத்தாவது வரை படித்தவர். அம்மா ஆறாவது வரை படித்தவர். விவசாயக் குடும்பம். சின்ன வயதில் இருந்து கல்வி குறித்து மிகுந்த முயற்சி எடுத்தார்கள். கரூரில் ஏழாவது வகுப்பு வரை படித்தார். பரமத்தி வேலூரில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து முடித்து விட்டு கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்துள்ளார்.பலருக்கும் கனவாக இருக்கும் ஐ.பி.எஸ் தேர்வை தனது 25 வயதிலேயே எழுதி, ஜெயித்தவர் இந்த அர்ஜுன் அண்ணாமலை.கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை 2019ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின் பாஜகவில் இணைந்தார். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று பாஜகவில் சேர்ந்த பின்னர் அண்ணாமலை பேட்டியளித்த அடுத்த சில தினங்களிலேயே அவருக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது அப்போது பாஜகவுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராகி உள்ளார்..

தமிழ்நாடு பாஜக தலைவராக பல சீனியர்களுக்கு மத்தியில் அண்ணாமலை தேர்வானது எப்படி என்று விவரங்கள் வெளியாகி இருக்குது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன நிலையில் தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தலைவராகி உள்ளது சீனியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.. எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆன பின் தமிழ்நாடு பாஜகவின் தலைவர் யார் என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்தது. இதற்கான லிஸ்ட் ஒன்றை எல். முருகன் மேலிடத்தில் அளிப்பார், மேலிடத்தில் அந்த லிஸ்டை சோதனை செய்துவிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள் என்றெல்லாம் தகவல்கள் வந்தன. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்ய சில நாட்கள் ஆகலாம் என்று கருதப்பட்டது.  ஏன்னா தமிழிசைக்கு பின் எல். முருகனை நியமிக்க தேசிய பாஜக தலைமை பல நாட்கள் எடுத்துக்கொண்டது. நீண்ட இடைவெளிக்கு பின்பே இந்த நியமனம் செய்யப்பட்டது. இதனால் இந்த முறையும் அதேபோல் நீண்ட தாமதத்திற்கு பின், மேலிட ஆலோசனைகள், பரிந்துரைக்கு பின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஆலோசனைகளும், தாமதங்களும் செய்யாமல் நேரடியாக அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் ஆகியுள்ளார். எச். ராஜா. நயினார் நாகேந்திரன், இல கணேசன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். இவர்களுக்கு இடையில் அண்ணாமலை திடீரென தலைவரானது எப்படி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு பின் நான்கு விஷயங்கள் நடந்து உள்ளது.  முதலாவதாக எல். முருகன் மற்றும் 4 எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போதே புதிய தலைவருக்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அப்போதே ஆலோசனைகள் எல்லாம் ஓவர் என்கிறார்கள். அப்போதே வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் அண்ணாமலை பெயரை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்திலேயே இவர் டாப் லிஸ்டில் வந்துவிட்டார்.  இது போக, கர்நாடக பாஜகவை சேர்ந்த சிடி ரவி தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக இருக்கிறார். இவர் அண்ணாமலைக்கு மிக மிக நெருக்கமானவர். கர்நாடகாவில் போலீசாக இருந்த போது ஏற்பட்ட நட்பு இது. அண்ணாமலை ஒரு வகையில் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வரவே சிடி ரவிதான் காரணம்னு சொல்றாங்க. இந்த நிலையில்தான் அண்ணாமலையை தமிழ்நாடு தலைவராக்க இவர் தீவிரமாக சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது போக அண்ணாமலை பிரதமர் மோடி, அமித் ஷாவின் குட்புக்கில் இருக்கிறார். என்கிறார்கள். பாஜக எப்போதும் சில மாநிலங்களில் நிகழ்காலத்தை விட எதிர்காலத்தை மனதில் வைத்தே திட்டங்களை வகுக்கும். அந்த வகையில் சீனியர்களை விட அண்ணாமலையை தலைவராக்கினால் மட்டுமே எதிர்கால தேர்தல்களில் பாஜக தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற முடியும் என்று நினைக்கிறது. இதனால் நேரடியாக மோடி, அமித் ஷா ஆகியோர் வேறு பெயர்களை கூட பார்க்காமல் அண்ணாமலையை டிக் அடித்ததாக தெரிகிறது. இதெல்லாம் போக கொங்கு மண்டலம் என்ற காரணமும் உள்ளது. அண்ணாமலை கொங்கு பகுதியை சேர்ந்தவர். பாஜக தமிழ்நாட்டில் வலுவாக உள்ள மண்டலங்களில் கொங்கு டாப்பில் உள்ளது. இதனால் அங்கிருந்துதான் தலைவர் வர வேண்டும் என்பதில் தேசிய மேலிடம் உறுதியாக இருந்துள்ளதாக தெரிகிறது. கோவையின் சிபி ராதாகிருஷ்ணனை இதற்கான லிஸ்டில் வைத்து இருந்தாலும், அவரை தலைவராக்க பெரிய அளவில் தேசிய தலைமை விரும்பவில்லை என்கிறார்கள். இதன்பின்தான் அண்ணாமலையை தலைவராக்குவதை உறுதி செய்துள்ளனர். . துணை தலைவராகவும் இவரின் செயல்பாடு டெல்லி தலைமையை கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதன்பின்பே இவரை தமிழ்நாடு பாஜக தலைவராக தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காவிக் கொடியை பறக்க விட்ட பாஜகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. எப்படியாவது இங்கு கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி தீவிரமாக இங்கு பணியாற்றி வருகிறது. கந்த சஷ்டி, கருப்பர் கூட்டம், வேல் யாத்திரை என்று பல ஆயுதங்களை கையில் எடுத்தாலும், அக்கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.
உதாரணமாக கடந்த மக்களவை தேர்தல் முடிவில் நாடு முழுவதும் ஒரு முடிவெடுக்க, தமிழகம் மட்டும் அதற்கு நேர் எதிரான முடிவை எடுத்தது. தேர்தல் முடிவுகளில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக படு தோல்வி அடைந்தது. தமிழ்நாடு திராவிடம் பேசும் மண் என்பதால் இங்கு தேசிய கட்சிகளை அந்நியர்களாக பார்க்கும் பழக்கமும், பிரிவினைவாதம் பேசுபவர்களுக்கு இங்கு இடம் இல்லை என்று சொல்லும் பழக்கமும் இருப்பதால், பாஜகவுக்கு தமிழ்நாடு அவ்வளவு எளிதாக இடம் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியடைந்துள்ளதுபாஜக மாநில துணைத் தலைவராக இருக்கும் போது அண்ணாமலை அளித்த பேட்டியில், பாஜகவின் வளர்ச்சி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இளைஞர்கள் அதிகமாக கட்சிக்குள் வருகிறார்கள். அணுக்கக்கூடிய தலைமை இருக்கிறது. சுமூகமாக அணுகக் கூடிய கட்சி பாஜக என்றார்.

அதேசமயம், கட்சியின் பலவீனமான அம்சங்களை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அடித்தட்டில் அதிகமாக வேலை பார்க்க வேண்டும். திராவிட கட்சிகளில் கழகச் செயலாளர்கள் வலுவாக இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பாஜகவில் இல்லை. அதற்காக நிறைய வேலை பார்க்க வேண்டும். ஏசி கார்களில் செல்லாமல் கீழிறங்கி வேலை பார்க்க வேண்டும். மக்களின் தினசரி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். மக்களுடன் பயணம் செய்ய வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், “இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்கள் என்ற மதவாத சாயம் பாஜக மீது படிந்துள்ளது. அதனை துடைக்கப் பாடுபட வேண்டும். நமது பேச்சுகளில் அப்படிக் காணப்படுகிறது. அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பாஜகவின் சித்தாந்தம் யாருக்கும் எதிரானது கிடையாது. அதனை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மக்களுடனான தொடர்பியலை இன்னும் மேம்படுத்த வேண்டும். இவை அனைத்தும் நமக்கான பாடங்கள். அதனை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அண்ணாமலை சொல்லியிருக்கிறார்.
அவர் நெனச்சதைச் செய்வாரா அல்லது பாஜக மேலிடம் சொல்றத மட்டும் செய்வாராங்கிறது போகப் போகத் தெரிந்து விடும்.