திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எந்தவிதமான விமர்சனங்களையும் வைக்கல…! அதற்கு காரணம், திமுக அரசின் செயல்பாடுகள்தான்.. !
வழக்கமா ஆளும் தரப்பு மீது விமர்சனங்களும், எதிர்ப்புகளும், குறைகளும் தற்போதைய நெருக்கடியான சூழலில்,நிறையவே வர ஆரம்பிக்கும். ஆனால், அதிமுக தரப்பே வாய்விட்டு, திமுக அரசை பாராட்டி வர்றாங்க …! கொரோனா தடுப்பு செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே நான்கைந்து அமைச்சர்கள் ஸ்டாலினை வெளிப்படையாகவே பாராட்டிவிட்டார்கள். இந்நிலைல, ஓபிஎஸ்ஸும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
2 நாளைக்கு முன்னாடி ஓபிஎஸ் ஒரு அறிக்கை விட்டிருந்தார்.. அதில், “கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக வேறு நபர்களை பணியமர்த்த வேண்டுமென சென்னை மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதாக வந்த செய்தியை நான் கண்டித்ததோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கணும்னு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டிருந்தேன். இதனையறிந்த முதலமைச்சர், “தற்போது பணிபுரியும் களப்பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்” என்ற உத்தரவாதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் மூலமாக எனக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். இதற்காக, முதலமைச்சருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இப்போது இன்னொரு முறை, முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி சொல்லி உள்ளார்.. தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் ஆபீசில் கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசும்போது : “கடந்த வருடம் மார்ச் மாதம் தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கியது. அதிமுக அம்மாவின் அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கையால் பாதிப்பு குறைந்தது. இப்போது இந்த வைரஸ் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது… அதையும் ஆட்சியில் இருக்கும் அரசு சவாலாக எடுத்து, பாதிப்பைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பொதுமக்கள் இது தேசிய பேரிடர், அரசுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது என்று நமது கடமை, பொறுப்பை தட்டிக் கழிக்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம் என்றால் முழுமையாக இந்த வைரஸை நாட்டில் இருந்து அகற்ற முடியும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேனி மாவட்டத்திலிருந்து லாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிவரும் டிரைவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உடனடியாக டெஸ்ட் நடத்த வேண்டும். தேனியில் இருந்து கேரளாவுக்குத் தினமும் செல்லும் 5 ஆயிரம் விவசாயிகளுக்கும் டெஸ்ட் செய்யப்பட வேண்டும்.. கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்படுகிறது. கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையை இழக்கும் சூழல் உள்ளதால் அரசு கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்… கொரோனா பாதிப்பை தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்” என்றார்.
ஓபிஎஸ்ஸின் இந்த அடுத்தடுத்து பாராட்டு பலரையும் கவனிக்க வைத்து வருகிறது.. ஊழல் புள்ளிகள் மீதான புகார்களை தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லி வரும் நிலையில், பல அமைச்சர்கள், திமுக தரப்பில் மறைமுகமான சமாதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில் ஓபிஎஸ் திமுக அரசை தொடர்ந்து பாராட்டி வருவது, சமாதான நடவடிக்கையா? அல்லது அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை..
இன்னும் சில அதிமுக மாஜி அமைச்சர்கள் இந்த 2 மாதங்களாகவே எடுத்து வந்த சமாதான முயற்சிகள் எல்லாமே சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது.. ஊழல் புகார் குறித்த விசாரணையை திமுக துரிதப்படுத்தி உள்ளதாம்.. இதனால் அதிமுக கூடாரமே கதிகலங்கி போயுள்ளதாகவும், மீண்டும் திமுக தலைமையை சரிக்கட்டும் முயற்சிகள் நடந்து வர்றதா சொல்றாங்க…! முக ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரங்களில், மறக்காமல் சொன்ன ஒரு விஷயம், திமுக ஆட்சிக்கு வந்தால், ஊழல் பண்ணுன அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் மறுபடியும் தூசி தட்டி விசாரிக்கப்படும், அப்படி புகார்கள் உண்மை என நிரூபணமாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல், ஊழலுக்கு துணை புரிந்த அத்தனை அரசு உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். திமுக அரியணை ஏற துவங்கும் முன்னாடியே, அதிமுகவின் முக்கிய புள்ளி, புதுக்கோட்டையில் இருந்து தூது அனுப்பினாராம்…. சில சமாதான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாராம்.. இவருக்கு பிறகு, நான்கைந்து அமைச்சர்கள், திடீரென திமுக அரசின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே புகழ்ந்து பேச தொடங்கிவிட்டனர்.. இதுவும் ஒருவகையில் சமாதான முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், திமுக தலைமை எதையும் கண்டுகொள்ளவில்லைஇப்போது தொற்று பணிகளில் முழு கவனத்தை செலுத்தி வந்தாலும், ஊழல் இல்லாத சிறந்த ஆட்சி என்பதை நிரூபிக்க, இதுபோன்ற அதிரடிகளையும் கையில் எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.. அதற்காகத்தான், ‘நேர்மையான’ ஐஏஎஸ் அதிகாரிகளை தன்னை சுற்றிலும் வைத்திருக்கிறார்.. இப்போது, ஊழல் பட்டியல் குறித்து அதிகாரிகள் சத்தமில்லாமல் விசாரணையைத் தொடங்கி விட்டார்களாம்.. இருந்தாலும் கீழ் மட்டத்தில் மேலும் சில அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டியதிருக்குது… அதற்கு பிறகுதான் விசாரணை வேகம் எடுக்குமாம். அது மட்டுமல்லாமல், தொற்று வேகம் எடுத்து வரும்நிலையில், திமுக அரசு அதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.. அதனால்தான், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்டு வருகிறார்.. எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வீட்டில் தங்க அனுமதி, விஜயபாஸ்கருக்கு டீமில் பொறுப்பு, என அரசியல் நாகரீகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் தன்னுடைய “ஊழலற்ற அரசு” என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிந்துதான், மேலும் சில மாஜி அமைச்சர்கள் திமுக தலைமையை சமாதானப்படுத்த வெள்ளை கொடியுடன் காய் நகர்த்தி வருகிறார்களாம்.. இந்த 2 மாசமாக, எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளும் சொதப்பலாயிடுச்சின்னு நொந்து போயிருக்காங்களாம்..!
இப்போ பழைய நண்பர்களான அதிமுகவில் இருந்து சென்ற செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், ராஜகண்ணப்பன், சேகர் பாபு போன்றவர்கள் மூலம் சமாதானமும் பேசி வருகிறார்களாம்… இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம்,. நயினார் நாகேந்திரன் ஒரு லிஸ்ட் எடுத்து வருகிறாராம்.. இவரும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்றவர் என்பதால், ஊழல் மாஜிக்கள் யார் என்ற விவரங்களை எடுத்துள்ளாராம்.. எப்படியும், திமுக அரசு மாஜிக்கள் மீதான நடவடிக்கையை கிண்ட ஆரம்பித்தால், இவர்கள் பாஜகவின் உதவியைதான் நாடுவார்கள்.. அதை வைத்து, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியையும் பாஜக மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுது..! . இப்போதைக்கு தொற்று பிரச்சனையே தலையாக உள்ளதால், அதில் முழு கவனத்தை திமுக செலுத்தி வருகிறது.. இருந்தாலும், மாஜிக்கள் மீதான புகார்கள் துரிதமாவதும், இந்த விஷயம் தெரிந்து மாஜிக்கள் திமுகவை சமாதான படுத்த முயல்வதும் கொரோனா களத்தை விட அரசியல் களமே பிஸியாக இருந்து வருது.
திமுக தரப்பில் இருந்து புதிசா புகார்கள்லாம் கொடுக்கணும்னு அவசியமேயில்லை..ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் தான் இருக்கு.. அவர் உள்பட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருக்குமே சிக்கல்தான்.. அதற்காகத்தான் குஜராத்தில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவையே கைது செய்த கந்தசாமி ஐபிஎஸ் ஐ ஊழல் தடுப்புத் துறைக்கு இயக்குனரா போட்டிருக்கிறார்.இது இன்னும் அதிகமான கலக்கத்தை ஏற்படுத்தியிருக்காம்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி என ஒட்டுமொத்த முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெறும்னு சொல்றாங்க.எப்படியும் ஆறு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளாகவோ இந்த ஊழல் வழக்குகளில் தீர்ப்பு சொல்லப்பட்டு விடும்.
ஊழல் முறைகேடுகளுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் தண்டனையே கிடைக்கும். அப்படிபட்ட தீர்ப்புகள் வந்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழப்பார். அவரைப் போல அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ. பதவிகளையும் இழப்பார்கள். ஆறு வருஷத்துக்கு தேர்தலிலேயே நிற்கவே முடியாது.வடிவேலு சொன்ன மாதிரி இப்பவே கண்ணைக் கட்டுதே ..! ஆனா கடந்த கால வரலாறப் பாத்தோம்னா திமுக அரசு போட்ட வழக்குகள்ல அதிமுக அமைச்சர்கள் தண்டனை அடைஞ்சிருக்காங்க ! ஆனா அதிமுக அரசு போட்ட வழக்குகள்லேருந்து பெரும்பாலான திமுக முன்னாள் மந்திரிகள் விடுதலையாயிட்டாங்க.சொன்னதைச் செய்வாரா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !