சபாஷ் சபரீசன் வந்த கதை, வளர்ந்த கதை?

ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனின் சென்னை நீலாங்கரை வீட்டில் வருமானவரி துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். யார் இந்த சபரீசன்?
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் அரியநாயகிபுரத்தில் ஒரு ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்தான் சபரீசன். சபரீசன் தந்தை தினமும் சைக்கிளில் மதிய உணவை கட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்று வரும் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
எப்படியோ, ஸ்டாலின் மகளின் பின்னால் சுற்றி காதலித்து விரும்பி திருமணம் செய்துகொண்டார். சபரீசனும், ரஜினி கட்சியிலிருந்த அர்ஜுனமூர்த்தி மருமகனும் குடும்ப சொந்தங்கள். ஸ்டாலின் மகள் செந்தாமரையும், அர்ஜுனமூர்த்தி மகளும் தோழிகள் மட்டுமல்ல அவர்களுக்கு இடையே குடும்ப உறவும் உண்டு. இந்த நிலையில் சபரீசனும் அர்ஜுனமூர்த்தி மருமகனாக இருந்த இருவரும் சொந்தக்காரர்கள் எப்படியோ இந்த இருவரும் திட்டமிட்டு ஸ்டாலின் மகளையும், அர்ஜுனமூர்த்தி மகளையும் முறையே தனித்தனியாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் அர்ஜுனமூர்த்தி மகள் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.
சரி, விசயதிற்கு வருவோம், ரோடு, மர நிழலில் நின்று ஸ்டாலின் புதல்வியின் பின்னால் சுற்றி தன் விருப்பப்படி சபரீசன் ஸ்டாலினுக்கு மருமகன் ஆகிவிட்டார். ஆனால், சபரீசனுக்கு இந்த திருமணத்தை விட ஸ்டாலின் மருமகன் ஆகி பணம் சம்பாதிக்கவேண்டும், தனக்கான முக்கியத்துவம் வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் பெரும் முயற்சி யில் இந்த திருமணத்தை சபரீசன் சாதித்து கொண்டார்.
2004 வரை சபரீசன் சொத்து கணக்கு என்ன? இன்றைக்கு இவ்வளவு சொத்துக்கள் மாடமாளிகைகள் எப்படி வந்தது.? கட்சிகாரர்களின் வயிற்றில் அடித்து பெற்ற பணம் ஊழல் பணம் என்பதை விசாரித்தால் நிச்சயமாக உண்மைகள் வெளிப்படும்.
இந்த சபரீசனுக்கு எதிலும் தகிடுதத்தங்கள் செய்வது, திமிர், பிடிவாதம் என்பது சபரீசனுடைய பழக்கங்கள்.
கடந்த 2009 – 2010 திமுக ஆட்சிக் காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியான மருந்துகளை தமிழக அரசு வாங்கியதில் சபரீசனை ஏன் சரியாக விசாரிக்கவிலை என்று இன்று வரை தெரியவில்லை. கடந்த 2006 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வைகோ வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டங்களும், சபரீசன் கிண்டலடித்து, பட்டாசு வெடித்ததும் உண்டு. இப்போது சபரீசன் தயவில் வைகோ வாழவேண்டியுள்ளது.
அதை விட்டுவிடுங்கள், பெரிய புரட்சிவாதி, சுயமரியாதை என்று சொல்லும் தொல். திருமாவளவன் ஏன் தன் வேட்பாளர்களுடன் சபரீசனை சந்தித்து ரகசியமாக வாழ்த்துக்கள் பெறவேண்டும்.? சபரீசன் யார்? இதற்கு? இதுதான் உங்களுடைய புரட்சியே இதுதானா? சுயமரியாதை திருமாவளவன் அவர்களே?
யார் இந்த சபரீசன் அறிஞர் அண்ணா காலத்து ஆளா, கலைஞர் தோல்வி முகம் கண்டபோதெல்லாம் உடன் இருந்தவரா சபரீசன்..? இன்றைக்கு திமுக வேட்பாளர்களை அவர் தான் முடிவு செய்வார். திமுக கஜானா சபரீசன் கையில் தான் உள்ளது. சபரீசனிடம் பெட்டிப்பாம்பாக இருப்பவர் ஸ்டாலின். இது பலருக்கும் ஏன் என்று புரியவில்லை. கலைஞர் இருந்தவரை எளிமையாக இருந்தார். அவசரமாக வெளியூர் செல்லவேண்டும் என்றால் காரிலோ அல்லது தொடர்வண்டியில் அவர் செல்வது தான் வழக்கம். தனி விமானத்தில் செல்ல கலைஞர் விரும்பமாட்டார். ஆனால், இப்போது சபரீசன் ஸ்டாலினுக்கு தனி விமானத்தில் சென்றால் தான் பந்தா என்று நினைக்கிறார். ஸ்டாலினும் அதை ஏற்றுக்கொண்டு வானத்தில் பறக்கின்றார்.
சபரீசன் செய்த கூத்துகள், சட்டமீறல்கள் குறித்து வருமானவரி துறை இன்னும் நடவடிக்கை எடுத்து புலனாய்வு செய்யவேண்டும். 2006 திமுக ஆட்சியில் சித்து விளையாட்டு காட்டியவர்தான் சபரீசன்.  நேற்று வரை வீரவசனம் பேசிய வைகோ, இன்று சபரீசனுக்கு  மரியாதைக் கொடுகின்றார்.
அண்ணா துவங்கிய கட்சி இன்று இந்த மாதிரி வல்லூறுகளின் கையில் மாட்டிக்கொண்டது. அண்ணாவின் மகன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த துக்கத்திற்கு கூட அண்ணா வீட்டிற்கு கலைஞர் குடும்பம் செல்லவில்லை. கலைஞர் காலத்து ஆட்களை முற்றிலும் புறக்கணித்து சபரீசன் பரிவாரம் தான் இன்றைக்கு திமுகவில் பிரதானம் மட்டுமல்ல முடிவு எடுத்து ஸ்டாலினை கட்டுபடுத்துகின்ற மருமகன், மனைவி என்ற கிச்சன் கேபினெட் ஆகிவிட்டது. ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும் சபரிசனுக்கு உரசல் என்று அரசல்புரசலாக செய்திகள் வருகின்றது. கிச்சன் கேபினெட்டிலும் துர்க்கா ஸ்டாலினும் சபரீசன் மகுடிக்கு உள்ளடக்கம்.
கூத்தாடும் இந்த சபரீசன் கும்பல் நாளை ஆட்சிக்கு வந்தால் குடும்ப ஆதிக்கமாக தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாதபோது எங்கெல்லாம் நிலங்கள் இருக்கின்றதோ அதை எப்படி அபகரிப்பது, புது சாராய ஆலை திறப்பது என்று திட்டமிட்டு வருகின்றார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அமைச்சர் பட்டியல் அரசு உயர் அதிகாரிகள் பட்டியல், தயாரித்து சபரீசன் தன் பாக்கெட்டில் வைத்து கொண்டுள்ளார்.
எப்படியாவது ஸ்டாலினை ஆட்சியில் அமைத்து தன் குடும்பங்களை வளப்படுத்திக்கொள்ள சுயநலத்துக்காக பணிகளை செய்கின்றார்.
இன்னொரு பக்கம் கனிமொழி, ஏதோ பெரிய சிந்தனையாளர் போல பேச்சு வழக்குகள், பெரியார் என்ன அபத்தங்கள் எல்லாம் செய்தார் என்று புரியாமல் சிந்தனைவாதி போல் பேசுகிறார். தேவையில்லாமல் திருப்பதி கோவிலைப் பற்றியும், சபரி மலை கோவிலைப் பற்றியும் பேசவேண்டிய அவசியம் கனிமொழிக்கு இல்லையே?
மக்களே சிந்தியுங்கள் கலைஞர் விதைத்த விதைகள் வீரியமான விஷங்கள்.
மு.க.ஸ்டாலினிடம் ஒன்றுமே இல்லை மருமகன் இயக்கினால் இயங்குவார். இன்றைக்கு திமுக வேட்பாளர்கள் முதலில் சால்வை ஸ்டாலினுக்கு அணிவிப்பது இல்லை. சபரீசனுக்கு சால்வை அணிவித்து முதல் மரியாதை செய்திவிட்டுதான் ஸ்டாலினைப் பார்க்கிறார்கள். இந்த கூத்தை எங்கே போய் சொல்ல?
ஆலந்தூர் ஆர்.எஸ்பாரதி சபரீசன் ஆள், அவரை ராஜசபா உறுப்பினர் ஆக்கினார். இன்றைக்கு அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி காட்டில் தான் மழை, சபரீசன் தயவில் அதே போல் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம். என்.ஆர்.இளங்கோ, வில்சன் போன்றவர்கள் எல்லம் சபரீசன் கண் அசைவில் உள்ளனர்.
இன்றைக்கு வருமானவரி துறையை எதிர்த்து திமுக கூப்பாடு போடுகின்றது. சரி ஆனால், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அண்ணா அறிவாலயத்தின் காங்கிரஸ் கலைஞரோடு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரத்தில், தள்ளாத வயதில் ஸ்டாலினுடைய தாயார் தயாளு அம்மாளை அறிவாலயம் முதல் மாடியில் இருக்கும் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இரண்டு மணிநேரம் அரசு அதிகாரிகள் விசாரித்தனரே அன்றைக்கு இம்மாதிரி கூப்பாடு போடவில்லையே. பாவம் வயதான தயாளு அம்மாவை சிரமப்படுத்தும்போது கூப்பாடு போடாமல் எங்கோ இருந்து வந்த சபரீசனுக்காக இப்படி கூப்பாடும் போராட்டமும் வேடிக்கையாக இருக்கின்றது. தயாளு அம்மாவைவிட உயர்ந்தவரா எங்கோ இருந்து வந்து சபரீசன். ஸ்டாலினுக்கு இதெல்லாம் உரைக்குமா? பெற்றத்தாயைவிட மருமகன் மேலா?
சரி சபரீசன் இப்போது இருக்கும் நீலங்கரை வீட்டில் இன்றைக்கு சோதனை நடக்கின்றது. இந்த வீடு எப்படி கட்டபட்டது. கடற்கரை ஓரத்தில் வித்தியாசமாக பிரம்மாண்டமாக பெரிய பரப்பளவில் கட்டப்பட்டதற்கு எவ்வளவு கோடிகள் செலவானது?
சபரீசனுக்கு பல வீடுகள் ஸ்டாலின் வாங்கி கொடுத்தும் எந்த வீட்டிலும் நிரந்தரமாக இருந்தது இல்லை. சென்னை செட்டிநாடு அரண்மனை பக்கம் ஸ்டாலின் சபரீசன் திருமணம் ஆனவுடன் ஒரு வீடு வாங்கிக்கொடுத்தார். அந்த வீட்டை கட்சிக்காரர்கள் செலவு செய்து சீர்படுத்தினார்கள். கட்சிக்காரர்களின் வயிற்றில் அடித்து அழகு படுத்தி வீட்டைவிட்டு வெளியேறி பிரச்சினைக்குரிய ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் தாஸ் சாலை ஸ்டாலின் வீட்டு பின்பக்கம் சபரீசனுக்கு வசதியாக வீடு கட்டிக்கொடுத்தார் அதிலும் சில மாதங்கள் இருந்துவிட்டு, இப்போது இருக்கின்ற நீலங்கரை வீட்டில் குடும்பத்தோடு சபரீசன் வசிக்கின்கிறார்.
அரியநாயகிபுரத்தில் சபரீசன் பிறந்த வீடு எப்படி இருந்தது? இன்றைக்கு நீலாங்கரை வீடு எப்படி பிரம்மாண்டமாக கட்ட யார் பணம் கொடுத்தார்கள்? இதற்கு கட்சிக்காரர்களின் வயிற்றில் அடித்த வாங்கிய பணம் எவ்வளவு. இதில் எவ்வளவு ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டது. என்பதை வருமானவரி துறை விசாரிக்கவேண்டும்.
இவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் எப்படியிருக்கும். சபரீசனின் வீரிய விஷப் புத்தியில் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான அரசியலும் நல்ல ஆட்சியும் எப்படி கிடைக்கும். ஸ்டாலின் வெறும் காலி பெருங்காய டப்பா. எதிர்காலத்தில் ஸ்டாலின் முடிவு நிச்சயமாக ஸ்டாலினுக்கு முடிவு எப்படியிருக்கும் என்றால்; ஆந்திராவில் என்.டி.ராமராவ் ஆட்சி எப்படி மருமகனால் கவிழ்க்கப்பட்டதோ, ஆளுமையான என்.டி.ராமராவ் இறுதிநாட்களில் எப்படி ஆனாரோ என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதான் இங்கு நடக்கலாம். இது எல்லாம் ஸ்டாலினுக்கு புரியாது.
#சபரீசா
அண்ணா நிறுவிய திமுக, அதை பாதுகாத்த கலைஞர், எங்கோ இருந்து, எந்த தகுதியும் இல்லாமல் ஸ்டாலின் மருமனாக வந்த சபரீசன் அவர்களே எத்தனைப்பேரை திமுகவின் முக்கியப்புள்ளிகளை உங்கள் மாமன் தயவில் ஒழித்தீர்கள். உங்களுக்கு அந்த திறமைகள் இல்லாத கயமதன்மையோடு நீங்கள் எத்தனை பேருடைய விசயத்தில் தலையீட்டீர்கள் என்று மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.அண்ணா அறிவாலயத்தில் உங்கள் கட்டளைகள் செயலுக்கு வருகின்றன. எந்த தகுதியும் இல்லாத உங்கள் காலில் விழுந்தால் தான் திமுகவில் இருக்கமுடியும் என்ற நிலைமை.
1. தலைவர் கலைஞரின் மூத்த மகன் அஞ்சாநெஞ்சன் மு.க.அழகிரி-க்கும் உன் மாமனாருக்கும் இடையே பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டீர்கள். கலைஞரே தன் பிள்ளை இல்லை என்று அழகிரியை ஒதுக்கி வைக்க காரணம் நீங்கள் தானே.
2. கே.பி.ராமலிங்கம்
3. பெரம்பூர் மறைந்த செங்கை சிவம்,
4. திருவண்ணாமலை சிவாநந்தம்,
5. வேலூர் முகமது சகி,
6. உன்னுடைய மாமனாரின் நிழலாக இருந்த சுகவனம்,
7. சேலம் வீரபாண்டியார் குடும்பம்
8. நாமக்கல் காந்திச்செல்வன்
9. பொங்கலூர் பழனிசாமி,
10. திமுகவில் இருந்து விலகி கரூர் முன்னாள் அமைச்சர் சின்னசாமி,
11. தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.
12. ராமநாதபுரம் பவானி ராஜேந்திரன்,
13. பொன்முத்துராமலிங்கம்,
14. கம்பம் செல்வேந்திரன்,
15. ராஜபாளையம் வி.பி.ராஜன்,
16. வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,
17. சங்கரன்கோவில் எஸ்.தங்கவேலு.
18. கட்சியைவிட்டு போன திருநெல்வேலி வி.கருப்பசாமி பாண்டியன்,
19. கன்னியாகுமரியில் கட்சியை விட்டு நாகர்கோவில் ராஜன்,
என இப்படி நீண்ட பட்டியல் உண்டு. இப்படி உன்னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.
உங்கள் காலை பிடித்து இருக்கின்ற
1. ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி,
2. ஏ.வ.வேலு,
3. மதுரை பி.டி.ஆர்.தியாகராஜன்,
4. வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம்,
5. என்.ஆர்.இளங்கோ,
6. வில்சன்,
7. சேகர் பாபு,
8. சுதர்சனம்,
9. தாமோ.அன்பரசன்,
10. அண்ணாநகர் மோகன் குடும்பம்
என்ற நீண்ட மனிதர் பட்டியல் உண்டு.