எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு ! என்ன காரணம்!?
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கரின் வீடு மட்டும் அலுவலகங்களில் தீவிரமான ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உள்ள நிலையில், முதல் ஆளாக எம். ஆர் விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்று விவரம் வெளியாகி உள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளதாகச் சொல்றாங்க. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு, ஒப்பந்தங்களுக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.
அதில் முதல் நபராக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. மொத்தம் 33 இடங்களில் இந்த ரெய்டு நடந்தது. கரூரில் உள்ள இவரின் வீடு, அலுவலகம், இவருக்கு சொந்தமான இடங்கள், சென்னையில் இருக்கும் இன்னொரு வீடு, அலுவலகம் என்று பல இடங்களில் சோதனை நடந்து வந்தது. சென்னையில் எம். ஆர் விஜயபாஸ்கர் நிறுத்தி வைத்து இருந்த பல்வேறு கார்களிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். அதோடு எம்.ஆர் விஜயபாஸ்கர் அதிக சொத்து குவித்ததாக முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணைக்கு முகாந்திரம் இருப்பதால் தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முன்னாள் அமைச்சர்களுக்கு மத்தியில் முதல் ஆளாக எம். ஆர் விஜயபாஸ்கரை விஜிலென்ஸ் வளைக்க 3 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. முதல் விஷயம், இவருக்கு எதிராக அதிக அளவிலான ஆதாரங்களை விஜிலென்ஸ் ஏற்கனவே திரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இவர் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் ஏற்கனவே விஜிலென்ஸ் அமைப்பிடம் சிக்கி உள்ளதால், அதன் அடிப்படையிலேயே அதிகாலை சர்ப்ரைஸாக அதிகாரிகள் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். முக்கியமாக இவருக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அதன் மூலம் ரெய்டும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதெல்லாம் போக இன்னொரு மேற்கு மண்டல அதிமுக புள்ளிக்கு செக் வைக்கும் விதமாகவே இவரிடம் முதலில் ரெய்டு நடத்தி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு மண்டலத்தில் இருக்கும் வேறு ஒரு புள்ளிக்கும் எம். ஆர். விக்கும் இடையில் நிறைய தொடர்புகள் உள்ளன. இவரை தூக்கினால் அவரையும் தூக்கலாம், அந்த புள்ளிக்கு எதிராகவும் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும். எம். ஆர். விஜயபாஸ்கர் மூலம் அந்த அதிமுக புள்ளியை வளைக்கலாம் என்பதால் முதலில் இவரிடம் இருந்து விஜிலென்ஸ் விசாரணையை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதெல்லாம் போக மேற்கு மண்டல அரசியலை மையப்படுத்தியே இந்த ரெய்டு தொடங்கி உள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் மேற்கு மண்டல புள்ளிகளை மொத்தமாக அடக்கும் விதமாக ரெய்டு நடத்தப்பட்டு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிகின்றன. மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.எம். ஆர். விஜயபாஸ்கர் வெறும் தொடக்கம்தான், இன்னும் 10க்கும் அதிகமான மேற்கு மண்டல அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் விசாரணை வளையத்தில் விரைவில் சிக்குவார்கள் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரெய்டுக்கு இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் கண்டனம் தெரிவிச்சிருக்காங்க.என்ன சொன்னாங்கன்னா தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று என்றும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திராணியில்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற தி.மு.க. அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. திமுக அரசின் நடவடிக்கை.. ‘அபாயகரமான சூழ்நிலை’அரசியல் ரீதியில் உருவாகும்னு..ஓ பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்தார். ஸ்டாலின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப் பெற்ற இயக்கம் என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர். காழ்ப்புணர்ச்சியோடு காவல்துறை மூலம் முன்னாள் அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க. அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். சட்ட ரீதியாக சந்திப்போம் மேலுர், முன்னாள் M.R. விஜயபாஸ்கர் அவர்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு. ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும் தொண்டர்களின் நுணையோடு இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த ரெய்டுக்கு நடத்தத் தேவையான ஆதாரங்கள் கெடைச்சிருக்காம். கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் 8 நிறுவனங்களிடம் இருந்து ஜி.பி.எஸ் கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஜி.பி.எஸ் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடையும் விதித்தது. இந்த விவகாரத்தில் தி.மு.க தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டநிலையில், இந்த ரெய்டு நடந்துள்ளது. என்னென்ன பறிமுதல் செய்யப்பட்டதுன்னு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆதரவாளர்கள் முற்றுகை இதனிடையே சோதனை நடத்தி விட்டு இரவு தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் வாகனத்தை வழிமறித்து விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதிகாரிகளின் வாகனங்கள் முற்றுகையிடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் தலையிட்டு அவர்களை கலைத்து விரட்டியடித்தனர்