வடசென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷின் துரோகத்தப் பத்தி தான் வட சென்னைல ஒரே பேச்சா இருக்குது. கட்சிக்கு சசிகலா தலைமை என்றாலும் சரி தினகரன் தலைமை ஏற்றாலும் சரி ஏற்றுக்கொள்வோம் என ஆதரவாளர்களிடம் சொல்லிகிட்டு கட்சியை ஒரு புறம் திமுகவுக்கு விற்று விட்டாருங்கிறாங்க. மறுபுறம் ஓபிஎஸ் உடன் கள்ள உறவு வச்சிட்டு வெளியில் சொல்றது எடப்பாடி ஆதரவு அதிமுகவின் அடிமட்ட தொண்டனின் ஆதங்கம்இது தான்.

2012 இல் அவைத்தலைவராக இருந்த மதுசூதனனுக்கு ஓட்டுனராக வந்தவர் தான் ஆர் எஸ் ராஜேஷ். வந்த மறு வருடமே வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது

எப்போதுமே திமுகவினருடன் கள்ள உறவு வைத்திருக்கும் ராஜேஷ் அம்மா மறைவுக்கு பிறகு கட்சியை கூறு போட நினைத்த ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சென்றவர் தான் ராஜேஷ் அதன் பிறகு கட்சி இணைப்பு வந்தவுடன் வடசென்னை வடக்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பெரம்பூர் மற்றும் ஆர் கே நகர் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளராக ஆர் எஸ் ராஜேஷ் பதவி கொடுக்கப்பட்டது அதன்பிறகு இந்த ரெண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வட்ட செயலாளர்கள் முதல் அனைத்து பொறுப்புகளுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்றுக் கொண்டே தகுதியற்ற நபர்களுக்கு பதவி கொடுத்துள்ளார் ஆர் எஸ் ராஜேஷ் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது கட்சி கொடுத்த கோடிக்கணக்கான ரூபாயையும் செலவு செய்யாமல் ஆட்டையை போட்டு உள்ளார் இதனால் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்க கூட முடியாத நிலை ஏற்பட்டது

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்ட ஆர் எஸ் ராஜேஷ் அங்கேயும் வெற்றி பெற முடியவில்லை காரணம் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அடுக்குமாரி குடியிருப்பு வாசிகளை மிரட்டி பல லட்ச ரூபாய் பணம் வாங்கியதால் அங்குள்ள குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒண்ணு சேர்ந்து ராஜேஷுக்கு ஓட்டு போடக்கூடாதுன்னு தீர்மானம் நிறைவேற்றி தோற்கடிச்சாங்க.

பெரம்பூர் மற்றும் ஆர் கே நகர் தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் முழுவதும் வரும் கட்டிங் வாங்கும் திமுகவினர் மாதா மாதம் ராஜேஷுக்கும் கப்பம் கட்டுகிறார்கள் இது ஒரு புறம் பெரம்பூர் மற்றும் ஆர் கே நகர் பகுதியில் உள்ள ஒரு நம்பர் லாட்டரி சூதாட்டத்திலும் லட்சக்கணக்கான ரூபாய் ராஜேஷுக்கும் போகுது அந்த மாவட்டத்தில் அதிமுக இருக்குதா இல்லையாங்கிற நிலை தான் இப்போது இருக்குது

உள்ளாட்சித் தேர்தலப்போ தகுதி இல்லாத நபர்களிடம் 25 லட்ச ரூபாய் வாங்கிகிட்டு சீட்டு வழங்குனதுல வெற்றி பெறக்கூடிய தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்த வரலாறு ராஜேஷால் தான் அதிமுகவிற்கு கிடைத்திருக்கிறது தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது அதுமட்டுமில்லாமல் ஆர் கே நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பரிந்துரைத்த முன்னாள் மண்டல குழு தலைவர் கார்த்திக்குக்கு உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு வழங்காமல் திமுக அமைச்சர் சேகர்பாபு பரிந்துரைத்த ஆட்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுச்சு

திமுக பொதுக் கூட்டத்தில் அதிமுகவையும் ராஜேஷ் குடும்பம் வரை இழுத்து கேவலமாக பேசியும் இதுவரை திமுக எதிராக ஒரு பொதுக்கூட்டம் கூட மாவட்ட செயலாளரான ராஜேஷால் நடத்தலை.திமுக ஆட்சியாக இருந்தாலும் கூட்டுறவுத்துறை சேர்மனாக ராஜேஸ்தான் இன்றளவும் இருக்கிறாரு. டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்ட் அமைச்சர் சேகர்பாபு மூலம் ராஜேஷுக்கு வழங்கப்பட்டு வருது.

வடசென்னை முழுவதும் சேகர்பாபு ஆதரவுடன் அதிமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுகவுக்கு அனுப்பும் வேலையை மறைமுகமாக ராஜேஷ் செய்து கிட்டிருக்கிறாருங்கிறது வடசென்னை அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளின் குமுறலாக இருக்குது
வடசென்னை என்றாலே அதிமுகவிற்கு மகளிரணி தான் மிகப்பெரிய படை பலமாக இருந்தது ஆனால் தற்போது மகளிரே இல்லாத அதிமுகவாக மாறிவருது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துரோகம் செய்த பன்னீர் செல்வம் மனைவியின் 1 ஆம் ஆண்டு நினைவு தினத்துல பன்னீர்செல்வம் ஆதரவு கிருஷ்ணமூர்த்தி செல்போனில் ஆர் எஸ் ராஜேஷ் பன்னீர்செல்வத்திடம் ஆறுதல் கூறியிருக்கிறார் ஆரம்பத்திலிருந்து பன்னீர்செல்வத்தின் ஆதரவுளாக இருந்து வரும் ஆர் எஸ் ராஜேஷ் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டு கட்சியையும் கட்சியின் தலைமையையும் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார் என்பது தான் உண்மை

கூட்டுறவு சங்க சேர்மன் ஆக இருக்கும் ராஜேஷ் இவரது ஆதரவாளர் ஒருவருக்கு காவல்துறையில் பிரச்சினை ஏற்பட்டதால் நள்ளிரவு ஒரு மணிக்கு சேகர்பாபு வீட்டுக்கு சென்று அவருக்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவுமாறு அதிமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் வீட்டுக்கு சென்றது அதிமுக வரலாற்றிலே இது போன்ற சம்பவம் நிகழவில்லை என்பது தொண்டனின் குற்றச்சாட்டு

ஆர் கே நகர் பெரம்பூரில் எந்த சட்டவிரோத நிகழ்வு நடந்தாலும் அதற்கு திமுக சார்பில் ராஜேஷுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியமாக இருக்கிறது இதையெல்லாம் அறியாத அதிமுக தலைமை இன்னும் ஏன் அவரை மாவட்ட செயலாளராக வைத்துக் கொண்டு இருப்பதுதான் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கேள்வியாக இருக்கிறது.